திங்கள், 3 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-02

ஜினி தன் ரசிகர்களைச் சந்திப்பது உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகார்ப்பூர்வ அழைப்புகளும் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. ரசிகர்களில் பலரும் இன்றே சென்னையில் முகாமிடத் துவங்கிவிட்டனர்.

மீடியாவில் ரஜினி - ரசிகர் சந்திப்பு குறித்து சத்யநாராயணாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.

அதன் விவரம் (தினத்தந்தி மற்றும் தட்ஸ்தமிழ்):

ரசிகர்களை நாளை சந்திக்கிறார் ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை – திங்கள்கிழமை- காலை தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

தங்கள் தலைவர் ரஜினியைச் சந்திக்க வேண்டும், தங்களது உணர்வுகளை அவருக்குத் தெரிவிக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் தனியாக அரசியல் கட்சி தொடங்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இறுதியான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், கோவையில் அவருடைய ரசிகர்கள் தாங்களாகவே கட்சி தொடங்கி, கொடியும் அறிமுகம் செய்தார்கள்.

எந்திரன் படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்த ரஜினிகாந்த், இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஒரு அறிக்கை விடுத்தார்.

என் பெயரில் கட்சி, கொடி எதுவும் இருக்கக் கூடாது. ரசிகர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சிகளில் இருக்கலாம். அரசியலுக்கு வரும்படி என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் அரசியலுக்கு வந்தால், யாராலும் அதை தடுக்க முடியாது. ஒருவேளை அரசியலுக்கு வரும் சூழல் ஏற்பட்டால் அப்போது என் ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை என்னோடு அழைத்துக் கொள்வேன், என அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்த அறிக்கைக்குப் பிறகு, ரசிகர்கள் பொறுமை காத்தனர். தங்கள் தலைவரை எப்படியும் பார்த்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் விடாமல் வலியுறுத்தி வந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தை, மன்ற பொறுப்பாளர் சத்யநாராயணா, ரஜினிகாந்திடம் தொடர்ந்து எடுத்துக் கூறி வந்தார்.

அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. ரசிகர்களை சந்தித்துப் பேச சம்மதித்து விட்டார் ரஜினிகாந்த்.

நாளை காலை 10 மணிக்கு சந்திப்பு!

அதன்படி, அவர் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களை சந்தித்துப் பேசுகிறார்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 10 பேர் வீதம் மொத்தம் 320 பேர்களை ரஜினிகாந்த் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிகிறார். இதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ரசிகர் மன்றங்களின் இன்றைய நிலை, புதிய மன்றங்களுக்கு அனுமதி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினியிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்லத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் ஓம் சேகர், ரஜினி கணேசன் போன்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்கான விரிவான ஏற்பாடுகளை, ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணா செய்து வருகிறார்.

இதுகுறித்து சத்யநாராயணா கூறியதாவது:

இது அதிகாரப்பூர்வமான அறிவிப்புதான். முதலில் மாவட்டத்துக்கு 7 பேர் வீதம் சந்திப்பதாகக் கூறினார் தலைவர். ஆனால் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அதை மறுபரிசீலனை செய்துள்ளார். காலை பத்து மணிக்கு சந்திப்பு தொடங்குகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் தலைவரிடம் தங்கள் உணர்வுகளைச் சொல்ல நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம்.

http://www.envazhi.com

கன்னியாகுமரி மாவட்டத்தின் 53ம் பிறந்தநாளை முன்னிட்டு hikanyakumari.com ரூபாய் 25,000 மதிப்புள்ள Great Indian Blog Contest ஐ நடத்துகிறது.

உங்கள் பிளாகை சமர்பிக்க வேண்டிய இங்கே செல்லவும்.

****One User can submit only one blog / language.****

உங்கள் பிளாகில் இந்த பதிவை copy paste செய்து உங்கள் பிளாகின் visitorsக்கும் இந்த போட்டி பற்றி அறிவியுங்கள்.

இந்த பதிவு பிடிச்சிருக்கா! Then Bookmark This Page
Add 'ரூபாய் 25,000 மதிப்புள்ள பிளாக் போட்டி (Blog Contest)' to Del.icio.usAdd 'ரூபாய் 25,000 மதிப்புள்ள பிளாக் போட்டி (Blog Contest)' to diggAdd 'ரூபாய் 25,000 மதிப்புள்ள பிளாக் போட்டி (Blog Contest)' to redditAdd 'ரூபாய் 25,000 மதிப்புள்ள பிளாக் போட்டி (Blog Contest)' to TechnoratiAdd 'ரூபாய் 25,000 மதிப்புள்ள பிளாக் போட்டி (Blog Contest)' to Yahoo My WebAdd 'ரூபாய் 25,000 மதிப்புள்ள பிளாக் போட்டி (Blog Contest)' to Stumble UponAdd 'ரூபாய் 25,000 மதிப்புள்ள பிளாக் போட்டி (Blog Contest)' to Google BookmarksAdd 'ரூபாய் 25,000 மதிப்புள்ள பிளாக் போட்டி (Blog Contest)' to BloglinesAdd 'ரூபாய் 25,000 மதிப்புள்ள பிளாக் போட்டி (Blog Contest)' to Live-MSN

அரியாலை, முள்ளிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெற்ற சம் பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் 'சயனைட்' உட்கொண்டு மரணமானார். மற்றொரு இளைஞன் படையினரின் சூட்டுக்கு இலக் காகி மரணமானார். இச் சம்பவம் தொடர்பாக யாழ்.நீதிவான் இ.வசந்தசேனன் சம்பவ இடத்தில் நேற்று மாலை விசாரணைகளை மேற் கொண்டார்.

குறிப்பிட்ட பகுதியில் படையினர் ரோந்து சென்றனர். அந்தப்பகுதியில் உள்ள பற்றைக்குள் பதுங்கியிருந்த நால் வரைக் கண்ட படையினர் அவர்களை விசா ரணை செய்ய முற்பட்டனர்.
அப்போது ஒருவர் 'சயனைட்' அருந்தி அந்த இடத்திலேயே மரணமானார்.

மற்றைய மூவரும் தப்பி ஓடினார்கள். படையினர் அவர்களைக் கலைத்துச் சென் றனர் அவர்களில் ஒருவர் படையினரை நோக்கி வேட்டுக்களை தீர்த்துக் கொண்டு ஓடினர். படையினர் அவர் மீது பதில் தாக்குதலை நடத்தினர். அப்போது அவர் கொல்லப் பட்டார்.
'சயனைட்' அருந்திய இளைஞனிடம் இருந்து யாழ்.பல்கலைக்கழக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டன.

அந்த அடையாள அட்டைகளின் மூலம் அவர் யாழ்.பல்கலைக்கழக பீடத்தின் மூன்றா வது ஆண்டு மாணவன் செல்லத்துரை புரு ஷோத்தமன் என்று அடையாளம் காணப் பட்டுள்ளது- இவ்வாறு நீதிவான் விசார னையின் போது பொலிஸார் தெரிவித் தனர்.
சடலங்களை பிரேத பரிசோதனைக் காக யாழ்.ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கு மாறு நீதிவான் உத்தரவிட்டார்.

நிவாரண நிதியோடு முடங்குமா தமிழக எழுச்சி?

தொடர்ந்து வாசிக்க

தமிழ்ச்செல்வனின் கொலை அரசியல் தீர்வு முயற்சிக்கு விழுந்த பேரடியாகும்

தொடர்ந்து வாசிக்க

பூரண வட்டத்தில் இந்திய மூலோபாயம் புலியை அடக்குவதா? சிங்கத்தை அடக்குவதா?

தொடர்ந்து வாசிக்க

இலக்கை எட்டுமா படைத்தரப்பு?

தொடர்ந்து வாசிக்க

கருத்துகள் இல்லை: