சென்ற வாரம் நம்பிக்கை என ஒருப் புனைவு எழுத முற்பட்டேன். தனி ஈழம் உருவாகும் என நம்பிக்கை ஏற்படும் வகையில் அதை எழுத நினைத்து டிராஃப்ட் தயாரித்து வைத்திருந்தேன். அன்று மெட்ராஸ் ஐ போல என் கண்கள் சிவந்து விட்டதால் நண்பன் ஒருவனை வேறு ஒருப் பதிவை பதிவேற்ற சொன்னேன். அவன் இதை பதிவேற்றிவிட்டான். நானே பின்னூட்டத்தில் இதை இன்னும் மெருகேற்ற வேண்டுமென சொல்ல, தொடர்ந்து பல நண்பர்கள் அழுத்தியும், அதட்டியும் அதையேச் சொன்னார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது "இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது?"
*************************************************
நடிகர்கள் உண்ணாவிரதம் நல்லபடியாய் முடிந்தது. எதற்காக இருந்தோம் எனத் தெரியாமலே அஜித்தும் சாப்பிடாமல் இருந்து தன் முறை வரும்போது விளக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தார். ஈழத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இறுதியாக தேசியகீதம் வாசிக்கப்பட்டபோது ஆளுக்கொரு திசையில் வசதிக்கேற்ப நின்றனர். பத்திரிக்கையாளர்களுக்கு இதிலும் சிறப்பு சலுகைப் போல. அவர்கள் அப்போதும் படமெடுக்கும் பணியைத் தொடரலாம். அப்போதுதானே தேசியகீதத்தை அவமதித்த முன்னனி நடிகரென கிசுகிசு எழுத முடியும்.
*************************************************
கடந்த மாதம் எனக்கு நல்லபடியாய் போனது. 22,000 ஹிட்ஸ் என்பது மட்டுமல்ல காரணம். 2 மீள்பதிவைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் எழுதியுள்ளேன். அதிலும் தாமிராவின் கட்டளைக்கேற்ப மொக்கைகள் குறைக்கப்பட்டன.வெண்பூ போல பலர் உரிமையுடன் குறைகளை சொல்லி வருகின்றனர். வீக் எண்ட் காதல் பதிவு வரவில்லையெனில் ராப் எங்கே எனக் கேட்கிறார். அனைத்துப் பதிவிற்கும் தவறாமல் வந்து கருத்துச் சொல்லும் தல நர்சிம்.இன்னும் நிறைய நண்பர்கள். ஒரு அங்கீகாரம் கிடைத்ததுப் போல் உணர்கிறேன். புதுகை. அப்துல்லா என்ற மாமனிதரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வயதில் மட்டுமல்ல உருவத்திலும் அவர என்னை விட பெரியவர் என்றபோதும் உரிமையுடன் அணைத்து பேசிய விதம் வெகுவாய் கவர்ந்தது. இவரைவிட பெரியவரான தாமிரவை எப்படி சொல்லலாம். மாமாமனிதர் என்றால் தவறாகி விடுமோ? விடுங்க சகான்னே சொல்லிக்கலாம்.
*************************************************
வலைச்சரத்தில் அப்துல்லா அண்ணே எழுதிய இந்தப் பதிவைப் படிக்காதவர்கள் உடனே படிக்கவும். நானும் என் நண்பர்களிடத்தில் இதைப் பற்றி பேசினேன். எப்படியாவது ஒரு தடவையாவது எழுதனும். சொந்தமா எழுதறதுதான் உருப்படியாய் இல்லை. இதையாவது உருப்படியாய் எழுதுவோம். தொடங்கி வச்ச எஸ்.கேக்கும் பதிவாய் போட்ட அனைவருக்கும் நன்றி.
*************************************************
சந்தேக சந்திராசாமியின் இடம்.
இந்த வார சந்தேகம்:
என்னோட பெரியப்பாவோட மனைவியின் மைத்துனனின் மூத்த மகனின் இளையத்தம்பி தான் நான். அப்படியெனில் என் அண்ணனின் அப்பாவோட அண்ணியின் கனவனின் தம்பியோட இளைய மகன் மகன் யார்?
அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.அதுதான் அந்நாட்டுக்கும் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் இந்த போராட்டம் உணர்வு பூர்வமானது; உணர்ச்சிபூர்வமானது. இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகம் நடத்தும் 3ஆவது போராட்டம். இது இலங்கையின் காதுகளுக்கு எட்ட வேண்டும்.
இங்கே பேச சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டுப்பாடு இருந்தால் தான் மனம் சொன்னதை கேட்கும். அப்போது தான் எதையும் சாதிக்க முடியும். வெற்றி கிடைக்கும்.
இலங்கைத் தமிழர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்களின் பேச்சே சங்கீதம் போல் இருக்கும். பழகுவதற்கு அவர்கள் இனிமையானவர்கள். அத்தகையவர்கள் இன்று சொந்த மண்ணில் அடித்து கொல்லப்படுகிறார்கள்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களுக்கு எதிராக நடத்தும் இந்த போரில் இலங்கை ராணுவத்துக்கு இன்று வரை வெற்றி கிட்டவில்லை. அவர்கள் ஆண் பிள்ளைகள்தானா என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அல்லது நிறுத்த வைக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது. இல்லை என்றால் உறவினர்களை பறி கொடுத்த தமிழர்களும்இ மண்ணில் உதிரம் சிந்திய பெண்கள்இ குழந்தைகளின் ஆன்மாவும் அவர்களை சும்மா விடாது.
யுத்தத்தில் அழிக்கப்படுபவர்கள் புதைக்கப்படவில்லை; அங்கே விதைக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுமை தொடர்ந்து நடந்தால் இலங்கை என்றுமே உருப்படாது. இலங்கையில் மட்டுமல்லஇ எந்த நாட்டிலும், எந்த மண்ணிலும் அப்பாவி குழந்தைகள் பெண்கள், முதியோர்கள் தாக்கப்படக் கூடாது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கான ரூ. 10 லட்சத்தை அளிப்பதாக அறிவித்தார்
புகைப்படங்களை Edit செய்வதற்கு Adobe Photoshop அருமையான மென்பொருள் பயன்பாடு என்பதை மறுக்க இயலாது. ஆனால் சில நேரங்களில் எங்காவது தொலைவில் நாம் இருக்கும்போது 'இணைய விடுதிகளில்- Browsing center' உலாவிக் கொண்டிருக்கும்போது நமக்கு Photoshop தேவைப்படலாம். அந்த நேரங்களில் அந்தக் கணினியில் போட்டோஷாப் Install செய்யப்படாமல் இருந்திருக்கும்.
நமக்கோ மிக அவசரம். அவசரமாக போட்டோக்களை Edit செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.
இந்த நேரங்களில் நமக்கு உதவுவதற்காக Online Photo Editorகள் உள்ளன. இணையத்தில் நேரடியான தொடர்பில் இருந்தபடியே எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கம் (Download) செய்யாமல் போட்டோக்களை எடிட் செய்வதற்காக இந்தத்தளங்கள் உதவுகின்றன.
http://www.pixlr.com/app/
http://fotoflexer.com/
http://www.sumopaint.com/app/
http://www.splashup.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக