வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1 லட்சத்து 8000 ஓட்டு எந்திரங்கள் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே. 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 1லட்சத்து 8000 ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தபட இருப்பதாகவும், அதில் 35 ஆயிரம் ஓட்டு எந்திரங்கள் வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு இடங்களில் போட்டியிட அங்கிகாரம் தந்த கலைஞரைப் போல வாக்காளர்களும் தர வேண்டும் தொல். திருமாவளவன் பேச்சு!

சனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் 29.04.2009 - ஆம் நாள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி – குன்னம் சட்டமன்றத் தொகுதியிக்குட்பட்ட, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களில் 'நட்சத்திரம்' சின்னத்தில் வாக்குகள் கேட்டு, பிரச்சரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் தொல். திருமாவளவன் "இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து 62 ஆண்டுகளில், ஒரு தலித் தலைமையிலான கட்சிக்கு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியும் கூட்டணியில் 2 இடங்கள் கொடுத்து மிகப் பெரிய அங்கிகாரத்தை கொடுத்திருக்கிறார். அந்த அங்கீகாரத்தை வாக்காளர்களாகிய நீங்களும் அளித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இது வரை நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் இந்தத் தேர்தலில் எனக்கு நட்சத்திரம் சின்னத்தி;ல் வாக்களிக்க வேண்டும்.

உங்களது குறைகளைத் தீர்க்க, உங்களுக்காக வாதாட, அரியலூரில் மத்திய அமைச்சர் ராசா உறுதியளித்த சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க பாடுபட எனக்கு வாக்களியுங்கள். 25 ஆண்டுகளாக என் சொந்த வாழ்வைத் தொலைத்து விட்டு எந்த எதிர்பார்ப்புமின்றி, மக்களுக்காக உழைக்கும் எனக்கு வாக்களிக்க வேண்டும். என்று குறிப்பிட்டார்.

thiruma
இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் சூழ்நிலையில் அகாசி இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயம் முக்கியமானது எனக் கருதப்படுகிறது.

அதேநேரம், இலங்கைக்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி, மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், போர்நிறுத்தத்துக்கான அவசியம் இல்லையெனக் குறிப்பிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் மனிதநேயப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையெனவும் பதிலளித்துள்ளது.

மனிதநேயப் பணியாளர்களை அனுமதிக்கும் விடயத்தில் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருப்பதாகப் பிரித்தானியாவும், பிரான்சும் அறிவித்திருந்தன.

இதேவேளை, பிரித்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கை வரவிருந்த சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை. எனினும், சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கான அனுமதியைத் தாம் நிராகரிக்கவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கையின் வடக்கில் மோதல்கள் நடந்துவரும் பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயம் உண்மையில் பாதுகாப்பான இடமில்லையென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் கூறினார்.
எனினும், பாதுகாப்பு வலயப் பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துவதில்லையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார் எனவும், ஆனாலும், பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதுஎவ்வாறு இருந்தாலும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மதிக்கவேண்டியது கடமையென மிலிபான்ட் பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"எமது விஜயத்தின் மூலம் போர்நிறுத்தமொன்று ஏற்படுத்தப்படாது. இந்தத் தொடர்ச்சியான மோதல்களால் கடந்த வாரங்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் குடிநீர் மற்றும் உணவு இன்றி ஆபத்துக்குள் சென்றிருப்பது பற்றியே நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்" என்றார் அவர்.

அத்துடன், இலங்கையில் தற்பொழுது காணப்படும் பிரச்சினையானது பிராந்திய ரீதியாகவும், அதற்கும் அப்பாலும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஐக்கிய நாடுக்ள பாதுகாப்புச் சபையில் இதனைக் கொண்டுவர பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முயற்சித்ததாக மிலிபான்ட் குறிப்பிட்டார்.

மோதலில் வெற்றி, சமாதானத்தில் தோல்வி

விடுதலைப் புலிகள் சரணடையவேண்டுமா என பி.பி.சி. கேட்டகேள்விக்குப் பதிலளித்த மிலிபான்ட், "சர்வதேச சமூகத்தின் உதவிகள் தேவைப்படும், ஜனநாயக நாடான இலங்கையில் வன்முறையானது அரசியல் தீர்வுக்கான பாதையாக அமையாது என்பதால் வன்முறைகளைக் கைவிடுமாறு நாம் அவர்களை வலியுறுத்துகிறோம். ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளும், தேவைகளும் அங்கீகரிக்கப்படும் சூழ்நிலையைக் காண்பதற்கே சர்வதேச சமூகம் விரும்புகிறது. தற்பொழுது தொடரும் மோதல்களில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றாலும், அது சமாதானத்தை இழந்துவிடும்" எனக் கூறினார்.

புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களுக்கு வன்னியின் உண்மையான களயதார்த்தம் தெரியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளத் தயாமாஸ்டர் ரூபவாஹினித் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கூறினார்.
உண்மையான களயதார்த்தத்தை அறிந்துகொள்ளாமலே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

"ஐரோப்பாவிலிருக்கும் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் வன்னியின் களநிலைவரங்களை அறிந்துகொள்ளாமல் விடுதலைப் புலிகளின் சார்பில் ஆர்ப்பர்டடங்களை நடத்திவருகின்றனர். அவர்கள் வன்னிக்கு விஜயம் மேற்கொண்டால் அங்கு மக்கள் படும் உண்மையான கஷ்டங்களை அறிந்துகொள்வார்கள்" என தயாமாஸ்டர் தனது செவ்வியில் கூறினார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியேற முற்பட்ட 200 அப்பாவித் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தயாமாஸ்டர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரும், முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறும் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேற முற்பட்ட மக்கள் பலர் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டதாக அங்கிருந்து வெளியேறிய சிலர் எமக்கு உறுதிப்படுத்தியிருந்தனர்.

கருத்துகள் இல்லை: