[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009]விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் கடந்த 18-ந்தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 7,200 விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர்.
இவர்களில் 1,600 பேர் பெண் விடுதலைப்புலிகள். இவர்கள் அனைவரும் அரசின் பாதுகாப்பில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய முடிவு செய்துள்ளனர்.
2 பேட்ஜ் விடுதலைப்புலிகள் சரண் அடைய உள்ளனர். இந்த தகவலை அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் என்னை தொடர்பு கொண்டனர். இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர்.
எனவே, இதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருகிறேன். அவர்களை சமுதாயத்தில் ஒரு அங்கமாக சேர்க்க விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
[ செவ்வாய்க்கிழமை, 26 மே 2009,]இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார்
விடுதலைப் புலிகள் சிலர் அகதிகள் முகாம்களில் ஊடுருவியிருப்பதாகவும், சிலர் வன்னிக் காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் மேலும் சிலர் கிழக்கே சிறு குழுக்களாக இருப்பதாகவும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக
கூறியஅவர், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும்விடுதலைப் புலி உறுப்பினர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சரணடைய முடியாது -விடுதலைப் புலிகள்
காவல் துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் சிறு சிறு குழுக்களாக விடுதலைப் புலிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
தமது துப்பாக்கிகளை மவுனிப்பது என்ற நிலை நீடித்தாலும் கூட, மக்களின் தேவைகளுக்காக அரசியல் முன்னெடுப்புக்களில் பங்கு பெறுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளதாகவும் தயா மோகன் கூறினார்.
[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009]வடபகுதியில் இடம்பெற்ற போரில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதற்கு தெரிவித்திருக்கும் விருப்பத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகள் தமது 'பயங்கரவாத நடவடிக்கைகளை'க் கைவிட்டுவிட்டார்கள் என்பதை நம்ப முடியாது எனவும் பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் கோத்தபாய, "பல வருடகாலமாக வன்முறைகளில் ஈடுபட்ட பின்னர் விடுதலைப் புலிகளால் ஒரு ஜனநாயக வழிமுறையில் இணைந்துகொள்ள முடியும் என நான் நம்பவில்லை" எனவும் தெரிவித்திருக்கின்றார்.
"வடபகுதியில் இடம்பெற்ற போரில் பாரிய இழப்புக்களைச் சந்தித்திருக்கும் நிலையில், வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புவதாக" விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகக் கேட்டபோதே அதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திட்டவட்டமாக நிராகரித்தார்.
"விடுதலைப் புலிகள் தொடர்பாக நான் எந்தவகையிலும் அக்கறை காட்டவில்லை" எனவும் தெரிவித்த கோத்தபாய, "இந்த நாட்டில் ஜனநாயகப் பாதையில் செல்லும் பெருமளவு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றன" எனவும் சுட்டிக்காட்டினார்.
"சிலர் நினைக்கின்றார்கள் இராணுவத்தின் பணி முடிவடைந்துவிட்டது என்று. ஆனால் அவ்வாறு இல்லை. அந்தப் பகுதி முழுவதிலும் இருந்தும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அத்துடன், காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் யாராவது மறைந்திருக்கின்றார்களா என்பதையும் தேடிப்பார்க்க வேண்டியிருக்கின்றது" எனவும் கோத்தபாய ராஜபக்ச இந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
"விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்" என மேற்கு நாடுகளைக் கேட்டுக்கொண்ட அவர், "அங்குள்ள புலிகளின் தலைவர்கள்தான் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கொள்வனவு செய்து அனுப்பிவைப்பதற்கு பொறுப்பாக இருந்துள்ளார்கள் என்பதால் அவர்களைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார்.
சோனி நிறுவனம் விளையாட்டு சேனலை புதிதாக துவக்க உள்ளது.செய்தி, பொழுது போக்கு என எட்டு சேனல் களை தந்து கொண்டிருக்கும் சோனி நிறுவனம் புதிதாக விளையாட்டு சேனல்களை துவக்க முடிவு செய்துள்ளது. சோனி நிறுவனத்தின் 'செட் மேக்ஸ்' சேனல் மூலம் இதுவரை விளையாட்டு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப ஒன்பது ஆண்டு காலத்துக்கு சோனி நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இதே போல நியூசிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மற்றும் எப்.ஏ.,கோப்பை உள்ளிட்ட போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. தனியாக விளையாட்டு சேனலை துவக்கி, கால்பந்து, கோல்ப், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்யவும், அதன் மூலம் கணிசமான விளம்பரங்களை பெறவும் சோனி முடிவு செய்துள்ளது.இது குறித்து இந்நிறுவன நிர்வாக அதிகாரி என்.பி.சிங் குறிப்பிடுகையில், ' இந்த ஆண்டு இறுதிக்குள் விளையாட்டு சேனலை துவக்க உள்ளோம். தென் மாநிலங்களில் அந்தந்த மொழி சேனல்களை துவக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.நன்றி : தினமலர்
இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் சிலர் அகதிகள் முகாம்களில் ஊடுருவியிருப்பதாகவும், சிலர் வன்னிக் காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் மேலும் சிலர் கிழக்கே சிறு குழுக்களாக இருப்பதாகவும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக கூறியஅவர், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும்விடுதலைப் புலி உறுப்பினர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். காவல் துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய [...]
இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் சிலர் அகதிகள் முகாம்களில் ஊடுருவியிருப்பதாகவும், சிலர் வன்னிக் காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் மேலும் சிலர் கிழக்கே சிறு குழுக்களாக இருப்பதாகவும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக கூறியஅவர், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும்விடுதலைப் புலி உறுப்பினர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். காவல் துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய [...]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக