செவ்வாய், 26 மே, 2009

2009-05-26

பசங்க-இந்த திரைப்படத்திற்கு அநேகமாக பெரிய விமர்சகர் என்று பதிவுலகில் கருதப்படுபவர்கள் அனைவரும் தங்கள் பாணியில் விமர்சனம் எழுதி மறந்திருப்பார்கள்..நான் விமர்சனம் செய்ய போவதில்லை..நான் பசங்க படத்தில் அனுபவித்த விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன்..ஏனென்றால்..விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் கதையை ஒரு வரி விடாமல் சொல்லி விடுகிறார்கள் இந்த பதிவுலகின் விமர்சகர்கள்..அதுவும் படத்தில் குறை இல்லாவிட்டாலும் , குறை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.விமர்சனம் செய்றாங்களாம்...சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன்..நான் இப்படத்தை காண முடிவு செய்து ,பின்னர் ஐ.பி.எல் போன்ற பல்வேறு தடைகளை தாண்டி..ஒரு வழியாக திரையரங்கம் போய் சேர்ந்தேன்..எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்...படம் ஆரம்பித்த சில நிமிடங்களில்..ஒரு விதமான சந்தோசம் நம்மை சூழ்ந்து கொள்கிறது.எத்தனை நாள் கழித்து...இப்படி ஒரு படம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..சிறுவர்கள் மூலமாக நமக்கு,நம் வாழ்க்கைக்கு ஒரு விதமான பாசிடிவ் எனேர்ஜியை வழங்குகிறார்கள்..அந்த அனுபவத்தை நீங்கள் அனுபவிக்க ஆசைப்பட்டால்...பசங்க பாருங்கள்..எதார்த்தம்..எதார்த்தம்னு..ரொம்ப பார்த்தாச்சு.எதார்த்தமே இல்லாமல்....அட உண்மையிலயே இது எதார்த்தமான படங்க..பசங்க..படம் பார்க்கும் அந்த இரண்டரை மணி நேரம், கிட்டத்தட்ட நானும்..என்னைபோல் மற்ற ரசிகர்களும்..குழந்தைகளாக மாறிப்போனோம்..இன்னும் அந்த மனநிலை மாறாமல் இருக்கிறேன்...அண்ணே பாண்டிராஜ்னே ..கலக்கிட்டீங்க..கை குடுங்க.பெரிய பெரிய பாராட்டெல்லாம்..பெரிய ஆளுங்க உங்களுக்கு சொல்வாங்க..நான் சராசரி தமிழ் சினிமா ரசிகன்..உங்களுக்கே தெரியும்..உண்மையில் பாராட்டுபவர்கள் எதுவும் சொல்லாமல் தான் பாராட்டுவார்கள்.மீண்டும் ஒரு முறை கை குடுங்க...அண்ணே சசிகுமார் மேல..நம்பிக்கை அதிகம் இருந்துச்சு..காப்பாத்திட்டீங்க ..குறிப்பா ஒளிப்பதிவாளர் பிரேம் குமார பாராட்டாம மனசு கேக்காது...அந்த மழை பாட்டுல உண்மயேலயே நனஞ்சேங்க..
சபாஷ்
..நண்பர்களே..உங்கள மாதிரி படைப்பாளிகள ஆதரிக்க நாங்க இருக்கோம்..
மண்ணையும் ,மனிதர்களையும்...பதிவு செய்யுங்கள்...தலகளையும்..தளபதிகளையும் உணர வையுங்கள்,

அன்பார்ந்த +2 மாணவர்களே..வாழ்வின் முக்கியமான கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்..தேர்வுக்கு தயாராகும் போது, பல இரவுகள் கண்விழித்து படிக்கும் போது,பரீட்சை எழுதும் போது கூட இல்லாத ஒரு விதமான பதட்டம் உங்களை தற்போது ஆட்டிவைக்கும்...நிம்மதியில்லாமல்,உறக்கமில்லாமல் தவிப்பீர்கள்...உங்கள் வாழ்வின் முடிவை தெரிந்து கொள்ள...பதட்டம் வேண்டாம்..பயம் வேண்டாம்..உங்களின் வெற்றி ஏற்கனவே நிர்ணயக்கப்பட்டு விட்டது...என்ன ..உங்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை .அவ்வளவு தான்...நெருங்கி விட்டது அந்த வெற்றி செய்தி...தற்போது கிடைத்த அண்மைசெய்தி..+2 தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே-8 ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளன..உங்களின் வசதிக்காக முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே லிங்க் வழங்கப்பட்டுள்ளது..

"வெற்றி நிச்சயம்.."

http://tnresults.nic.in/

http://results.nic.in/

http://dge3.tn.nic.in/

இன்று முதல் அக்கினி நட்சத்திர வெய்யில் ஆரம்பித்துவிட்டதாம்...ஆனால்..தமிழ் உணர்வாளர்களுக்கு என்றோ இது ஆரம்பித்துவிட்டது...அனல் கக்கும் இதயங்களோடு, இணையத்தில் வலம் வருவதை பதிவர்கள் அனைவரும் அறிவார்கள்..இத்தகைய சூழலில் சோனியா காந்தி அவர்கள் மே-6 ல் தமிழகம் வருகை...தீவுத்திடலில் நடக்க போகும் கூட்டத்தில் கலைஞர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேற போகிறார்..யாரோ சொன்னாங்க ..இவர் வருகைக்கும் ,செருப்பு வியாபாரம் ஜோராய் நடை பெறுவதற்கும் சம்பந்தம் இருக்கிறதாம்..புது செருப்பு வாங்கியா ,வீச போகிறார்கள் நம் மக்கள்..

இந்த அவமானத்தில் இருந்து தப்பிப்பது எப்படி..சோனியாவுக்கு சில டிப்ஸ்
1) கிரிக்கெட் மைதானத்தில் பொருட்களை கொண்டு எரியாமல் தடுக்க மிகப்பெரிய்ய வலையை அரங்கம் முழுவதும் கட்டியிருப்பார்கள்..அது போல் மேடைக்கு முன்னாள் கட்டி காக்கலாம் அன்னையை..

2) மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பின்னால் அமரலாம், செருப்படியை அவர்கள் சமாளித்து கொள்வார்கள்.

3) மைதானத்தில் இறங்காமலே , ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு உரையாற்றலாம்.

உங்களுக்கு ஏதாவது தோன்றினால்,பகிர்ந்து கொள்ளுங்கள் நம்மோடு...

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் ப.சிதம்பரம் அவர்கள் அந்த பகுதியில் தற்போது பிரசாரத்தில் ஈடு பட்டு வருகிறார்...இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ..திடீரென்று கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்று "இலங்கையில் போரை நிறுத்து...இலங்கை பிரச்சனைக்கு தீர்வு என்ன..தமிழர்களுக்கு பதில் சொல்" என்று முழக்கமிட்டார்...அத்தகைய குரலை கேட்டவுடன் கூட்டமே அவரை திரும்பி பார்த்தது..சில நிமிடங்கள் சிதம்பரம் அவர்கள் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்...மறுபடியும் திடீரென்று ஒரு மரக்கட்டையை அந்த இளைஞர் சிதம்பரத்தை நோக்கி வீசினார்..ஆனால் அது அவர் மீது பட வில்லை...இதை பார்த்த சிதம்பரம் அவர்களுக்கு பதற்றமாகவே இருந்தது..பின்னர் அந்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்..

கருத்துகள் இல்லை: