புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29



More than a Blog Aggregator

by முனைவர்.இரா.குணசீலன்
மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.இதனை உணராதாலேயே இன்று வரை தமிழன் அடிமையாக வாழ்ந்து வருகிறான் அவன் அடிமை என்பதற்கான அடையாளம் அவன் பேசும் மொழியிலேயே உள்ளது.ஆங்கிலத்தைத் தனியாகவோ, தமிழுடன் கலந்தோ அவன் பேசும் போது அவன் அடிமை என்று தன்னை அறிவித்துக் கொள்கிறான்.இதில் என்ன கொடுமை என்றால் இந்த அடிமை தமிழ்பேசும் அன்பர்களை இழிவாக நோக்குகிறது....

கவிஞர் தணிகைச் செல்வன் தமிழனின் நிலை பற்றிக் கூறும்போது,

மொழியை விடவும்
மேலானது
மொழி உணர்வு

எனவே
தமிழை விடவும்
தலையாயது
தமிழுணர்வு

மொழி உணர்வு
இறந்த தேசத்தில்
மொழியும் இறந்துபடும்

தமிழுணர்வு
இழக்கும் நாட்டில்
மிஞ்சுவது
தமிழின் சவமே

மொழி உணர்வைக்
கழித்துவிட்டு
மிச்ச உணர்வுகளை
ஊட்டுவது
பிணத்துக்கு ஏற்றும்
ஊசி மருந்துகளே

மொழி உரிமை
மறுக்கப்பட்ட மக்கள்
இன அடிமைகளாவது
இயல்பு

தமிழுரிமை பறிகொடுத்த
மக்களைத்
தளைப்படுத்துவது
எளிது

மொழி உணர்வின்
மறுபக்கம்
இன உணர்வு

இன உணர்வின்
இடப்பாகம்
மொழி உணர்வு

இன உணர்வற்ற
மொழி உணர்வு
காய்க்காத பூ
மொழி உணர்வற்ற
இன உணர்வு
காம்பிழந்த பூ

இரு உணர்வமற்ற
தமிழன் காகிதப்பூ
............
என்பர்.

காலந்தோறும் தமிழனுக்குத் தம் மொழியைவிட பிறமொழிகள் மீதே பற்று மிகுதியாக இருந்துள்ளது.அதன் காரணமாகவே அவன் அடிமையாக வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து வருகிறான்.

கிபி3 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய மணிப்பிரவாளம் தமிழனைப் பெரும்பாடுபடுத்தியது. தமிழுடன் வடமொழியைக் கலந்து பேசுவதை அக்காலத் தமிழன் பெருமையாகக் கருதினான்.
சான்றாக,
"கந்யகா யோக்யனாகிய பர்த்தா ஸஹஸ்ர கூடஜின பவனத்தையடைதலும் சம்பகவிகாசமும் கோகில கோலாஹலமும் தடாகபூர்ணமும் தக்கத குமுத விகாசமும் மதுகர சஞ்சாரமும் கோபுரக வாகட விகடனமுமாகிய அதிசயங்களுள வாகுமென்று ஆதேசித்தனர்"(சீனிவாசர்-வரலாற்றறிஞர்(Tamil studies . p-229)

• அன்றைய தமிழனுக்கும் இன்றைய டமிலனுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.இன்றைய டமிலன் Tamil என்று தான் தன் மொழியைக் குறிப்பிடுகிறான். Thamizh என்று அழைக்க மறுக்கிறான்.
• செந்தமிழில் முனைவர் பட்டம் முடித்தவர் கூட தம் பெயருக்கு முன்னால் டாக்டர் என்றே இட்டுக்கொள்ள விரும்புகிறார்.
• படிப்பறிவில்லாத கிராமத்துப் பாட்டிகூட இன்று "ட்ரெயின் ஏறி ஸ்டேசன் போய் இறங்கி அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்ட்டு அங்கிருந்து போன் பன்றேன்னு சொல்லுது.
• இவ்வளவு ஏன் நம் ஊரிலுள்ள குப்பைத் தொட்டிகள் கூட "யூஸ் மீ" என்று தானே ஆங்கிலம் பேசுகின்றன.

தமிழ் மொழியை வேறு யாரும் வந்து அழிக்கவேண்டாடம் நம் தமிழனே போதும்.
போர்த்துகீஸியம், பிரெஞ்சு, இந்தி, மலாய், இசுபானியம், பிரேசிலியன், பெர்ஸியம், சமஸ்கிருதம் மராட்டி, இலத்தின்,உருது, ஆங்கிலம் என்னும் எல்லா மொழிகளும் இவன் வாயில் வருகிறது. இவன் தாய் மொழி மட்டும் வர மறுக்கிறது. இவன் வாயில் அமிலத்தை ஊற்றினால் என்ன?

"பிறமொழியைக் கற்று வை.
உன் தாய் மொழி மீது பற்று வை"

என்பது ஏன் இவனுக்குப் புரியாமல்ப் போகிறது.


இங்கு ஸ்போக்கன் இங்லீஸ் சொல்லித் தரப்படும் என்னும் விளம்பரப் பலகைகளைக் காணும்போது, எதிர்காலத்தில் இங்கு தமிழ் சொல்லித்தரப்படும்" என்னும் பலகை வைக்கும் நிலை வருமோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.


இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ் என்னும் மொழியைத் தொலைத்து டமிலனாக, தமிங்கிலனாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அடிமை எதிர்காலத்தலைமுறையை உருவாக்கினால் எப்படி இருக்கும். எதிர்காலத்தலைமுறையும் "டமில்"த்தலைமுறையாகவே உருவாகும்...............
என்று மாறும் இந்நிலை?????????????????


More than a Blog Aggregator

by Nagendra Bharathi

காதல் இதயம்

------------------

அடிக்கடி மூச்சு

வாங்குகிறதா

அலைஅலையாய்

உள்ளே ஓடுகிறதா

மேல்கீழ் ஏறி

இறங்குகிறதா

மேனியில் வேர்வை

ஊறுகிறதா

பஞ்சாய் கண்கள்
அடைக்கிறதா

பயமும் பொங்கி
வருகிறதா

இரத்த வெப்பம்
உணர்கிறதா

ஏதோ மாதிரி

இருக்கிறதா

வயதில் வந்தால்

காதல் நோய்

வயதாகி வந்தால்

இதய நோய்

---------------------------நாகேந்திர பாரதி

--------------------------------------------------------------------------------



More than a Blog Aggregator

by மேடேஸ்வரன்
கடவுளிடம் ஒரு விவசாயி சண்டைக்குப் போனான்.
"உனக்கு பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்த போது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். பேசாமல், அந்த வேலைகளை விவசாயி ஒருவனிடம் ஒப்படைத்து விடேன்!"
கடவுள் உடனே, " அப்படியா ? சரி, இன்மேல் வெளிச்சம் , மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும் " என்று வரம் அருளிவிட்டு சென்றார்.
விவசாயிக்கு சந்தோசம் பிடிபடவில்லை.அடுத்த பருவம் வந்தது.
"மழையே , பெய்" என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்ன போது ,நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து , விதை தூவினான். பயிர் பச்சைப் பசேலென வளர்ந்தது.
அறுவடைக் காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தைக் காண வில்லை. ஒவ்வொரு கதிராக வெட்டி எடுத்து திறந்து பார்த்தால் , ஒன்றிலுமே தானியம் இல்லை.
" ஏ, கடவுளே !" என்று கோபத்தோடு கூப்பிட்டன். " மழை, காற்று, வெயில் அனைத்தையும் சரியான விகிதத்தில் தானே பயன்படுத்தினேன். ஆனாலும் பயிர் பாழாகி விட்டதே, ஏன்? "
கடவுள் புன்னகைத்தார். " என் கட்டுப்பாட்டில் இருந்த போது காற்று வேகமாக வீசும். அப்போது, கதிர்களெல்லாம் , அம்மாவை இறுக்கிக் கொள்ளும் குழந்தைகளைப் போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பி பிடித்துக் கொள்ளும். மழை குறைந்தால் , தண்ணீரைத் தேடி வேர்களை எல்லா பக்கமும் அனுப்பும்.போராட்டம் இருந்தால் தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்து விட்டது. தள தளவென்று வளர்ந்ததே தவிர , ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றுக்குத் தெரியவில்லை!"
நீதி : வாழ்க்கை எல்லா விதத்திலும் சௌகரியமாகவே அமைந்து விட்டால் , அதைப் போன்றதொரு வெறுமை வேறெதுவுமில்லை.பிரச்சனைகள் அழுத்தும் போது தான் , திறமை அதிகரிக்கும். சவால்கள் தான் மனிதனை முழுமையாக்கும்.
- சத்குரு ஜக்கி வாசுதேவ் (அத்தனைக்கும் ஆசைப்படு )

CCleaner is a freeware system optimization, privacy and cleaning tool. It removes unused files from your system - allowing Windows to run faster and freeing up valuable hard disk space. It also cleans traces of your online activities such as your Internet history. Additionally it contains a fully featured registry cleaner. But the best part is that it's fast (normally taking less than a second to run) and contains NO Spyware or Adware! :)

What's New?

- Improved support for Google Chrome v2.
- Fixed bug with IE8 cookies.
- Added support for Flash Cookies.
- Added Tool to manage System Restore Files (XP and Vista only).
- Added support to remove Opera Recently Typed URLs.
- Fixed bug which was displaying wrong Total Bytes removed.
- Improved exception handling.
- Fixed virtual function bug.
- Minor performance improvements.

Details and Download : http://www.ccleaner.com/



MediaMonkey: The Music Organizer for Serious Collectors
  • Organize music and edit tags in your audio library with a powerful, intuitive interface.
  • Automatically lookup and tag Album Art and other metadata.
  • Manage 50,000+ files in your music collection without bogging down.
  • Manage all genres of audio: Rock, Classical, Audiobooks, Comedy, Podcasts, etc.
  • Play MP3s and other audio formats, and never again worry about varying volume.
  • Record CDs and convert MP3s, M4A, OGG, FLAC and WMA files etc. into other formats.
  • Create playlists and let Auto-DJ & Party Mode take care of your party.
  • Sync iPhones, iPods, & MP3 players, converting & leveling tracks on-the-fly.

Manage a music library from 100 to 50,000+ audio files and playlists*; whether Rock, Classical, Audiobooks, or Podcasts; whether they're located on your hard drive, CDs, or a network. Organize, browse, or search music by Genre, Artist, Year, Rating, etc., and never waste your time trying to find mp3s you know you have.

MediaMonkey is the music organizer for the serious collector.

* Supports MP3, AAC (M4A), OGG, WMA, FLAC, MPC, WAV, CDA, M3U, PLS, etc.

Download : http://www.mediamonkey.com/

கருத்துகள் இல்லை: