சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

தொழில் வரி செலுத்துவதில் புதிய திருத்தம் விரைவில் கொண்டு வரப்படுகிறது.இதற்கான சட்ட மசாதாவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இதுகுறித்த விவரம்:ஒரு தொழிலை மாநகராட்சி, நகராட்சிக்குள் ஓரிடத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களிலோ அதே பெயரில் செய்து வருகின்றனர்.அப்படிப்பட்ட நபர்களின் வருமானமானது தொழில் வரியை விதிக்கும் நோக்கத்துக்காக சேர்த்துக் கொள்ளப்பட
உலக கோப்பை வென்றது பாகிஸ்தான். இந்த வெற்றி ஒரு சாதாரண வெற்றி மட்டும் அல்ல. இது ஒரு தேசத்தின் தாகம். ஒரு தேசத்தின் வெறி. இவையே இன்று வெற்றி கனியை அவர்களிடத்தில் கொண்டு சேர்த்தது.நடந்தது என்ன:
இந்த வருடம் ஜனவரி மாதம் பாகிஸ்தான் செல்ல திட்டம் தீட்டி இருந்தது இந்தியா அணி. மேலும் பல்வேறு உலக உள்ளூர் அணிகள் பங்கு பெரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் பி.சி.சி.ஐ திட்டமிட்டு இருந்தது. ஆனால் விதி, தீவிரவாத ரூபத்தில் வந்தது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தாஜ் மற்றும் ஒபேராய் ஓட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் இந்த திட்டங்களை நாசம் செய்தது.

இதன் பிறகு பாகிஸ்தானில் நடந்த தொடர் தாக்குதல்கள் அந்த நாட்டை சீர்குலைத்தன. இதன் பின்னர் பாகிஸ்தான் செல்ல அந்த அணியும் முன்வரவில்லை. இந்தியா தனது பயணத்தை ரத்து செய்து விட்டது.

உபத்திரவமான உதவி:

பாகிஸ்தானிற்கு உதவ அங்கு சென்றது இலங்கை அணி. ஆனால் விதி யாரை விட்டது. அங்கு சென்ற அவைகள் மீதும் தாக்குதல் நடத்தினர் தீவிரவாதிகள். கடைசியில் மைதானத்தில் இருந்தே நாடு திரும்ப வேண்டியதாயிற்று. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அங்கு செல்ல எந்த அணியும் தயாராக இல்லை.

பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்தது ஐ.சி.சி. மேலும் இரு நாட்டு பிரச்சனைகள் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக 2011 உலக கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பார்த்து ஐ.சி.சி. இந்த சூழ்நிலையில் தான் t20 உலக கோப்பை போட்டிகள் வந்தது. எந்த பயிற்சியும் இல்லாமல் வந்தனர் பாகிஸ்தான் வீரர்கள். பாகிஸ்தான் இந்த உலக கோப்பை போட்டிகளை வெல்ல வாய்ப்பே இல்லை என்றே அனைவரும் கூறினார்.
(நமது கருத்து கணிப்பிலும் பாகிஸ்தான் அணிக்கு 4% வாக்குகளே பதிவானது குறிப்பிடத்தக்கது)

தொடக்கத்தில் இந்தியா அணியிடம் பயிற்சி போட்டியிலும் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியிடமும் தோற்றது. ஆனால் அவர்கள் வெறி இறுதியில் வெற்றி பெற்றது.

இதோ இன்று உலக கோப்பை பாகிஸ்தான் வசம். இது அவர்களுக்கு ஒரு சாதரண கிரிக்கெட் வெற்றி மட்டும் அல்ல. இது அணிதிற்கும் மேலான ஒரு சரித்திரம்.

இறுதி போட்டி, பாகிஸ்தான், சாம்பியன், சரித்திரம்
இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது .
நம்ப முடியுமா உங்களால்? எனக்கு ஏற்கனவே காது குத்தி விட்டார்கள் என்று கூறுகிறீர்களா? இல்லை இது உண்மை... தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இருபது ஓவர் உலக கோப்பையில் இந்திய இனி அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது.

ஒரு சின்ன மாற்றம். வெற்றி பெற்றது இந்திய ஆண்கள் அணி அல்ல. பெண்கள் அணி.

ஆம். பெண்களுக்கான இருபது ஓவர் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடை பெற்று வருவது தாங்கள் அறிந்ததே. அதில் இந்திய பெண்கள் அணி நேற்று முக்கிய போட்டியில் பலம் வாய்ந்த இலங்கை அணியை சந்தித்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மட்டுமே அரை இறுதிக்கு செல்ல முடியும் என்பதால் போட்டி பரபரப்பாக இருந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன் மட்டுமே எடுத்தது. தீபிகா மட்டும் சிறப்பாக ஆடி 24 ரன்கள் எடுத்தார். ருமேலி தர் 4 ஓவரில் 4 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து ஆடிய இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் புனம் ருட் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 16.5 ஓவரில் 5 விக்கெட் மட்டுமே இழந்து 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நாளை நடைபெறும் அரை இறுதியில் மிக பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது.
இந்திய கேப்டன் மிதாலி ராஜ்



இந்திய பெண்கள் அணிக்கு நமது வாழ்த்துக்கள்
உன் குத்தமா?
ஏன் குத்தமா?

நான் யாரு மேல குத்தம் சொல்ல?


உலக கோப்பைல தோத்ததுக்கு அப்புறம் எல்லாரும் தோல்விக்கு காரணம்னு கை காட்ற ஒரே ஆள் நம்ம கேப்டன் தோனி தான். ஆனா உண்மைலேயே அவர் அப்பிடி என்னதான் தப்பு பண்ணினார்?

நியாயமா பார்த்தா தோனி மேல எந்த தப்பும் இல்ல. ட்வென்டி ட்வென்டி போட்டி அப்டினாலே அதுல வெற்றி பெறுவதற்கு திறமை எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட அதிர்ஷ்டம் முக்கியம்.

அது மட்டும் இல்ல, ஒரு கேப்டன் எப்பவுமே தன்னோட அணிய வச்சு சோதனை செஞ்சுக்கிட்டே இருக்கணும். அப்பதான் எந்த பிளேயர் எங்க நல்ல விளையாடுவாங்கன்னு தெரிஞ்சுக்க முடியும். அதை தான் தோனி பண்ணினார்.

ரோகித் ஷர்மா வ ஒபெனிங் இறக்கினாறு. அந்த சோதனை வெற்றி அடைஞ்சுது. அப்போ எல்லோரும் பாராட்டினாங்க. ஆனா இங்கிலாந்து மேட்ச் ல ரவீந்திர ஜடேஜா வ இறக்கி சோதனை பண்ணுன எல்லோரும் திட்டுறாங்க. இது நியாயமா?

முக்கியமான மேட்ச் ல எதுக்கு சோதனை பண்ணிக்கிட்டு? ஒழுங்கா விளையாடுற பிளேயர்மட்டும் விளையாட கூடாதா அப்டின்னு கேட்குறது புரியுது. ஆனா இதுக்கு முன்னாடியும் தோனி முக்கியமான கட்டத்துல சோதனை பண்ணி இருக்காரு.

அப்படியே கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்க. 2007 T20 உலக கோப்பை. பாகிஸ்தான் உடன் இறுதி போட்டி. கடைசி ஓவர். அப்போ நமக்கு தேவை ரன் கொடுக்காத ஒரு பந்து வீச்சாளர்தான். ஆனா அப்போ பந்த ஜோகிந்தர் ஷர்மா கிட்ட கொடுத்தாரு கேப்டன்.

முடிவு? ஜோகிந்தர் பால்ல ஸ்ரீசாந்த் கிட்ட கேட்ச் கொடுத்து மிஸ்பா அவுட் ஆக உலக கோப்பை இந்தியா கிட்ட வந்துது. இந்த வாட்டி நமக்கு கொடுத்து வைக்கல. அவ்வளவுதான்.
இந்த கோப்பை வேறு எங்கும் போகாது...


உங்களுக்கு சாதகமா ஆட்டோகிராஃப் படத்த எடுத்து விமர்சனம் விமர்சனம் செஞ்சுடிங்க . ஏன் மத்த படங்களையும் விட்டு வைக்கணும்

படம் 1: அஞ்சாதே படத்துல வர்ற பிரசன்னா கேரக்டர ஒரு பொண்ணு பண்ணி இருந்தா ?
சகிக்க முடியல இல்ல?

படம் 2:
சுப்ரமணியபுரம் படத்துல ஜெய்க்கு பதிலா சுவாதி தலைய ஆட்டிகிட்டு "கண்கள் இரண்டால் " பாட்டு பாடுனா ?
ரசிக்க முடியல இல்ல?

படம் 3:
பூ படத்துல ஸ்ரீகாந்த் இடத்துல பார்வதியையும் , பார்வதி இடத்துல ஸ்ரீகாந்தும் கேரக்டர் மாறி செஞ்சு இருந்தா ?
மனதில் ஒட்டவே இல்லை இல்ல?

ஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்குவிருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது?
இந்த கேள்விக்கு பதில் ஆட்டோகிராப் படத்துல சிநேகாவுக்கு ஒரு காதல் தோல்வி இருக்கும் . சேரன பார்த்துதான் சினேகா அவங்க பழைய காதலன் கிட்ட இருந்து மீண்டு வந்தேன் என்று சொல்வாங்க .
இதே இடத்துல வேற ஒரு படத்த பொருத்தி பாக்கணும் தோணிச்சு
அந்த படம் அவள் அப்படித்தான்
ஸ்ரீப்ரியா - ரவீந்தரின் காதல் தோல்விக்கு பிறகு சிவசந்திரன் ஸ்ரீப்ரியாவ ஏமாத்தி கடைசில "நீ ஏன் தங்கச்சி " அப்படின்னு சொல்வார் அதுக்கு ஸ்ரீப்ரியா ஒரு பதில் சொல்வாங்க - அருமையான பதில் .

பெண்களின் ஆட்டோகிராப் தெரிந்து கொண்டால் அவள் நிலைமை என்னவாகும் என்பதற்கு எடுத்துகாட்டு அவள் அப்படித்தான்.
இதுதான் பெண்களின் ஆட்டோகிராஃப் .மிக பெரிய வெற்றி .இயக்குனர் ரூத்தரையா தான் காணாம போய் விட்டார் .

இன்னும் பெண்களுக்கு ஆதரவா பெண்களை மையமாக வந்த படங்கள்
அவள் ஒரு தொடர்கதை , அவர்கள் , அபூர்வ ராகங்கள் - எல்லா படமும் வெற்றி படங்கள் வரதட்சனை கொடுக்க மாட்டேன் என்று சொன்ன ஏன் கல்லூரி தோழி அதிக பணம் வரதட்சனை கொடுத்து அமெரிக்காவில் இருக்கிறார் .
"நான் வீட்டுல இருந்து குழந்தைய பார்த்துகிறேன் நீ வேலைக்கு போ இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் " என்று ஒரு வாத போட்டியில் நான் சொன்னதால் எனக்கு முறிந்த "நெருங்கிய " நட்பும் உண்டு .
"இந்த பொண்ணுங்களை படிக்க அனுப்ப கூடாது " என்று சொன்ன நண்பனிடம் "முதலில் உன் தங்கையின் படிப்பை நிறுத்து அதற்கு பிறகு மற்றவர்களை தடுக்கலாம் " என்று நான் சொன்னதால் இரண்டு மாதங்கள் இருவரும் பேசி கொள்ளவில்லை .

ஆண்கள் வளருவதே பெண்களிடம் தான் முதலில் ஆண் - பெண் பேதங்களை விதைப்பதே பெண்கள் .

ஆண் அழுதா "ஆண் பிள்ளை அழ கூடாது என்று தடுத்து விடுவார்கள் "
நான் உங்களிடம் கேட்கிறேன் "அப்ப நான் அழ வேண்டும் என்றால் பெண்ணாக தான் பிறக்க வேண்டுமா ?"
பெண் இயக்குனர் எடுத்த விஷ்வதுளசி என்ற படத்தை பெண்கள் எத்தனை பேர் பார்த்து இருக்கிறார்கள் ?
ஜானகி விஸ்வநாதன் எடுத்த குட்டி படம் எத்தனை பேருக்கு தெரியும் ?
நமக்கு தெரிந்தது எல்லாம் மீரா நாயரும் , தீபா மேத்தாவும் தான் .
முதலில் பெண்களுக்கு படம் எடுக்க ஒரு பெண் கூட தமிழ்நாட்டில் இல்லை (பிரியா , ரேவதி இவர்கள் எல்லாம் கணக்கில் இல்லை )
பெண்களுக்கு படம் எடுக்க ஆண்கள் தான் இருக்கிறார்கள் .பெண்கள் வந்து ஆட்டோகிராஃப் படம் எடுத்தால் நாங்கள் கை தட்டி வரவேற்ப்போம்.

ஆனால் அதை எடுக்க ,ஆதரிக்க எந்த பெண்களுக்கும் தைரியம் இல்லை .
"நான் முன்பு இருந்த குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறேன், எல்லா பிரச்சினைக்கும் காரணம் அந்த முறையை தடை செய்ததே! " - இப்படி ஒரு பின்னுட்டம் வந்த வருத்தத்தில் எழுதிய பதிவு இது .
பிராவோ, நேத்து மேட்ச் பார்த்த எல்லாரும் சொன்ன ஒரே வார்த்தை இதுதான். கிறிஸ் கெயில் தான் அதிரடி சூறாவளி. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் மொத்தமா அவரை தான் நம்பி இருக்காங்க. அவரை மட்டும் அவுட் ஆக்கிட்ட இந்தியா வின் ஆகிடும்னு எல்லோரும் (அட, நானும் தாங்க) சொன்னாங்க. ஆனா எல்லோர் கண்ணுலையும் மண்ண தூவிட்டு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட வாங்கிட்டு போய்ட்டாரு பிராவோ.

சரி மொதல்ல விஷயத்துக்கு வருவோம். நேத்து இந்தியா மேட்ச் அப்படிங்கறதால தூக்கத்துக்கு டாட்டா சொல்லிட்டு டி.வி. முன்னாடி உட்காந்திருந்தேன். லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம். கிரிக்கெட்டோட தாயகம். டோனி டாஸ் ஜெயிச்சாரு. எல்லாரும் எதிர் பார்த்த மாதிரியே பேட்டிங் செய்றோம்னு சொன்னாரு. வந்தாங்க நம்ம புது ஓபனிங் ஜோடி. அவ்வளவுதாங்க ஞாபகம் இருக்கு. திடீர்னு பார்த்த மூணு விக்கெட் போச்சுன்னு சொல்றாங்க. நம்ம ஆளுங்கள நம்பவே முடியல.

சரி இனிமேலாவது அடிப்பாங்கன்னு ஒரு நப்பாசைல ஒரு டீய குடிச்சிட்டு வந்து உட்கார்ந்தேன். ம்ஹும். அடிக்கவே மாட்டேன்னு வீட்ல சத்தியம் பண்ணிட்டு வந்திருப்பாங்க போல இருக்கு. அஞ்சாவது ஓவர்ல அடிச்ச 4 தான். அதுக்கப்புறம் ஒரு 4 அடிக்க நம்ம ஆளுங்களுக்கு 7 ஓவர் தேவ பட்டுச்சு. நல்ல வேலையா கடைசி நேரத்துல யுவராஜ் கொஞ்சமாவது அடினா என்னன்னு சொன்னாரு. யுஸுப் அண்ணன் அவசரப்பட்டு அவுட் ஆகிட்டாரு. சரி யுவராஜ் இருக்காரேன்னு மனச தேத்திகிட்டா அவரும் அவுட் ஆகி ஷாக் கொடுத்துட்டாரு. நல்ல வேலை பஞ்சாப் சிங்கம் பாஜ்ஜிகும் பேட்டிங் தெரியும். அதனால ஒரு நல்ல ஸ்கோர் எடுத்தோம்.

அப்புறம் உள்ள வந்தாங்க வெஸ்ட் இண்டீஸ் டீமோட ஒபனர்ஸ். வந்தாங்க அடிச்சாங்க. அவ்வளவுதான் தெரியும். பொசுக்குன்னு வெஸ்ட் இண்டீஸ் வின் அப்படின்னு சொல்லிட்டாங்க.

சரி மேட்டர்க்கு வருவோம். இந்தியா ஏன் தோத்தாங்க? பேட்டிங் சரி இல்லையா இல்ல பௌளிங்க்ள ஏதாவது பிரச்சனையா?

நீங்க தான் சொல்லணும் .......

வரட்டா.... நாளைக்கு பார்ப்போம்....

கருத்துகள் இல்லை: