அது நீலமோ,சாம்பலோ
தெரியவில்லை
இரண்டும் கலந்தவோர்
அடர்நிறம் போர்த்திய அதிகாலை !
ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் !
அடர்ந்த வனாந்தரத்துள்
மெல்லிய துயரத்தோடு
தனித்தாடும் ஆண்மயிலின்
இறகுகளின் முனையில்
அந்நிறத்தைக் காணலாம் !
அன்றியும் ,
மாலைவெயிலை
எதிர்கொண்டு நடக்கையில்
சட்டெனத் திரும்பிப்பார்ப்பீர்களாயின்
நிழலில் ஒரு கணம் - அந்
நிறம் தோன்றக்கூடும் !
வனம் கலைத்துச் செல்லும் பறவை
வான்வெளியில்
சிறகுதிர்த்துச் செல்வது போல
உங்கள் மனப்பரப்பில்
அந்நிறம் இப்பொழுது
கிளைபரப்பத் தொடங்கியிருக்கும் !
தொலைதூரப் பெருங்கடல்
தொடுவானுடன் சங்கமிக்கும்
புள்ளியொன்றில் தோன்றுமே…
அதே நிறம்தான் !
விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !
- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
Thanks:Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—
அதையெல்லாம் விடக் கொடுமை... குழப்பத்தின் உச்சம்....
"இலங்கைத் தமிழர்களை, இலங்கை வாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டும்; அப்படி அழைத்தால் இந்தியா உதவும்" என்று ஏதோ ஒரு கூமுட்டை கூறியதை வழிமொழிந்து உணர்ச்சிகரமாக அந்தக் கருத்தை ஆதரித்து. ராதாரவி பேசிக் கொண்டிருந்தார் அப்போது போராட்டத்தை வாழ்த்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அரங்கத்தில் நுழைந்துகொண்டிருந்தார். ராதாரவி பேசியதும், அடுத்து திருமா அவர்களை வருங்கால நடிகர்சங்க உறுப்பினர் என்று வரவேற்று எங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாழ்த்திப்பேச அழைத்தார்கள். வந்தார்... "உங்கள் கட்டுப்பாட்டை மதிக்கிறேன் அதே நேரத்தில், ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்றழைத்தால் தான் இந்திய அரசு உதவும் என்றொரு கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்லர்; பூர்வகுடித் தமிழர்கள்" என்ற உண்மையை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் குழப்ப வாதிகளுக்கு பதில் சொல்லிவிட்டு ரூ.50000 நன்கொடையும் வழங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
நடிகர்கள் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக