வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30


புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களுக்கு வன்னியின் உண்மையான களயதார்த்தம் தெரியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளத் தயாமாஸ்டர் ரூபவாஹினித் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கூறினார்.
உண்மையான களயதார்த்தத்தை அறிந்துகொள்ளாமலே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


"ஐரோப்பாவிலிருக்கும் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் வன்னியின் களநிலைவரங்களை அறிந்துகொள்ளாமல் விடுதலைப் புலிகளின் சார்பில் ஆர்ப்பர்டடங்களை நடத்திவருகின்றனர். அவர்கள் வன்னிக்கு விஜயம் மேற்கொண்டால் அங்கு மக்கள் படும் உண்மையான கஷ்டங்களை அறிந்துகொள்வார்கள்" என தயாமாஸ்டர் தனது செவ்வியில் கூறினார்.


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியேற முற்பட்ட 200 அப்பாவித் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தயாமாஸ்டர் குறிப்பிட்டார்.


விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரும், முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறும் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.


இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேற முற்பட்ட மக்கள் பலர் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டதாக அங்கிருந்து வெளியேறிய சிலர் எமக்கு உறுதிப்படுத்தியிருந்தனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்களின் உறவினர்களோ அல்லது மதத் தலைவர்களோ சென்று சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லையெனக் கூறப்படுகிறது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 180,000ற்கும் அதிகமான மக்கள் வவுனியா, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


"எனினும், இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருப்பவர்களை உறவினர்களோ அல்லது மதகுருமாரோ சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இவ்வாறு அனுமதி மறுக்கப்படுகிறது" என யாழ் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் ராஜநாயகம் ஜெநோல்டன் விஜின்டஸ் தெரிவித்துள்ளார்.


அதேநேரம், இடம்பெயர்ந்துவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் முகாம்களில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


முகாம்களிலுள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு உறவினர்கள் பலர் விரும்புகின்றபோதும் அனுமதி வழங்கப்படுவதில்லையெனவும், உறவினர்களைச் சந்திக்கும் ஆர்வத்தில் பலர் முகாம்களுக்கு அருகில் சென்று வருவதாகவும் பிராந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேநேரம், வன்னியிலிருந்த உறவினர் உயிருடன் இருக்கிறார்களா அல்லது எந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அறிந்துகொள்ளமுடியாத நிலையில் இடம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் பலர் தினமும் முகாம்களுக்கு சென்று வெளியே நின்று உறவினர்களைத் தேடுவதாக எமது யாழ் பிராந்தியச் செய்தியாளர் கூறினார்.





முஸ்லிம்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் எனச் சொல்வது விஷமத்தனமானது என்று கார்டூனிஸ்ட் மதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைத்த இஸ்லாமியக் கண்காட்சியைத் திறந்து வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு மனம் திறந்துப் பேசினார்.

கேள்வி பதிலுக்கு பேர் பெற்ற மதன், "ஒரு தனி மனித வாழ்வில் எழும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் ஒரே வேதம் குர்ஆன் தான்" என மிகவும் சிலாகித்துச் சொன்னார்.

அவர் ஆற்றிய உரை முழுமையாக சமரசம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

இலங்கை அரசின் மனிதப்படுகொலைகளைக் கண்டித்தும், அனைத்து ஒடுக்கு முறைகளுக்கெதிராகவும், நடத்தும் ஆர்ப்பாட்ட நிகழ்வு! 01. மே. 2009 வெள்ளி நேரம் பகல் 11.30 மணி இடம்: Place des Fêtes (Métro : Place des Fêtes) _________________________________________ இலங்கை அரசின் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து … அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக … ஒடுக்கப்பட்டோரின் குரலாய் … தோழமையோடு அழைக்கிறோம்! Vendredi 01 mai 2009 à 11h30 Condamnons les massacres des Peuples par le Gouvernement Sri Lankais… Contre toutes les [...]
2006 ஆண்டு இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் கூரியன் பல்கலைக்கழகம் எலுமிச்சம் புல் சாறு அருந்துவதால் இதிலுள்ள "சிட்ரால்" என்னும் வேதிப் பொருளால் புற்று நோய் செல்கள் தற்கொலை (#Apoptosis) செய்து கொள்வதாக கூறியுள்ளனர். அதே சமயம் நல்ல செல்களுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றும் கண்டறிந்தனர். இதனால் இஸ்ரேல் நாட்டு விவசாயி ஒருவர் எலுமிச்சம் புல் விற்பனையில் பயனடைந்ததாக படித்தேன். நல்ல பயனுள்ள செய்தியாக மனதில் பட்டது எனவே உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எளிதாக தொட்டிகளில் கூட வளர்க்கலாம் என்பது எனது அனுபவம். இதன் எண்ணெய் நமக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தருகிறது. பொதுவாக, வாசனைக்காக இதன் எண்ணெய் சோப்புகளிலும், தரையை துடைக்க உதவும் திரவங்களிலும் பயன்படுத்துவார்கள். தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் சமையலில் பயன்படுத்துகிறார்கள். நானும் எனது நண்பர்கள் சிலரும் தேனீருடன் இதனையும் சேர்த்து அருந்துகிறோம் மிக்க சுவையாகவும், சுறுசுறுப்பையும் தரும். பனிகாலங்களில் இதமாக இருக்கும். சற்று விரிவான வாசிப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.

http://www.israel21c.org/bin/en.jsp?enZone=Health&enDisplay=view&enPage=BlankPage&enDispWhat=object&enDispWho=Articles%5El1272

"புற்று நோயும் கோதுமைப் புல் சாறும்" என்ற எனது பதிவினை படிப்பதற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்
http://maravalam.blogspot.com/2007/09/blog-post.html

#Apoptosis--noun: a type of cell death in which the cell uses specialized cellular machinery to kill itself; a cell suicide mechanism that enables metazoans to control cell number and eliminate cells that threaten the animal's survival. In other words, cell commits suicide.)
கடந்த இரண்டு நாட்களில் மாணாக்கர் மூவர் மட்டக்களப்புப் பகுதியில் இருந்து காணாமற் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, மட்டக்களப்பு, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் 8 வயதுடைய சதீஸ்குமார் தினுஷிகா, ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய வள்ளுவன் மதிசுதன் மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் கற்கும் 12 வயதுடைய ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் ஆகியோரே காணாமல் போன மாணாக்கர்களாவர்.

2009.04.30 ஆம் திகதியான இன்று மட்டக்களப்பு புறநகர் மற்றும் நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் இணைந்து கடத்தப்பட்ட மாணாக்கர்களை விடுவிக்கக் கோரி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர், நேற்று மாணவி காணாமற் போன செய்தி அறிந்ததில் இருந்து அப்பகுதி மக்கள் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வீதிகள் வெறிச்சோடி போயுள்ளதுடன், கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.

கடந்த மாதம் திருகோணமலையில் வர்ஷா எனும் பச்சிளம் பாலகி கடத்தல்காரர்களால் கடத்திக் கப்பம் கோரப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டார், இது தொடர்பாக ஆயுதக் குழுவொன்று தொடர்புற்றுள்ளதாக செய்திகள் வந்த போதிலும் சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான கடத்தல் சம்பவங்களினால் பாடசாலைகளுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் தயங்குகின்றார்கள், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமலும், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த அரசியல்வாதிகளும், பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களும் உளசுத்தியுடன் செயற்படுவதே சிறந்ததாகும்.

இச் சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதனால் களத்துமேடு தனது ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கருத்துகள் இல்லை: