புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29



More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி


எதிர்பாராத திருப்பங்களில்
சந்தித்துக்கொள்கிறோம்
நீயும் நானும்...

வழிவிட்டு விலகி
நடக்க விரும்பி
இருவரும்
இடவலமாய் திண்டாட
தடுமாறுகிறது மனசு!

*******************

நம் சந்திப்பு நிகழாத நாட்களில்
சேமிக்கப்படுகின்றன
செலவழிக்கப்படாத
உனக்கான முத்தங்கள்!


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி

நமக்குள் உண்டான
பிணக்குகளில்
பிடிபடுகிறது
உன்னைப்பற்றிய
புரிதல்!


****************

உன் காதலி எப்படி?

கேட்பவர்களுக்கு
எப்படி சொல்வேன்...

உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி

அபூர்வமானதுதான்
மழையும்
அவளின் தீண்டலும்

***********

மழைக்கால
காளான்கள்
அவளின் நினைவுகள்

*********

மழைக்காலம்
இதமாய் இருக்கிறது
அவளின் நினைவுகள்

*********

மழைக்கண்டு சலிப்பு
தாகம் தீர்க்கும்
தண்ணீர் பாட்டில்!

***********

மழையில் நனையும் குழந்தை
தடுக்க முடியவில்லை
ஒழுகும் குடிசை


More than a Blog Aggregator

by மலைக்கோட்டை மங்காத்தா


More than a Blog Aggregator

by மலைக்கோட்டை மங்காத்தா
எப்போவும் எங்கேயும் திமுக, அதிமுக பத்தி அதிருப்தி தான். மாற்றம் வேணும் ன்னு நினைப்பவர்கள் ஏன் தேதிமுக வை ஆதரிக்க கூடாது? ஏன் அதுக்குள்ள எவ்வளவு கிண்டல், கேலி? விஜயகாந்த் க்கு என்ன அரசியல் தெரியும்ன்னு கேள்வி ? ஜெயலிதா அரசியல்ல கரை கண்டு, முத்து எடுத்துட்டா வந்தாங்க ? நான் விஜயகாந்த் தங்கமானவர், கண்டிப்பா நல்லாட்சி தருவார் ன்னு சொல்ல வரவில்லை. ஏன் ஒரு சான்ஸ் கொடுத்து பாக்க கூடாது ? 

விஜயகாந்த் விட நல்லா படிச்ச, அரசியலும் பிடிச்ச யாராவது ஒரு தலைவர் வந்தா கண்டிப்பா ஆதரிப்போம்.அங்க கூட இந்த மூணாவது அணி வந்து (சரி, சரி, charity begins at home மாதிரி, first தமிழ் நாட்டை கவனிப்போம்).


தவளை கதை மாதிரி கிணத்துக்குள்ள இருந்து வெளிய வராம நம்மை நாமே பிடிச்சு கீழ தள்ளி விடுறோம். இந்தியா எப்போ முன்னேறும் அப்படின்னு சும்மா bubble கம் போட்டு துப்பிட்டு இருக்காம, எதாவது பண்ணுங்க ப்ளீஸ்.

p.s : நான் விஜயகாந்தின் பரம ரசிகை அப்படி இப்படின்னு கற்பனை குதிரையை ஸ்பீடா ஓட விடாதிங்க. நான் கடைசியா பாத்த அவர் படம் வானத்தைபோல / ரமணா வோ.


More than a Blog Aggregator

by மலைக்கோட்டை மங்காத்தா
அட ஆமாம், இதை (இந்த காங்கிரஸ் sikh லிங்க் ) மறந்தே போய்டோமே (போய்ட்டேனே ?)


Source :  DNA India

கருத்துகள் இல்லை: