ஆணதிக்கம் அதிகமாக உள்ள இந்தியாவில் அவசியம் கொண்டாட வேண்டிய தினம் அல்லவா?. உள்குத்து இருக்கிறதோ என்று யாரும் தயவுசெய்து நினைக்கவேண்டும்.
ஆண்கள் தினம் ஒவ்வொருவருடம் முதல் சனிக்கிழமை அன்று நவம்பர் மாதத்தில் கொண்டாட படுகிறது. இதனை சோவியத் யூனியனின் பிரசிடண்ட் Mr.Mikhail Gorbachev ஆவால் பரிந்துரைக்கப்பட்டு United Nations ஆல் ஆதரிக்கப்பட்டது. உலகத்தில் ஆண்கள் சமுதாயத்தில், அரசியலில், பொருளாதாரத்தில் செய்துவரும் சாதனைகளைக்காக பரிந்துரைக்கப்பட்டது.
நாமும் (பெண்கள், குழந்தைகள்) அனைவரும் நம்மை சுற்றியுள்ள நமக்கு எப்போதும் எதிலும் துணையாக இருக்கின்ற அப்பா, அண்ணன், தம்பி, கணவன், மகன், மற்றும் நண்பர்களுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாமே...
உலக ஆண்கள் தினத்தில் எல்லா ஆண்களையும் அன்புடன் நானும் அணில் குட்டியும் வாழ்த்துகிறோம்..!!
அணில் குட்டி அனிதா:- என்னாச்சி கவிதாக்கு.. கூடவே தான் இருக்கேன்.. ஆனாலும் பிரியல.. சரி..இன்னொரு நாள் பாத்துக்கலாம்.. அண்ணாச்சிங்க, தம்பிச்சிங்க.. அப்பாச்சிங்க..புள்ளங்கச்சிங்க..எல்லாத்துக்கும் என்னோட Hearty "Men's Day Wishes" ங்கோ!! Enjoy'ங்கோ...!! லேட்'டானாலும் நானும் கவியும் லேட்டஸ்ட் ங்கோஓஒ..!!
பீட்டர் தாத்ஸ் :- Trust men and they will be true to you; treat them greatly and they will show themselves great.
(Naughty Meow)இதை creativity என்று மெச்சி கொள்வதா தலையில் அடித்து கொள்ளவா?ஆனாலும் ரசிக்கலாம்....
--------------------------
சரி வழக்கமான ஜோக்ஸ் இனி...
நர்ஸ்:சார் நான் மாசமா இருக்கேன் சம்பளம் தாங்க...
டாக்டர்:என்னம்மா சொல்லற நீ மாசமா இருக்கிறதுக்கு நான் ஏன் சம்பளம் தரனும்...
நர்ஸ்:நீங்கதானே டாக்டர் மாசமானா சம்பளம் தரேன்னு சொன்னிங்க.....
------------------------
Who is a good friend?
A good friend is one who don't let you to do stupid things .....alone...
------------------------
நன்றி.....கூல்
மூலம் - ஜலாலுத்தீன் ரூமி
தமிழில் - ராகவன் தம்பி
************************
ஒரு தாழ்வாரத்தில்
தேகம் இரண்டும்
ஜீவன் ஒன்றாகவும்
கூடிச் சுகித்து
அமர்ந்திருக்கிறோம்
நீயும் நானும்.
ஊற்றெடுக்கும் உயிராய்
சலசலக்கும் நீரோட்டத்தில்
பறவையின் பாடல்களில்
உணர்கிறோம் நம்மை நாம்
இத்தோப்பின் வனப்பாய்
நீயும் நானும்.
நம்மைக் கண்காணிக்கும்
நட்சத்திரங்களுக்கு நாம் காட்டுவோம்
மெல்லியதோர் பிறைநிலவாய்த்
திகழ்வது என்னதென்று.
அசைபோடும் ஊகங்களை
உதறச் செய்து
நம்மை மறந்து
நம்மோடு ஒன்றாய்
இணைந்திருப்போம்
நீயும் நானும்.
ஓருருவாய் ஓர்குரலாய்
ஓரிணையாய் நம் சிரிப்பொலிக்க
தூவட்டும் சொர்க்கத்தின் கிளிகள்
இனிமையை சர்க்கரையாய்
இப்பூமியிலும்
காலம் மறந்துபோன
இனிய நிலங்களிலும்.
*********************
Thanks:sanimoolai.blogspot.com
அந்தக் கிராமத்தில் அனைவரையும் சொக்கவைக்கும் அழகுடன் வலம் வந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் திடீரென்று கர்ப்பம் தரித்தாள். பெற்றோரும் உற்றோரும் அந்தக் குழந்தையின் தகப்பன் யார் என்று அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்திக் கேட்டனர். கிராமத்தில் யார் வம்புக்கும் போகாது பெரும்பாலான நேரத்தைத் தியானத்தில் கழித்து வரும் ஜென் துறவி ஒருவரைக் கை காண்பித்தாள் அந்தப் பெண்.
மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு அந்த ஜென் துறவியிடம் சென்று அவரை அடித்து உதைத்துக் கேட்டார்கள். அவர் சிரித்துக் கொண்டே “அப்படியா?” என்று கேட்டார். ”என்ன திமிர் பாருங்கள் இவனுக்கு?” என்று கடிந்து கொண்டு குழந்தை பிறந்ததும் அந்தத் துறவியின் கைகளில் ஒப்படைத்து “இந்தக் குழந்தைக்கு நீ தான் தகப்பன். இதனை வளர்ப்பது உன் பொறுப்பு” என்று குழந்தையை அவருடைய கரங்களில் திணித்தனர். புன்னகை தவழும் முகத்துடன், “அப்படியா?” என்று கேட்டுக் குழந்தையை வாங்கிக் கொண்டார்.
அந்தக் குழந்தையைத் தன் குடிசையில் அன்புடன் வளர்க்கலானர் துறவி. சில நாட்களுக்குப் பிறகு, குற்ற உணர்வு தாளாத அந்தப் பெண் அழுது கொண்டே, அந்தத் துறவி அப்பாவி என்றும் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் தான் அக்குழந்தைக்குத் தகப்பன் என்றும் அந்தப் பையனைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான் ஊருக்குப் பொய் சொன்னதாகவும் தெரிவித்தாள். ஊரே மீண்டும் திரண்டு போய் அத்துறவியின் குடிசை முன்பு நின்றது. எல்லோரும் அவரைப் பணிந்து மன்னிப்புக்கேட்டு நடந்ததை வருத்தத்துடன் அவருக்குத் தெரிவித்தார்கள். துறவி அதே புன்னகையுடன் அவர்களைக் கேட்டார்,
“அப்படியா?”
***********************
ஆபீஸ்ல ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தியா போச்சு! அதான் வலைப்பூ பக்கம் வர முடியல. தினமும் இந்த பேங்க் ஊத்திகிச்சு, அந்த பேங்க் ஊத்திகிச்சுன்னு சொல்லி பீதிய வேற கிளப்பறாங்க. அடுத்த வருஷம் இதை விட மோசமா இருக்கும்னு வேற சொல்றாங்க. இந்த மாதிரி நிலமையில ஓபாமா வந்து என்ன செய்ய போறாரோ?
இப்போவெல்லாம் டிவி கூட அவ்வளவோ பார்க்கறது இல்ல. அப்படியே பார்த்தாலும் விஜய் டிவி தான். சரி, சன் டிவி பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, எப்படி போயிட்டிருக்குன்னு பார்ப்போம்னு ஒரு நாள் சும்மா சேனலை மாத்தி பார்த்தேன். ஏதோ ஒரு மெகா சீரியல் போயிட்டிருந்துது. ஒரு அம்மா கீழ ஒக்காந்துட்டு அழுதுகிட்டு இருந்தாங்க. அவங்க பையன் அவங்களை சாப்பிட கூப்பிடறான். அதுக்கு அந்த அம்மா, "அக்கா ஜெயில்ல இருக்கும் போது எப்படிடா சாப்பிட முடியும்?னு" சொன்னாங்களோ இல்லையோ, வுடுங்கடா சாமின்னு சேனலை மாத்திட்டேன்!
அடப்பாவீங்களா....இன்னும் இந்த மாதிரி தான் ஓட்டிட்டு இருக்கீங்களா? கீழ இருக்க இந்த வீடியோ காட்சியை பாருங்க. இதுல பேசிட்டு இருக்கறது ஒரு பாட்டியும் அவங்க பேத்தியும். இரண்டு பேறும் கணவனை இழந்தவர்கள். ஆனா இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியுதா? இதுவும் இன்னும் மாறலைங்க;)
மாறும் மனம்
******************
பெண் : ஆண்கள் மனமே அப்படிதான் - அது
அடிக்கடி மாறும் இப்படித்தான் (ஆண்)
திருமணமாகிடும் முன்னே ஒன்றும்
தெரியாதவர்போல் இருப்பாங்க
திருமணமாகி மனைவியைக் கண்டால்,
வெடுக்கின்னு முறைப்பாங்க
ஆண் : ஹா! ஹா!
பெண் : ஆண்கள் மனமே அப்படித்தான் - அது
அடிக்கடி மாறும் இப்படித்தான்
ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான் - இந்த (பெண்)
மணமாகு முன்னே வாயும் பேசாமல்
மதிப்பு மரியாதை தருவாங்க - திரு
மணமானபின்னே வரிந்துகட்டிக் கொண்டு
குஸ்திக்கும் வருவாங்க
பெண் : ஓஹோ ஹோ ஹோ!
ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்
பெண் : அன்பு கனிந்திட கைகளை நீட்டி
அருகினில் வாருங்க
ஆண் : ஓஹோ!
பெண் : இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
எட்டியும் போவாங்க (ஆண்)
ஆண் : போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
பொறாமை யடைவாங்க
பெண் : ஆமா!
ஆண் : போனா போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
பொறுமையைக் குடைவாங்க (பெண்)
பெண் : மானே தேனே என்பதெல்லாம் - ஒரு
மாதம் சென்றதும் மாறிடுதே
ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும் - ஒரு
வாரம் சென்றதும் ஓடிடுதே
பெண் : ஹா…ஹா…ஹா…
ஆமைகளென்ற பெண்களை எண்ணி
ஆட்டம் போடுவாங்க
அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
அடிக்கவும் துணிவாங்க! (ஆண்)
ஆண் : இந்தப்
பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்
[நான் வளர்த்த தங்கை,1958] பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Pattukottai Kalyanasundaram: 1930 - 1959
காதல் சுவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக