பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் - தோரோ.
* அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் - நிக்கோபானி.
* ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது - சிம்மன்ஸ்.
* மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது - வில்லியம்டே.
* இதயம் ரோஜா மலராக இருக்கும் போது நினைவும் நறுமணமாகத்தான் இருக்கும் - மெஹர்பாபா.
* இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் - கான்பூசியஸ்.
* பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான் - தாமஸ் கார்னல்.
* ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைïறுகளும், துன்பங்களுமே ஆகும் - மாத்ïஸ்.
****************
Thanks:http://www.dinasari.com/?p=393
ராமதாஸ் பதில்: ''தங்களுக்குள் பின்னப்பட்ட அரசியல் வலை களை அறுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்ததை மனமாரப் பாராட்டுகிறேன்! குறிப்பாக சென்னையில் நடைபெற்ற நடிகர் - நடிகைகள் கலந்து கொண்ட உண்ணாவிரதம் உணர்வுபூர்வமாக நடந்த ஒன்று. அதில் பல நடிகர்கள் ஆச்சர்யமாகவும், அழுத்தமாகவும் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்தார்கள். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதப் பந்தலில் ஆற்றிய உரை பாராட்டத்தக்கது. அவர் துணிச்சலைக் கண்டு வியந்தேன். அவருடைய பேச்சு, ஈழத் தமிழர்கள் பட்ட வலிகளுக்கு ஒத்தடம் இடுவதாக இருந்தது. மொத்தத்தில் ஈழத் தமிழர் பிரச்னையில் ரஜினி காட்டிய துணிச்சல் கலைஞரிடம் இல்லை...''
( நன்றி: ஜூவி )
முகவரியைத் தொலைத்தவர்கள்
–
அப்துல் ரகுமான்
*****************************************
மனிதனின் உண்மையான முகவரி எது?
பெயரில் அவன் இருக்கிறானா? இல்லை.
பெயரென்பது வெறும் சப்த அடையாளம்.
இடுகுறி.
எந்த மனிதனும் அவன் பெயருக்குள் இல்லை.
இந்த உலகம் கதவு எண்ணை முகவரியாகச்
சொல்லுகிறது.
மனிதன் கதவு எண்ணிலா இருக்கிறான்?
இல்லை.
கதவு எண் மனிதனின் முகவரி அல்ல.
இந்த உலகம் வசிக்கும் வீட்டை முகவரியாக சொல்கிறது.
வீடு மனிதனின் முகவர் அல்ல.வீடு
உடலுக்கு ஒரு சத்திரம்.அவ்வளவுதான்.
சிலர் முகவர்ச் சீட்டில் தங்கள் தொழிலைக்
குறிப்பிடுகிறார்கள்.
மனிதன் அவன் பார்க்கும் தொழிலிலா
இருக்கிறான்? இல்லை.
தொழில் என்பது வயிற்றுத் தீயைத்
தணிப்பதற்கான தண்ணீர், அவ்வளவுதான்.
தெருவோ, ஊரோ, நாமோ ஏன் உலகமோ
கூட மனிதனின் முகவரி இல்லை.
இவை மனிதனின் முகவரி என்றால் சில
நேரங்களில் அவன் இவற்றையெல்லாம்
விட்டு விட்டு வெளியேற நினைக்கிறானே ஏன்?
மனிதனின் முகவரி அவன் ஆன்மாவில்
இருக்கிறது.
வாழ்க்கை என்பது இந்த முகவரியைத்
தேடும் முயற்சிதான்.
ஆனால், வாழ்க்கை என்ற சந்தைக் கூட்டத்தில்
மனிதன் தன் முகவரியைத் தொலைத்துவிடுகிறான்.
மனிதனுடைய துயரம் இதுதான்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முகவரியையே
தேடி அலைய வேண்டியிருக்கிறது.
கவிஞர் ராஹி கூறுகிறார்:-
ராஹிக்கு என்ன ஆகிவிட்டது.
நண்பர்களே?
தயவு செய்து சொல்லுங்கள்
அவன் தன் தெருவிலேயே
தன் முகவரியை
விசாரித்துக் கொண்டிருக்கிறான்.
*****************************************
Posted by:
முத்துலெட்சுமி-கயல்விழி
Thnaks:http://sirumuyarchi.blogspot.com/2006/12/blog-post_21.html
கடவுள் இரண்டு வேளைகளில் சிரிக்கிறார். இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தை பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, "இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது" என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரிக்கிறார். "இந்தப் பிரபஞ்சமே என்னுடையது. இதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே!" என்று நினைத்துச் சிரிக்கிறார்.
கடவுள் மற்றும் ஒருமுறை சிரிக்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது. தாய் அழுது கொண்டிருக்கிறாள்; வைத்தியர் அவளிடம், "அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்தி விடுகிறேன்" என்று சொல்கிறார். அப்போதும் கடவுள் சிரித்துக் கொள்கிறார். குழந்தை இறக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால், யாராலும் அதைக் காக்க முடியாது என்பது வைத்தியருக்குத் தெரியவில்லை.
(ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், பக்கம்: 515-516)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக