பின்னிரவில் பெய்யும் மழை
நினைவு பொட்டலங்களை கரைத்தபடி
தெருக்கோடியில் மறைகிறது
உருகும் இரும்பு பாலங்களாய்
இறுக்கம் தளர்ந்த மனசு
உனக்கும் எனக்குமான
முரன் வெடிப்புகளில்
துளிர்த்தவேரின் ஆதிதேடுகிறது
சுயங்கள் தொலைத்த ஒரு நாளில்
சில புன்னகைகளை உதடுகளில் ஒட்டிவந்தாய்
வார்த்தைகளின் வசீகரங்கள் தொலைந்து
மௌனங்கள் இடம்பெயர்ந்தது
உனக்கும் எனக்குமான
சாதரன சந்திப்பை
சரித்திரமாக்கியது பிரிவு
பின்னிரவில் பெய்யும் மழை
நினைவு பொட்டலங்களை கரைத்தபடி
தெருக்கோடியில் மறைகிறது
உருகும் இரும்பு பாலங்களாய்
இறுக்கம் தளர்ந்த மனசு
உனக்கும் எனக்குமான
முரன் வெடிப்புகளில்
துளிர்த்தவேரின் ஆதிதேடுகிறது
சுயங்கள் தொலைத்த ஒரு நாளில்
சில புன்னகைகளை உதடுகளில் ஒட்டிவந்தாய்
வார்த்தைகளின் வசீகரங்கள் தொலைந்து
மௌனங்கள் இடம்பெயர்ந்தது
உனக்கும் எனக்குமான
சாதரன சந்திப்பை
சரித்திரமாக்கியது பிரிவு
இன்று பதிவுகளில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை எது?? சந்தேகமேயில்லை மொக்கைதான். பதிவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பதிவுகளினை மொக்கை!மொக்கை!என்று கட்டியம் கூறுகிறார்கள். இதில் எது நிஜ மொக்கைன்னு புரியவில்லை!(மொக்கைக்கு எதாவது வரவிலக்கணம் இருக்க அல்லது வரவிலக்கணமே இல்லாததுதான் மொக்கையா)
வலைபதிவிற்கு வந்த புதிதில்.. ஒரு கணம் அசந்து விட்டேன்! எங்கு பார்த்தாலும் மொக்கை, நாங்கள் நமீதவில் கிறங்கியிருந்த சமயம்,தமிழில் ஹய்கூ மாதிரி ஒரு புது இலக்கிய வடிவமே(மொக்கை) புகுந்து விட்டதாக அதிசயித்து விட்டேன் .
படிக்க,படிக்க மொக்கையின் தார்ப்பரியம் புரிந்தது.யாழ்ப்பாணத்தில் இந்த வார்த்தையினை சில திரைபடங்களினால் அறிந்திருந்தாலும், வலைபதிவுகளில்தான் அதன் பயன்பாட்டினை உணரமுடிந்தது!
யாழ்பாணத்தில் மொக்கைக்கு அண்மித்த அர்த்தம் கொண்டதாக, நாங்கள் பயன்படுத்துவது வதை என்ற வார்த்தையினையே.
"மச்சான் எப்பிடிடா இருந்தது வில்லு"
"வதை படம்ட, விஜய் வதை வதைன்னு வதைச்சிட்டான்"
மட்டமான நகைச்சுவை சொன்னால் "வதைக்கிறாண்டா" என்போம்.
காதலியினை நினைத்து பீல் பண்ணினா "சக்கை வதையண்டா" என்போம்.
யாழ்ப்பாணத்தில் ஒரு வடிவான பொண்ணைபார்த்து, யாராவது "மச்சான் சூப்பர் பிகருடா" ன்னு சொன்னால் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம்.!
"மச்சான் சூப்பர் சரக்கு போகுதுடா" ன்னுதான் சொல்வோம். (பிகர்= சரக்கு)
லுக்குவிடுபதனை சரக்குபாக்கிறது என்போம்.
கமடி,ஜோக் இவைகளினை பயன்படுத்துவதே அரிதானது, நகைச்சுவை படங்களினை "அதுவா ஒரே பம்பல்படம்டா" ன்னுதான் சொல்வோம்!
யாராவது பொண்ணின் முன்னால் மானபங்கபட்டால், "மச்சான், அவ முன்னாடி சக்கை நோண்டியா போச்சுதடா" ன்னுதான் சொல்வோம்.
"கடைல இருந்து.. தண்னியடிச்சா நோண்டிடா"
"மச்சி.. கட்டம் போட்ட சட்டைக்காரனை நோட் பாண்னிக்க ஆளு பயங்கர சைக்கில்டா"
ஓரினசேர்கையாளர்களை (ஆண்+ஆண்) சைக்கில்ன்னுதான் சொல்வோம்!
யோசித்த போது "சட்" என ஞாபகத்தில் வந்தவையே .இவை பெரும்பாலும் யாழ்பாணத்து இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்.
நினைவடுக்குகளில் துருத்திக்கொண்டிருக்கும் பல நாட்களினை கொண்டதாக கடந்தமாதம் உதிர்ந்து விட்டிருக்கிறது. ஈழத்திலும், புலத்திலும் நிகழ்ந்த சில நிகழ்வுகள், இன்னமும் வாழ வேண்டும் என்கிற எல்லைகளினை சுருக்கியிருக்கிறது!
எனக்கு வெகுமதியாக வழங்கபட்ட சில வலிகளினை உங்களிடம் பகிர்ந்து கொண்டால், எனக்கு பாதி வலி குறையும் என்பதிலும் உங்களிடம் மீதிவலி தங்கிவிடும் என்பதே எனது பயம்.
கடந்த சில மாதங்களில் பதிவுகளினை இடுவதில் இருந்த ஆர்வம், இடுக்கைகளினை படிப்பதில் இருந்த சுவார்சியம், பின்னுட்டவதில் இருந்த ஆரவாரம் இந்த மாதத்தினில் தீர்ந்து போயிருக்கிறது. ஆர்வமாக பதிவுகளினை படிக்க ஆரம்பித்தாலும்.. படிக்க முடியவில்லை!
பதிவுகளிடுவது… ஏதோவொரு அங்கிகாரத்திற்காகவே! சின்ன,சின்ன பாராட்டுகள், ஊக்குவிப்புக்கள் வரும் போதினில்.. இன்னமும் ஏதாவது எழுதலாமே என மனசு அலைபாய்கிறது.ஆனாலும் அதற்கான நேரமும், மன வலிமையும் இன்னமும் முழுமையாக திரும்பிடவில்லை என்பது, வலிகளினை இன்னமும் ரணமாக்குகிறது.
இன்னமும் முப்பது இடுக்கைகள் கூட எழுதியிராத நிலையில்.. கடந்த மாதத்தினில் கிடைத்த மூன்று ஊக்குவிப்புகள், வரும் நாட்களில் அதிகம் எழுதவேண்டும் என்ற ஆவலினை தூண்டுகிறது..!
01.கலை அண்ணா பட்டாம்பூச்சி விருதினையும், தனக்கு பிடித்த எனது சில பதிவுகளிணையும் பட்டியலிட்டிருந்தார்
02.ஆதவா தனக்கு பிடித்த மாச்மாத பதிவுகளில் எனது இரு பதிவுகளிற்கான சுட்டியையும் கொடுத்திருந்தார்
03.பல நாட்களாய் பதிவு எழுதவில்லை என்பதனால்.. முகவரியும் திருடபட்டதில் பதிந்த பதிவினை (திருடப்பட்ட முகவரிகள்) விகடன் குட் blogs இல் சுட்டி கொடுத்திருக்கிறார்கள். (நிச்சியமாக தலைப்பினை மட்டும் பார்த்தே இனைப்பு கொடுத்திருப்பார்கள்!)
இந்த நெகிழ்சியான தருணங்களை… உடனே பகிர்ந்து கொள்ள முடியததனாலும்..! நண்பர்களுக்கு நன்றிகளினை தெரிவிப்பதற்குமே இந்த பதிவு!
நான், இனி வரும் நாட்களில்… கடந்த நிகழ்வுகளை மறந்து.. ஆரம்ப ஆர்வத்துடன் வலையுலகினை வலம்வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை!![]()
பட்டாம்பூச்சி விருது இன்னமும்… மூவருக்கு பகிரவேண்டும்..! பெரும்பாலான பதிவர்கள் விருதினை பெற்று விட்டதாலும், இதன் விதிமுறைகள் இன்னமும் புரியாதனாலும் இவ்விருதினை சில நாட்களின் பின்னர் பகிரலாமேன இருக்கிறேன் (மன்னிச்சுகோங்க கலை அண்ணா)
விகடன் குட் blogs இன் புகைபடம் ராமலக்ஷ்மி அவர்களின் வலைபதிவில் இருந்து சுடப்பட்டது! நன்றி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக