புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

அது ஒரு வெள்ளிக்கிழமை. ஒரு அரசு வாகனம் தன்னந்தனியே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. வலது பக்கம் வானம் பார்த்த பூமியில் ஒரு உருவம் ஓடி வந்துகொண்டிருந்தது. ஆம், அரசு வாகனத்தை நோக்கித்தான்......... "அது நம்ம லட்சுமிதானே" வாகனத்தில் இருந்த பெண்மணி சொன்னதும் உள்ளே ஒரு பரபரப்பு."என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" என்று கதறிக்கொண்டே வண்டியின் முன் மயங்கிச் சாய்ந்தாள் லட்சுமி

லட்சுமி 15 நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற பெண்மணி. மொத்தமே 25 கிலோ எடை மட்டுமே இருப்பார். ரத்தக்குறைபாடு காரணமாக குழந்தை பிறந்த உடன் 2யூனிட் ரத்தம் போட்டு இப்போது தான் வீடு திரும்பியவர். அவர் ஏன் ஓடி வர வேண்டும்? அவரது அன்பான கணவனுக்கு என்ன நேர்ந்தது.

இப்போது லட்சுமியின் மயக்கம் தெளிவிக்கப் பட்டிருந்தது. லட்சுமி உச்ச ஸ்தாயில் கதற ஆரம்பித்தார்." அக்கா என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" "உங்க காலுக்கு செருப்பா இருப்பேன். அவர விட்டுடுங்க. என் உயிர காப்பத்தின நீங்களே என் வாழ்க்கைய கெடுக்க பார்க்கறீங்களே. எஞ்சாமி ஒரு பாவமும் பண்ணலயே. இப்படி குடும்பத்த வேரருக்க பார்க்கறீங்களே. ஆத்தா உனக்கு மொட்டையடிச்சு கெடாவெட்டி பூக்குழி இறங்குறேன்" எல்லா வகையான வேண்டுதலையும் சொல்லிவிட்டு மயங்கி சாய்ந்தார் லட்சுமி.

அப்படி என்னதான் நேர்ந்தது லட்சுமியின் கணவனுக்கு. ஏன் இப்படி? அவன் லட்சுமியின் உயிரையே வைத்திருந்தான். பிரசவத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டு லட்சுமியைக் காப்பாற்றிய போது இவனும் செத்துதான் பிழைத்தான். அப்போதுதான் அந்தப்பகுதி சுகாதார செவிலியர் சொன்னார் "லட்சுமி இன்னொருமுறை கருத்தறித்தால் அவள் உயிருக்கு ஆபத்து. அவளுக்கு கு.க.செய்யக்கூட உடல் நிலை ஒத்துக்காது".

அ.ஆ.சு.நி.ல் உள்ள வட்டார விரிவாக்க கல்வியாளர், வ.சு. புள்ளியாளர், ப.சு.செ. கி.சு.செ., சு.ஆ. ஆகியோர் நவீன ஆண் குடும்பநல சிகிச்சை முறை பற்றிச்சொல்லி அவனை சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றபோது நடந்த சம்பவம்தான் இது. லட்சுமி கண்விழித்த உடன் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார். "லட்சுமிட்ட சொன்னா சம்மதிக்க மாட்டா, அதுனால நான் அவகிட்ட சொல்லல"வாய் திறந்தார் லட்சுமியின் கணவர்.

நடந்த சம்பவங்களில் நாங்கள் உறைந்துவிட்டோம். சில வயதான பணியாளர்கள் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டனர். லட்சுமி சம்மதித்த பின் கு.ந.சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அவர்களை வீட்டில் விட்டுவிட்டு திரும்பினோம்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை திருமணமான பெண்களீடமே ஆரம்பிக்கிறோம். நமது பெண்கள் கணவர் வீரியம் குறைந்தவர்(ஆண்மை நிறைந்திருந்தாலும்) என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குவதே ஆண் கு.ந. சிகிச்சை பரவாலாவதற்கு தடையாய் இருக்கிறது என்பதும் ஒரு உண்மைதான்.

இது ஒரு மீள்பதிவு
புகை வண்டியும், விமானமும் மனித எண்ணத்தில் உதிப்பதற்கு முந்தய காலத்திலேயே தமிழன் குதிரைத் தேர் பூட்டி, யானையதனையும் அழைத்து பெரும் படையுடன் சென்று இமயம் தொட்டு வெற்றிக் கொடி நாட்டி திரும்பியுள்ளான் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ் காப்பியமெங்கும் காணக் கிடைக்கின்றன. கி.பி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப் பட்ட தமிழின் தாய்க்காப்பியம், முதல் காப்பியம் என அடையாளம் காணப்பட்ட சிலப்பதிகாரத்திலும்


More than a Blog Aggregator

by சே.வேங்கடசுப்ரமணியன்.

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் மருத்துவ உதவியாளர் திரு.சி.செல்வமோகனகுமார் அவர்கள் திங்கள், வெள்ளி ஆகிய தினங்களிள் புற நோயாளிகளைப் பார்வையிடுகிறார்.

செவ்வாய் கிழமை சேப்ளாப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையத்திற்கும்,
புதன் கிழமை காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் விஜயம் செய்கிறார்.

பிரதி வியாழக்கிழமைகளிள் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுற்று முறையில் பள்ளி சிறார் நலத்திட்ட பள்ளிக்குச்செல்லும் மருத்துவக்குழுவில் பங்கேற்கிறார்.

புற‌நோயாளிக‌ளாக‌ வ‌ரும் முதியோர்க‌ளிள் காட்டிராக்ட் என‌ப்ப‌டும் க‌ண் புரை நோய் உள்ள‌வ‌ர்க‌ளில் த‌குதியான‌வ‌ர்க‌ளை தேர்ந்தெடுத்து இல‌வ‌ச‌ க‌ண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கிறார்.
தோக‌ம‌லை வ‌ட்டார‌த்தில்

மொத்த ம‌க்க‌ள் தொகை 86404.
மொத்த‌ கிராம‌ம் 90
மொத்த‌ ப்ள்ளிக‌ள் 77

இவ‌ர‌து ப‌ரிந்துரையிப‌டி க‌ண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ண்ட‌வ‌ர்க‌ள், ம‌ற்றும் இல‌வ‌ச‌ க‌ண்ணாடி பெற்றுக்கொண்ட‌ ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ள் விவ‌ர‌ம் இங்கே.இது பிப்ர‌வ‌ரி 2009 வ‌ரையிலான‌ அள‌வீடு.



More than a Blog Aggregator

by சே.வேங்கடசுப்ரமணியன்.
மார்ச் 2009 ம் மாத பே ஆத்தரைசேஷன் நகல் இங்கே

March 2009 March 2009 fred quimby


More than a Blog Aggregator

by சே.வேங்கடசுப்ரமணியன்.
01.01.2009 முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் (மொத்தம் 64%)அகவிலைப்படி கூடுதலாக வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் நகல் இங்கே.

DA 01 01 09 10% DA 01 01 09 10% fred quimby


More than a Blog Aggregator

by சே.வேங்கடசுப்ரமணியன்.
jsy 2009 thogamalai jsy 2009 thogamalai venkatasubramaniyan

ஜனவரி 2009 ம் மாதம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக ஜனனி சுரக்க்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நிலுவையில் இருந்த பிரசவித்த வறுமை கோட்டிற்கு கீழுள்ள (முதல் இரண்டு பிரசவத்திற்கு)தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்க்கப்பட்டது.பயனாளர்களின் பெயர் பட்டியல் இங்கே பி. டி. எஃப் வடிவில்.

கருத்துகள் இல்லை: