புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29



More than a Blog Aggregator

by அப்பாவி தமிழன்

keywords in english
Free International Phone Call
Fast & Easy Find. Resources for Free International Phone Call
Free Voip Conference
No cost conferencing and recording. Instant sign-up and unlimited use.
Free Internet Phone Calls voip calls free to india srilanka
For Free Internet Phone Calls Free Internet Phone Calls Here


More than a Blog Aggregator

by அப்பாவி தமிழன்

There are the benifits of free premium rapidshare members. Download multiple RapidShare files at once . Support download managers . Support download resume . Downloads start instantly . free premium user for rapidshare. rapidshare tricks.Download
RapidShare is a German-owned one-click hosting pay- and free-service (with certain restrictions and limitations) website that operates from Switzerland and is financed by the subscriptions of paying users. Rapidshare is one of the world's largest file-hosting sites with millions of files stored on its servers. According to Alexa, Rapidshare.com is currently the 15th most visited website globally.
நழுவாத இதயம்

நழுவிக்கொண்டது

அன்பே -

அது உனக்காக

என் இதயத்தை

உன் இதயத்தோடு

ஒப்பந்தம் பேச வைத்த

கண்களின் காட்சிகளே

நம் காதல் சாட்சிகள்
..................................................

என்னுடைய கல்லூரி பருவத்தில் எழுதியது


More than a Blog Aggregator

by Photo's Blog
சிலசமயங்களில் மின்னஞ்சல் விவாதங்களின் மூலம் படிக்காத/தெரியாத தகவல்கள் வந்து சேரும். இன்று காலையில் நண்பரொருவரின் மூலமாக, ஜெயமோகனின் ஆதிச்சநல்லூர் பயண அனுபவம் பற்றிய கட்டுரை காணக்கிடைத்தது. நேரமின்மை காரணமாக எப்பொழுதாவது ஒருமுறை தான் ஜெயமோகனின் வலைப்பக்கத்திற்கு செல்வது, பெரும்பாலும் இவரது கட்டுரைகள் மின்னஞ்சல் விவாதங்களிலே வந்துவிடும் !!!

ஆதி எச்ச நல்லூர் என்னும் ஆதிச்சநல்லூர் பற்றியும் அங்கு அகழ்வாரய்ச்சியில் காணக் கிடைத்த தகவல்களையும் பற்றி ஏற்கனவே ஓரளவு தெரிந்திருந்ததினால், இது ஒரு பயணக் கட்டுரையோ என்னும் நோக்கில் படிக்க ஆரம்பித்த எனக்கு, அங்கிருந்த ஒரு பெரியவரின் பேச்சுக்களாக அவர் தந்திருந்தவை மனதில் பல நினைவுகளை கிளப்பிவிட்டன. அங்கு நடந்த கடைசி விவாதங்கள் ஜெயமோகனின் வரிகளில்

"அப்ப நான் கெளம்புறேன்…"என்றார் கிழவர் .

"அய்யா பேரு என்னங்க?" என்றேன் "சிதம்பரம்…" என்றார். "என்ன பண்றீங்க?"என்றான் யுவன் "பாத்தா தெரியலை, மாடுமேய்க்கிரது. நமக்கு அந்தப்பக்கமா கொஞ்சம் நெலம் உண்டு. வெவசாயம். ஸ்கூலுக்குப் போகலை. அண்ணாவைத்தான் படிகக் வச்சாங்க. எல்லாம் நானே வாசிச்சு படிச்சுகிட்டதுதான்" "இப்பவும் படிக்கிறீங்களா?"என்றார் கிருஷ்னன்
"நாளைக்கும் படிப்பேன்" என்றார் சிதம்பரம் ஆணித்தரமாக. "அப்ப நான் வாரேன்" கும்பிட்டு கெளம்பினார்.

"சார் தலையிலே கடப்பாரையாலே அடிச்சது மாதிரி இருந்தது"என்றார் கிருஷ்ணன் "ஆனா எனக்கு ரொம்ப தேவையான அடிதான்" என்றார். யுவன் சந்திரசேகர் "என்னய்யா இது கதையிலே இருந்து எந்திரிச்சு வாரதுமாதிரி வந்திட்டார்… சொன்னா நம்பவே மாட்டாங்க…"என்றார் ."அவரு நம்மளை ஒரு பொருட்டாகவே நெனைக்கலை பாத்தியா? அவருக்கு நம்ம கிட்ட பேசுறதிலே ஆர்வமே கெடையாது. நாம வழி கேட்டப்ப பேசாமத்தான் இருந்தார். கட்டாயப்படுத்தி தங்கமனி கூப்பிடப்பதான் வந்தார்…"


இந்த கட்டுரை தொடர்பாகவும், இதில் குறிப்பிட்டுள்ள அந்த சிதம்பரம் என்னும் பெரியவர் தொடர்பாகவும் ஜெயமோகனுக்கு வந்துள்ள கடிதங்கள், அது தொடர்பான விவாதங்களை இங்கே காணலாம்.

இதைப் படிக்கும் போது உடன் நினைவில் தோன்றியது, என் நண்பர் ஒருவர் ஒரு முறை சொன்னது தான், "வரலாற்றை காப்பாற்ற தெரியாத எந்த இனமும் வரலாறு படைத்ததாக சரித்திரம் இல்லை". அது உண்மை தான். வரலாறு என்பது வெட்டிப் பெருமை பேசுவதற்கு மட்டுமே ஆனதல்ல. அது கடந்த காலத்தின் சாட்சியாக நம்முன் நிற்கின்றது. அதன் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, சமூக கட்டமைப்பு போன்ற விசயங்களில் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் இன்றைக்கும் இருக்கும் சில சமூக பிரச்சனைகளின் வேர்களை அறிய முடியும். வரலாற்று சுவடுகளில் நம் கடந்த காலப் பெருமையினை மட்டுமே தேடாமல் அதன் தவறுகளிலிருந்து பாடம் கற்கவும் வேண்டும். ஆனால், இன்றுவரை நம்மிடம் வரலாற்று தகவல்களை ஆவணப்படுத்தும் வழக்கம் கூட இல்லையென்பதும், ஆதிச்ச நல்லூர் முக்கியத்துவம் திட்டமிட்டு மறைக்கப்படுவதும் வெட்கக்கேடான செயல்.

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களில் ஒண்ணுக்கடித்து திறிபவர்களே நமது மக்களில் அதிகம். :( மேற்குறிப்பிட்டுள்ள கட்டுரையில் அந்தப் பெரியவர் குறிப்பிட்டுள்ளதைப் போல நாம் நமது வேர்களை தேடிப் போகாவிடினும், இருக்கும் வரலாற்றுச் சுவடுகளையாவது காக்கவும், ஆவணப்படுத்தவும் முயலவேண்டும்.

பின்குறிப்பு: 'பஞ்ச்' டயலாக் கேட்டு வளர்ந்த தமிழ் சமூகமாதலால், நண்பர் பெரிய எழுத்துகளில் குறிப்பிட்டிருந்த "நாளைக்கும் படிப்பேன்" என்னும் வார்த்தையே தலைப்பாக !!!!!! :)

கருத்துகள் இல்லை: