புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், ஆங்கில தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டு மென்றும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனி, இலங்கை ராணுவத்தினர்,பாதிக்கப் பட்ட தமிழர்களை பத்திரமாக மீட்கும் பணியிலும், அவர்களுக்கு உதவும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்று இலங்கை அரசு கூறி இருக்கிறது.
இந்தநிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் இருப்பவர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரண் அடைய வேண்டும். நீண்டகால பிரச்சினை பற்றி பேச்சு நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்ய முன்வந்தால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பிரபாகரன் பிடிபட்டால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. முதலில் அவர் சரண் அடைய முன்வரட்டும்.

நான் எதையும் யூகித்து கொண்டு கூற முடியாது. இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற தகவலை சிலர் பரப்புகிறார்கள். இது தவறான தகவல். இந்தியா அவ்வாறு நடக்கவில்லை." என்று ப.சிதம்பரம் கூறினார்.
முகாம்களில் கூடுதல் எண்ணிக்கையான மக்கள் தங்கவைக்கப் பட்டிருப்பதால் முகாம்களின் நிலைமைகள் மிகவும் மோசமாகவுள்ளது என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ் தானிகராலயம் தெரிவித்துள்ளது.
"முகாம்களின் நிலைமைகள் மிகவும் மோசமடைந்து இருப்பது மனித நேயப் பணிகளை முன்னெடுப்பதில் தாக்கம் செலுத்தியுள்ளது" என யூ.என்.எச்.சி.ஆரின் பேச்சாளர் வில்லியன் ஸ்பின்ட்லர் கூறினார்.
இடம் பெயர்ந்த மக்கள் தங்குவதற்குக் கூடாரங்கள் இன்று கொழுத்தும் வெய்யிலில் வெளிகளில் தங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வரும் மக்கள் தாக்கப்பட்டதாகவும் கூறினார். "பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு என்பதை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்" என ஸ்பின்ட்லர் தெரிவித்தார்.

அதேநேரம், பொதுமக்களின் உனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மேலதிகமான வழங்களை வழங்கவேண்டும் எனவும் யூ.என்.எச்.சீ.ஆர். இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்கான பொதுக் கட்டடங்கள், காணிகள் போன்றவற்றை வழங்கவேண்டுமென அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கென யூ.என்.எச்.சீ.ஆர். முதற்கட்டமாக டுபாயிலிருந்து 3000 தற்காலிக கூடாரங்களையும், 103 மற்றிக்தொன் உணவுப் பொருள்களும் நேற்று விமானம்மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிப்பதற்கென மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் அன்டோனியோ கட்டெரஸ் கூறினார்.

முல்லைத்தீவை அண்டிய கடற்பரப்பில் இன்று (ஏப்.29) காலை கடற் புலிகளுக்கும் இலங்கை கடற் படைக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்றுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மோதல்களின் போது இலங்கை கடற்படையினர் புலிகளின் 4 தற்கொலைப் படகுகளை தாக்கி அழித்ததாகவும் அதில் 25க்கு அதிகமான கடற்புலிகள் இறந்துள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.

More than a Blog Aggregator

by Nagendra Bharathi
நல்ல நேரம்
---------------
விரலைப் பற்றிக் கொண்டு
வருபவள்
விரலில் நிச்சய மோதிர
நேரம்
பாடம் படித்துக் கொண்டு
இருப்பவள்
பாடம் மாறப் போகும்
நேரம்
வேலை பார்த்துக் கொண்டு
இருப்பவள்
வேளை கூடப் போகும்
நேரம்
ஒருத்தி உலகம் என்று
இருப்பவள்
ஒருத்தி ஒருவன் ஆகும்
நேரம்
தாயின் மடியில் மகிழ்ந்து
இருப்பவள்
தாயாய்த் தானும் ஆகும்
நேரம்
-------------------------------------நாகேந்திர பாரதி
----------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: