வியாழன், 28 மே, 2009

2009-05-28

எத்தனையோ கோப்புச் சுருக்கிகள் (file compression tools) இணையத்தில் உள்ளன. ARJ, ZIP, RAR இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு மென்பொருளால் உருவாக்கப்பட்ட சுருக்கப்பட்ட file ஐ, வேறு ஒரு மென்பொருளால் விரிக்க முயற்சித்தால் பல நேரங்களில் ஒத்திசைவு இல்லாத பிழைச் செய்தி (compatibility issues) கிடைக்கும். RAR கோப்பினை WinZip வழியாக திறக்க முயற்சித்திருக்கிறீர்களா?


இதற்கான தீர்வுதான் Universal Extractor. எந்த மென்பொருள் வாயிலாக கோப்புகளைச் சுருக்கி இருந்தாலும், இந்த யுனிவர்சல் எக்ஸ்ட்ராக்டர் பயன்படுத்தி விரித்து விடலாம். மைக்ரோசாப்டின் MSI கோப்புகளையும், EXE கோப்புகளையுமே கூட இதன் மூலம் விரிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

http://www.legroom.net/software/uniextract#download




More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
100 பக்கங்கள் கொண்ட பிடிஎப் கோப்பு ஒன்றை பத்து பத்து பக்கங்களாக பிரிக்க வேண்டுமா?

அதாவது ஒரு புத்தகத்தில் 10 தலைப்புகள் (chapters) இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொன்றும் 10 பக்கங்கள் இருக்கின்றன. மொத்தம் 100 பக்கங்கள். ஒவ்வொரு சாப்டரையும் தனித்தனி கோப்புகளாக ஆக்க வேண்டுமா? இதற்கு Split என்று பெயர் (வெட்டுதல்).
ஒன்றுக்கு மேற்பட்ட PDF கோப்புகளை ஒன்றாகக் கோர்த்தல் - அதாவது Merging செய்ய வேண்டுமா? இந்தப் பணிகளைச் செய்வதற்காக PdfMerge என்கிற மென்பொருளைப் பயன்படுத்தலாம். தரவிறக்கச்சுட்டி கீழே.

http://downloads.sourceforge.net/pdfmerge/PdfMergeSetup_1.19.msi


ஒரு இணையதளத்தில் இருக்கும் எல்லா பக்கங்கள் (web pages) அவற்றின் உள்ளே உள்ள தொடுப்பு சுட்டிகள் (internal links), படங்கள், ஒலி, ஒளிக் காணொளிகள் எல்லாவற்றையும் ஒரே க்ளிக்கில் இணையிறக்கம் செய்து, offlineல் இணைய இணைப்பின்றி எந்த browser வாயிலாகவும் உலவுவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது.

WebReaper இதைச் சாத்தியமாக்குகிறது. இந்த பயன்பாட்டில் URL முகவரியை உள்ளிட்டு, Go அழுத்தினால் போதும். URL முகவரியுடன் தொடர்புடைய அனைத்து உள் தொடர்புடைய சுட்டிகளுக்கான பக்கங்களும் தரவிறக்கம் செய்யப்பட்டு உங்கள் கணினியிலேயே பதிவாகிவிடும். ஒரு இணையதள முகவரியை உள்ளிட்டு அதில் தேவையற்ற extension கொண்ட கோப்புகளைத் தரவிறக்கம் செய்யவேண்டாம் என வடிகட்டும் (filter) வசதியும் இதில் உள்ளது. முற்றிலும் இலவசமான பயன்பாடு இது. இணையிறக்கம் செய்த கோப்புகளை USB கருவியில் பதிந்து உள்ளங்கையில் எடுத்துச்செல்லலாம். உள்ளங்கையில் இணையம் என்பது இதுதானே?

http://www.webreaper.net/download.html


http://www.picnik.com இந்த தளத்தில் உங்கள் புகைப்படங்களை ஏற்றி அங்கேயே எடிடிங் செய்து கொள்ளலாம். தனியாக எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை.மிக எளிமையான பயன்பாட்டுத்தளம் இது.

புகைப்படங்களை மெருகேற்றுவதற்கு, சிறப்புத் தோற்றங்களைச் சேர்ப்பதற்கு, அழகு எழுத்துருக்களில் தலைப்புக் கொடுக்க என தளத்தின் பயன்பாடு விரிந்து கொண்டே செல்கிறது.
இத்தனையும் இலவசமாக Picnik தளத்திலேயே அளிக்கப்படுகிறது. Myspace, Flickr, facebook, Photobucket, Picasa, Webshots, Webs போன்ற தளங்களில் ஏற்கனவே ஏற்றப்பட்ட படங்களையும் Picnik தளம் வாயிலாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


http://www.jaycut.com இந்த தளத்தில் உங்கள் கேமரா, செல்பேசி, வெப் கேமரா ஆகிய கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஏற்றி அங்கேயே எடிடிங் செய்து கொள்ளலாம். தனியாக எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. மிக எளிமையான பயன்பாட்டுத்தளம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை ஒன்றாக இணைப்பதற்கு, ஒரு வீடியோவை பல பாகங்களாகப் பிரிப்பதற்கு இந்த தளத்தின் மூலம் இயலும். நெடிய வீடியோவில் எங்கெங்கு போரடிக்கும் காட்சிகள் இருக்கிறதோ அவற்றை மட்டும் வெட்டி நீக்கும் வசதி உண்டு. ஒளிநகர் படத்திற்கு ஏற்ற இசையைச் சேர்ப்பது, title என்னும் தலைப்பு சேர்ப்பது எல்லாம் இங்கே எளிமையாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம்.
அகலப்பட்டை (broadband connection) மற்றும் ஒரு உலவி இவை மட்டுமே போதுமானது. எல்லா எடிட்டிங் வேலைகளும் முடிந்ததும் உங்கள் வீடியோக்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம் (sharing). உங்களால் எடிடிங்க் செய்து மாற்றியமைக்கப்பட்ட புதிய மெருகேற்றப்பட்ட வீடியோவை iPod, PCல் இறக்கிக்கொள்ளலாம். அல்லது நேரடியாக உங்கள் வலைப்பதிவில் பொதியலாம் (embed).


இணையத்தில் எங்கெங்கு காணினும் பல்வேறு அனிமேட்டட் பேனர்ஸ் (Animated Banners) கண்டிருப்பீர்கள். தொடர்ச்சியான பல படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுவதே GIFன் தத்துவம்.



GIF ஐ உருவாக்க நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தரவிறக்கம் (download) செய்ய வேண்டும். இதற்காகப் பிரத்தியேகமாக உள்ள ஆன்லைன் இணையதளம் : http://www.gickr.com/ அங்கே அதிகபட்சமாக 10 jpg கோப்புகளை ஏற்றி உங்களுக்கான அசைபட GIF அனிமேசன்களை உருவாக்கலாம்.

Flickr தளத்தில் ஏற்கனவே இருக்கும் படங்களையும் http://www.gickr.com/ மூலம் GIF ஆக மாற்றிடலாம். அனிமேசனின் வேகத்தை நீங்களே நிர்ணயிக்கலாம் (customize).


கருத்துகள் இல்லை: