செவ்வாய், 26 மே, 2009

2009-05-26

மொளைச்சி மூனு இல விடல இதெல்லாம் அரசியல் பேசுதுபார் என எவராவது கேட்டால்?

இன்றைய சுழலில் அரிசி முதல் ஆன் சைட் வரை , உப்பு முதல் டப்பு வரை எல்லாம் அரசியல். காது குத்திலும் அரசியல் கத்தி குத்திலும் அரசியல். பஸ் டிக்கெட், காலேஜ் பீஸ், எம்ப்ளாய்மென்ட் ஆபிஸ் பதிவு, ரெகமென்டேசன், மினிஸ்டர் மச்சான், எம் எல் ஏ தம்பி என பல பரிணாமங்களில் இருக்கிறது இன்றைய அரசியல்.‌ வாழ்வின் தவிர்க்க‌ முடியாத ஒரு அங்கமாகிவிட்டதால் அதை பற்றியும் கொஞ்சம் கவலைபட வேண்டிய அவசியம் வந்துவிட்டது. அதனால் இந்த முளைப்பது காய்ப்பது கனிவது பற்றி கவலைபட தேவையில்லை.

இதெல்லாம் பேச உனக்கு என்ன உரிம இருக்கு நீ பேச வந்துட்ட என்று கேட்டால் "ஓட்டு போட்ட உரிமையிலதான்" என்பதை தவிர என்னிடம் வேறு பதில் இல்லை.

இப்படிக்கு
மிஸ்டர் பப்ளிக்

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மிகச்செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை. மருத்துவமனைகள் அற்ற நிலையிலும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர். ஆனால் எந்த வசதியும் அற்ற நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இங்குள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.

செய்திகள்: புதினம்

கருத்துகள் இல்லை: