வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17

சிலசமயங்களில்
என்னை அடக்கிவிட்டு
நான் மறந்த நிலையில்
என்னயே ஆட்சி செய்கிறது.
சில உணர்வுகளை
மூளை சரி செய்யமுன்
முந்திக்கொள்கிறது
அந்த நச்சுப் பிசாசு.
காறித் துப்பும் அளவிற்கு
காழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !

மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !

பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
"பட்" என்று கட்டவிழ்த்து
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !

சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !

தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
காவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.

கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!

ஹேமா(சுவிஸ்)

அப்பா, அம்மா சின்னப் பசங்க அழுதா, முட்டாய் வாங்கித் தரேன் இப்போ அழுகையை நிறுத்து என்று சமாதானம் செய்வது போல் கல்லூரிப் போட்டி முடிவு அறிவிச்ச உடனே, தோல்வி அடைந்தவர்களை மகிழ்ச்சியுட்டும் விதமாக "அடுத்தப் போட்டியினைப் பற்றிய அறிவிப்பு வரும் திங்கட்கிழமை அன்று எதிர்பாருங்கள்!" என்று ஒரு பிட் போட்டிங்க...

திங்கட்கிழமை பஸ் போட்டோ ஒன்னு போட்டு, "விவரம்: சித்திரை-2ம் நாள்
ஆவலுடன் காத்திருங்கள்" என்று அடுத்த பிட்டு போட்டிங்க... நானும் சித்திரை-2ம் நாள் இருந்த 10 நிமிசத்துக்கு ஒரு முறை போட்டி பக்கத்தை refresh பண்ணி பார்கிறேன், ஒன்னும் வரல :(

என்னைப் போன்ற சின்னப் பசங்களை இப்படி ஏமாற்றலாமா?.... அது தான் உங்கள் கேட்டரலாமனு இந்த இடுகையை பதிவு செய்துள்ளேன். இந்த தடவை நான் சரித்தரம் படைக்கணும் இல்ல... அது தான் கொஞ்சம் முந்திரிக் கொட்டை வேலை செய்துட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுருங்க :).. சின்ன பையன் அறியாம செஞ்சுட்டேன். சீக்கிரம் விபரம் தாங்க... நானும் பிட்டு ரெடி பண்ணனும்.
வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது மோதல்களை முடிவுக்கு கொண்டுவராது சமாதானத்துக்கும் இழுக்கு : அமெரிக்கா - வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மஹிந்தவின் அரசாங்கம் அதிகரித்த ஆர்வத்தையும் கரிசனையையும் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமையில் ஏற்படுத்த வேண்டிய திருத்தங்கள் என்பனவற்றின் பிரதான மையங்களாக இருப்பது இரு கூறுகளாகும். அதில் ஒன்று வட்டார முறைமையாகும். இது இன்றிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களான மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளின் எல்லைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு உதவக்கூடியது மற்றது உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் [...]
பெண்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு ஆண்களைப் போல இல்லை என்றாலும் ஓரளவு மீசை அல்லது தாடி அல்லது கன்னங்களில் அதிக உரோமம் என்று உடலில் அசாதாரண முடி வளர்ச்சிகள் காணப்படுவதை பலரும் அவதானித்திருப்பீர்கள். இன்றைய உலகில் இப்படியான பல பெண்கள் தமதுடலில் அதீத முடி வளர்ச்சியைக் கண்டதும் ஆண்களைப் போல "சேவ்" செய்துவிட்டு அல்லது இரசாயனங்களைத் தடவி மயிர்களைப் பிடுங்கிவிட்டு சாதாரண பெண்கள் போல
சிலசமயங்களில்
என்னை அடக்கிவிட்டு
நான் மறந்த நிலையில்
என்னயே ஆட்சி செய்கிறது.
சில உணர்வுகளை
மூளை சரி செய்யமுன்
முந்திக்கொள்கிறது
அந்த நச்சுப் பிசாசு.
காறித் துப்பும் அளவிற்கு
காழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !

மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !

பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
"பட்" என்று கட்டவிழ்த்து
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !

சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !

தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
காவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.

கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!

ஹேமா(சுவிஸ்)

கருத்துகள் இல்லை: