வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் எல்லைப் புறத்தில் உள்ள நங்கர்கர் மாகாணத்தில் கோக்யானி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 பதிவானது. இதன் பிறகு 2 மணி நேரம் கழித்து 5.1 அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

முதலில் கிடைத்த தகவல்கள்படி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் காயமுற்றுள்ளனர்.


More than a Blog Aggregator

by மாசிலா
ஒட்டியதவள் முதுகில் பாய்ந்த அக்குண்டு
வத்திய ஒரு முளையின் நுனியில் மின்னலிட‌
தட்டிப்பார்த்தானதை மறுமுளை சப்பிய சிசு.

பேருந்து நிலையத்திலிருந்து கோயிலை நோக்கி படைப்பாளிகள்

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் சார்ந்தவர்கள் ஈழத்தமிழர்களின் சாவுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும்படி தங்கள் விருப்பத் தெய்வமான விருத்தாசலம் அருகில் உள்ள வேடப்பருக்குச் சீட்டெழுதிக் கட்டித் தங்கள் வேண்டுதலைத் தெரிவித்துள்ளனர்.


அருள்மிகு வேடப்பர்

வேடப்பர் பொல்லாதத் தெய்வம் எனவும் இந்தப் பகுதியில் நடக்கும் களவு,கொள்ளை, கொடுமைகளால் பாதிப்படைந்தவர்கள் சீட்டெயுதிக் கட்டினால் கொடுமைக்குக் காரணமானவர்கள் தெய்வக் குற்றத்திற்கு ஆளாவார்கள் எனவும் மக்கள் நம்புகின்றனர்.

எதிரி ஒருவேளை பாதிப்பிலிருந்து தப்பவேண்டும் என்றால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து இருவருமாக சமாதானம் ஆகி,ஒன்றாகப் பொங்கல் இட்டு ஒருவருக்கு ஒருவர் உணவை எடுத்து வழங்கிச் சமாதானம் ஆகவேண்டும்.இருவரும் வேண்டடிக்கொண்டே, கட்டிய சீட்டை எடுக்க வேண்டுமாம்.


சீட்டு ஆயத்தமாதல்


சீட்டெழுதிக் கட்டுதல்

இப்படி காலம் காலமாக உள்ள நம்பிக்கையின் அடிப்படையில், இலங்கை மக்களை நாளும் கொன்று குவித்துவரும் இராணுவ வெறியாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தங்களின் விருப்ப தெய்வமான வேடப்பருக்கு 10 ரூபாய் படிகட்டி சேவல் அறுத்து தங்கள் விண்ணப்பதை வைத்துள்ளனர் என்ற செய்தியை பதிவொன்றில் படித்தேன்.

நாட்டுப்புறவியல் ஆய்வாளனான யான் பல ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் சில படங்களையும் இணைத்துள்ளளேன்.Folklore எனப்படும் நாட்டுப்புறவியில்துறை ஆய்வாள்கள்,மானுடவியல்துறை ஆய்வாளர்கள் இது பற்றி விரிவாக ஆராயலாம்.

படங்கள் உதவி: புகழ்

கோடம்பாக்கத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கென்னி என்கிற சீயான் என்கிற விக்ரமுக்கு இன்று பிறந்தநாள்!

சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற விக்ரம், மிகுந்த போராட்டங்களுக்கிடையேதான் இந்த இடத்தைப் பிடித்தார். தனக்குக் கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள மிகுந்த கவனத்துடன் கதைகளைத் தேர்வு செய்தார். அதன் விளைவு இன்று யாருடன் ஒப்பிட முடியாதபடி, தனக்கென ஒரு தனி இடத்தைக் கோடம்பாக்கத்தில் பெற்றுள்ளார்.

விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் கந்தசாமி. தமிழில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் திரைப்படம் என்ற சொல்லுக்கு முழுமையான தகுதியுடன் இந்தப் படம் வெளிவருகிறது.

இந்தப் படத்தில் தனக்கான அனைத்துப் பாடல்களையும் விக்ரமே பாடியுள்ளார். தியாராஜ பாகவதருக்குப் பின், தனக்கான அனைத்துப்பாடல்களையும் தானே பாடிய ஹீரோ என்ற பெருமை இவருக்குண்டு. கமலுக்கும் இந்தப் பெருமை உண்டு என்றாலும், அவர் தனது படங்களில் ஓரிரு பாடல்களோடு நிறுத்திக் கொள்வது வழக்கம்.

இதற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயுடன் அவர் இணையும் ராவண் (அசோகவனம்).

கடந்த ஆண்டு இவருக்கு ஒரே படம். அதுவும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சொதப்பி விட்டது. இந்த ஆண்டு அதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து இரு பெரிய படங்களைத் தருகிறார்.

வாழ்த்துக்கள் விக்ரம்!
அரசியல்வாதிகளுக்குச் சிம்ம சொன்பனமாக மாறியுள்ள ஒரு ஆயுதம் இப்போது உலகளாவிய அளவில் புகழ்பெற்று வருகிறது. அது என்ன ஆயுதம் என்றுதானே கேட்கிறீர்கள்? சப்பாத்துத்தான் அந்த ஆயுதம்.

கருத்துகள் இல்லை: