செவ்வாய், 26 மே, 2009

2009-05-26

தென்னங்கன்றுகளின் தரத்தை சுலபமாக கண்டறிய செங்கல்பட்டு மற்றும் கிருஷ்னகிரியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கடை பிடிக்கும் வழி முறையை இப்பதிவில் பார்ப்போம்.தென்னங்கன்றுகளை ஒரு ஊசியின் மூலம் குத்தி பார்க்க வேண்டும்.அப்படி குத்தி பார்க்கும் போது ஊசி அதிகமான ஆழத்திற்கு உள் சென்றால், அந்த கன்றுகள் அவ்வளவு தரமானவை இல்லை. நீங்கலும் தென்னங்கன்று வாங்கும் போது இதை முயற்சி செய்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்களேன்!

--

இந்திய மக்களை பசி பட்டியினியிலிருந்து காப்பாற்றி இன்றைய இந்தியாவின் தற்போதய வளர்ச்சிக்கு காரணமான தலைவர் ஒருவர் என்றால் அது திரு சி.சுப்ரமணியம் அவர்களாக தான் இருக்கும்.மக்களுக்கு அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதும், நாட்டின் கட்டமைப்பை மேற்படுத்துவதும் தான் தனது தலையாய கடமை என்று பாடுபட்டவர் அவர். இந்த வருடம் அவரது நூற்றாண்டு தினம் வருகிறது. 1970 வரை இந்தியாவில் பஞ்சத்தால் ஏற்பபட்ட பட்டினி சாவு பல ஆண்டுகள் தொடர்ந்து வந்தது. இந்தியா தன் உணவு தேவையை தன்னால் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் வெளி நாடுகளிடமிருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலிருந்தது. அந்த உணவையும் இறக்குமதி செய்ய பணம் இன்றி தவித்தது. ஒரு புறம் உணவு பற்றாக்குறை மறு புறம் வெகு வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை என மிகவும் அபாயகரமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருந்தது. உணவிற்கு வெளி நாட்டை கையேந்தி இருந்ததால் எந்த அரசியல் ரீதியான முடிவும் சுயமாக எடுக்க முடியாமல் வெளி நாட்டின் நிர்பந்தத்திற்கு அடிபணியும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் உணவு துறை அமைச்சராக யாருமே பொறுபேர்க்க விரும்பவில்லை. அப்படி பட்ட இக்கட்டான நேரத்தில் உணவு துறை அமைச்சராக திரு சி.சுப்ரமணியம் அவர்கள் பொறுபேற்றார். மிக குறைந்த வருடங்களில் புதிய வேளாண் தொழில் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகபடுத்தி பசுமை புரட்சி ஏற்படுத்தி உணவு பற்றாகுறையை போக்கினார்.(பசுமை புரட்சியின் தேவை, நன்மை, தீமைகள் பற்றி பல எதிர்மறை கருத்து நிலவுகிறது.அது பற்றிய விரிவான அலசலை பிரிதொறு பதிவில் காண்போம்).

பசுமை புரட்சி தொடங்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பசுமை புரட்சியினால் ஏற்பட்ட பின்விளைவுகளாலும், விவசாயிகளின் இன்றைய நிலை மோசமாக இருப்பதாலும், உணவு பொருளின் தேவை அதிகமாக இருப்பதாலும், விளை நிலங்களின் அளவு குறைவதலும் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவ்சாய உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் ஒட்டு மொத்த கிராம புற மக்களின் வாழ்க்கை திறனை அதிகரிக்க இரண்டாம் பசுமை புரட்சியினை ஆரம்பிக்க தேவை இருப்பதை அறிந்து தன்னுடைய 90 ஆவது வயதில் தேசிய வேளாண் நிறுவனம் என்னும் அரசு சாரா நிறுவனத்தை தொடங்கினார். அந்நிறுவனம் விவசாய உற்பத்தி திறன் பெருக்கத்துக்காகவும், கிராம மக்கள் முன்னேற்றத்துக்காகவும் ஆற்றும் பணிகள் அளவிட முடியாது. அதன் பணிகளும் அதனால் மக்கள் அடையும் பயன்களை பற்றியும் பார்ப்போம்

நவீன மண் பரிசோதனை கூடம்

பயிரின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சளுக்கும் அடிப்படை தேவை மண்ணின் சத்துக்கள். இந்திய விவசாயிகள் தங்களுடைய மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளாமல் தேவையான் உரங்களை தேவையான அளவு இடாமல் அதிகமான உரங்களை தேவையற்று இடுகின்றனர். மேலும் உரம் இடும் போது தழை சத்து, மணி சத்து மற்றும் சாம்பல் சத்து பற்றி மட்டும் கவலை கொண்டு பிற சத்துக்களை பற்றி கவலை படுவதில்லை.அரசு மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை செய்தாலும் அது அந்த அளவு தரமானதாக இல்லை.

இந்த பிரச்ச்னையை போக்க தேசிய வேளாண் நிறுவனம் உலக தரம் வாய்ந்த மண் பரிசோதனை கூடத்தை தொடங்கி உள்ளது. பயிரை விதைக்கும் முன் மண்ணை இப்பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் சத்துக்கள் சரியாக அளவிடபட்டு தேவையான் பயிருக்கு தேவையான உர பரிந்துரைகளை விவசாயிகளுக்கு தருகின்றனர். அது மட்டுமன்றி அந்த மண்ணின் தரத்தை உயர்த்த செய்ய வேண்டிய வழிமுறைகளையும் கூறுகின்றனர். இதன் மூலம் பயிருக்கு தேவையான உரத்தின் அளவு சரியாக நிர்ணயிக்க பட்டு, தேவையான உரங்களை சரியான காலத்தில், தகுந்த முறைபடி பயிருக்கு இடும் முறை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதனால் பயிரின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கிறது.

இதை படிக்கும் விவசாயிகளும் தங்கள் மண்ணை நவீன முறையில் பரிசோதனை செய்ய தேசிய வேளாண் நிறுவனத்தை தொடர்பு கொள்ள்ளாம்.
தொலை பேசி: 22542598/22542803
மின்னஞ்சல்: nationalagro@gmail.com
இந்நிறுவனத்தின் மற்ற பணிகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்

Zee தமிழ் சானலில் வரும் முதல் குரல் நிகழ்ச்சி விஜய்கந்திர்க்கு ஆதரவாக இருப்பது போல் இருக்கிறதே ?நீங்கள் என்ன நினைகிறீர்கள் ?
கல்கியின் வாசகர்கள் யாவருக்கும் சிற்பி என்ற உடனே நினைவுக்கு வருவது ஆயனச் சிற்பியும் அவரது மல்லைக் கனவுகளும்தான். சிவகாமியின் சபதத்தில் சிற்பக் கலைக்கும், நாட்டியக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கல்கி பொன்னியின் செல்வனில் சோழர்களின் பெருமையையும், இராஜராஜ சோழனின் கலைத் தாகத்தையும் யாவரும் அறியும் படிச் செய்தார். பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து காவிரி மைந்தன் எழுதிய அனுஷாவெங்கடேஷ், சிவகாமியின் சபதத்தை தொடர்ந்து காஞ்சி என்ற ஒரு நாவல் எழுதுவதாக கேள்வி. கல்கி முடிக்காமல் விட்டுச் சென்ற ஆயனச் சிற்பியின் கனவுகளை இவர் நிறைவேற்றுகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். கல்கியின் எழுத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு உருவான பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் இணைந்திருக்கும் நாங்கள், பல்லவர்களும், சோழர்களும் வளர்த்து வந்த சிற்பக் கலையை சாதாரண மக்களும் அறிந்து போற்றச் செய்யவேண்டும் என்று செய்து வரும் முயற்சியில் உருவான ஒன்று இந்த சந்திப்பு.

கல்லிலே கலை வண்ணம் காட்டும் நண்பர் சிங்கை திரு. விஜயகுமார் (VJ) அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கும்பகோணத்தில் வாழ்ந்து வரும் பாரம்பரியம் மிக்க ஸ்தபதி திரு. உமாபதி ஆச்சார்யா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழக இனிமையான இவர், பரம்பரை பரம்பரையாய் தாங்கள் கற்று வரும் சிற்பக் கலையின் இரகசியங்களை, சிற்பங்கள் செதுக்கும் முறையை யாவரும் அறிய வேண்டும், இந்தக் கலையின் முக்கியத்துவத்தை உலகம் அறிய வேண்டும் என்று ஆவல் கொண்டு இந்தப் பேட்டியினை மனமுவந்து அளித்துள்ளார். அமைதியும் பக்தியும் தவழும் இவரது இல்லத்தில் நுழைந்த உடனேயே நாம் புனிதமானதொரு இடத்தில் இருக்கிறோம் என்று உள்மனது அறிவித்தது. அவரும் அவரது சகோதரர் திருவீழிநாதனும் பேசிய விதமும், அவர்களது ஓலைச் சுவடிகளையும், நூல்களையும் பாதுகாக்கும் விதமும், அவர்களது தொழில் கூடத்தை வைத்திருக்கும் விதமும் அதை மெய்பிப்பதுபோல் இருந்தது.

சிற்பசாஸ்திரம், சிற்பங்கள் செதுக்கும் முறை, சிற்பங்கள் செதுக்குவதற்கு முன் தயார் செய்யப்படும் ஓவியங்கள் ஆகியவற்றைப் பற்றி பல ஆச்சர்யமூட்டும் தகவல்களை நம்முடன் பரிமாறிக்கொண்டார். கற்சிற்பங்கள் மட்டுமின்றி உலோகத்தில் சிற்பங்கள் செய்வதிலும் தேர்ந்தவர்கள் என்று அறிந்துகொண்டேன் இந்த சந்திப்பில். மேலும் சிற்ப சாஸ்திரம் சம்பந்தப் பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார், இவர் ஆராய்ச்சிகள், தேடல்கள் வெற்றி பெற வேண்டும் அதனால் இந்தக் கலையின் மகத்துவத்தை உலகோர் யாவறும் அறிந்து பயன் பெறவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு யாம் பெற்ற இன்பத்தை யாவரும் பெறவேண்டுமென இந்த வீடியோப் பதிவினை வழங்குகிறோம்.

பார்த்து மகிழுங்கள், மேலும் தங்களுக்கு சிற்பக் கலையில் இருக்கும் சந்தேகங்களை தவறாமல் எங்களுக்கு அனுப்புங்கள். தங்களுடைய வினாக்களை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் திரு. உமாபதி ஆச்சார்யா அவர்கள்.

Email : svprsk@gmail.com

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

கருத்துகள் இல்லை: