02.11.20008. களனிதிஸ்ஸவில் மொத்தம் 550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சேத மடைந்த இரண்டு மின்தொகுதிகளும் 275 மெகாவாட் உற்பத்தித் திறன் ண்டவை. இவை இயங்காததால் நாளொன்றுக்கு 2.4கோடி ரூபா நட்டம் ஏற்படும் என்று மின் சாரசபை அறிவித்திருக்கிறது. இந்த நிலை 3 மாதங்கள் வரை நீடிக்கலாம். அதேவேளை களனிதிஸ்ஸ மின் நிலையத் துக்கு ஏற்பட்ட சேதங்களை திருத்தியமைக்க ஆறு மாதங்கள் தேவைப்படும் என்று மின் சக்தி அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரி வித்திருக்கிறார். இந்தத் தாக்குதலால் இரவு நேரத்தில் [...]
நூலகங்கள் காலத்தின் போக்கில் கடக்கும் விசயங்களை, சேகரிக்கும் செய்திகள், நூல்களை நாளை வரப்போகும் தலைமுறைக்கு நல்லதொரு வாழ்க்கை சூழலினை தரப்போகும் முக்கிய அம்சம்!எத்தனையோ தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு தீர்வுகளை கண்டுகொண்டிருந்தாலும், இந்த பணி ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மிகச்சரியானதொரு பணியாக,இவர்கள் முன்நின்று செய்யும் இந்த அடையாளம் - அரும்புகள் வாசிப்பு இயக்கம் கோவை வாழ் எளிய மக்களின் பிள்ளைகள், சிறுவர் சிறுமியர்களின் புத்தகங்கள் மீதான ஆர்வம் - அடையாளம் எனும் அமைப்பால் தரப்பட்டிருக்கிறது!ஆம்!எதிர்காலத்தில் சமூகத்தில் நல்லதொரு அடையாளம் தரும் சிறந்த மனிதர்களை உருவாக்கும் பணியாக....!இவர்களின் சிறு கோரிக்கையாக மலர்ந்திருப்பது உங்களால் முடிந்த அளவு நூல்களை தாருங்கள், புத்தகங்களை கொடுத்து இளைய தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு இயன்றளவு உதவுங்கள் என்பதுதான்!இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உதவிகள் சிறிதாக இருந்தாலும் கூட காலத்திற்கும் நிலைத்து நிற்கும் மாபெரும் நற்பணி!
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும்வழியில் காரமடை எனும் ஊரில் உள்ளது அடையாளம் எனும் அமைப்பு.தன்னார்வத்தோடு செயல்படும் பலரது முயற்சியால் பெரியநாய்க்கன் பாளையம் எனும் பகுதியில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த 1400 குழந்தைகள் அவர்களே நிர்வகிக்கும் நூலகமாக
ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த அமைப்பின் சிறப்பம்சம் பணமாக வரும் உதவிகளை ஏற்பதில்லை என்பதுதான்.அதற்கு பதிலாக நூல்நிலையங்களுக்கு பணத்தை அனுப்பச்சொல்லி அங்கிருந்து தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
அவர்களது தொடர்பு முகவரி
திரு.தண்டபாணி. அலைபேசிஎண் 98423 51324
திருமதி.அம்சவேணி. அலைபேசிஎண் 98421 51323
முகவரி
அடையாளம் அமைப்பு
2 / 563,பெத்தட்டாபுரம்,
காரமடை அஞ்சல்
கோயம்புத்தூர் 641 104.
நன்றி திரு.ஆயில்யன் அவர்களுக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக