வியாழன், 30 ஏப்ரல், 2009

2009-04-30

கடைசியில் உலகின் கழிவிரக்கதிற்காக, காத்துக்கிடக்கும் நிலை ஈழ மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. உலக வரைபடத்தில் புள்ளியளவிலான சின்னஞ்சிறிய பரப்பும், சுமார் 30 இலட்சம் மக்களும் கொண்ட ஈழம், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தம் மக்களை இழந்துவிட்டது. இவ்விபரம் இந்திய விடுதலைப் போரில் ஒரு கோடி பேர் கொல்லப்படுவதற்கு சமமானது.


வட அமெரிக்காவின் மிசிஹன் மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படவிருந்த சிறிலங்கா அரசின் வெற்றிவிழா, நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும்,சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்குஆதரவு அளித்து வருவதாக,நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.


உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்

இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்

நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

நீண்டதொரு நெடிய
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
ஒரு சுபயோக சுபதினத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
முத்தத்தில் மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்

பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்

இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
தேசத்துக் கொடிகள் தவிர
வேறொன்றும் அங்குமில்லை

காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………



(அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...)


THE Best Things In Life...

Laughing so hard your face hurts.

A hot shower.

A special glance.

Getting mail.

Taking a drive on a scenic road.

Hearing your favorite song on the radio.

Lying in bed listening to the rain outside.

Hot towels out of the dryer.

A long distance phone call.

A bubble bath.

Giggling.

A good conversation.

The beach.

Finding a 500 rs note in your old diary.

Laughing at yourself.

Midnight phone calls last for hours.

Laughing for absolutely no reason at all.

Laughing at an inside joke.

Falling in love for the first time.

Accidentally overhearing someone say something nice about you.

Waking up and realizing you still have a few hours left to sleep.

Your first kiss.

Making new friends or spending time with old ones.

Late night talks with your roommate.

Having someone play with your hair.

Sweet dreams.

Hot Halwa.

Road trips with friends.

Swinging on swings.

Watching a good movie cuddled up on a couch with someone you love.

Making eye contact with a cute stranger.

Hugging the person you love.

Watching the expression someone's face as they open a much-desired present from you.

Watching the sunrise.
அடியேய் ஜில்லு !!????

முறைப்பு அவளிடமிருந்து ..

என் குல்பிக் குட்டி !!!!???

கையை ஓங்கினாள் அவள்..

என் செல்லத் தேவதையே????!!!!

திரும்பி கொண்டாள் அவள்.

குழம்பி போன ஹரி, கோபத்துடன்
"ஏன்டீ ..இப்படி இம்சை"
என இவன் வாய் ஆரம்பிப்பதற்க்கு முன்னால் சினேகாவின் கை முந்திக் கொண்டதால் ..

மூக்கின் மேல் ஒரு பன்ச்...

கும் ...


கனவில் இருந்து வந்து வெளியே விழுந்தப் பின்னும் மூக்கில் வலி அப்படியே இருந்தது ஹரியிடம் .
கல்யாணப் பத்திரிக்கை, மண்டபம் , சீரு, செனத்தி...ட்ரீட் , தேனிலவு முன்னெச்செரிக்கை முன் பதிவுகள் என எல்லாவற்றையும் சரி வர செய்து, நாளைக்கு கல்யாணம் செய்ய போகிற ஹரிக்கு இப்ப வந்து இப்படி ஒரு கஷ்டம்.


உன் பேரு எனக்கு பிடிக்கவில்லை அப்படின்னு வேலையை விட்டு அனுப்புற இந்த பாசக்கார உலகத்தில கல்யாணம் என்றால் சந்தோச படாம ஏன் இவன் மட்டும் 4 லார்ஜ் அடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கான் ? ..

ஏன்னு தெரியல?

வாங்க , அவன் கிட்டயே போய் கேட்போம் ..

தம்பி ஹரி, உனக்கு என்னப்பா பிரச்சினை ?

யாரு ? யாரு ? நீங்க?

நாங்க எல்லோரும் வெட்டியா இருந்துகிட்டே வியாக்கினம் பேசுற டமில் வலையுலக பிரம்மாக்கள் ..

நாங்க எல்லோரும்ன்னு சொல்றீங்க ..ஆனா தனியா நிக்குறீங்க ?
படவா ராஸ்கல் ..என்ன சின்னப் பிள்ளைத் தனமா இருக்கு . ஏண்டா..4 பேரை திட்டனும் ..8 பதிவை காப்பியடிக்கனும் . இதுக்கு நடுவே Appraisal வேற எழுதனும் .பாவம் பயப்புள்ள சோகமாக இருக்கியேன்னு கேட்டா ..இப்படி படுத்துற?

அண்ணா இல்லிங்க்ணா..அத எப்படிங்க்ணா ..ஏன் வாயால சொல்லுவேன் ?

ஏன் இப்ப விஜய் மாதிரி பேசுற? நாடு தாங்காது ..உன் பிரச்சினை என்னடா?

என் வருங்கால பொண்டாட்டியை , என்னோட மறுபாதியை, என் செல்லக் குட்டியை , என் பத்தினியை ..

டேய் .. டேய் .. நிறுத்து .. சேரன் மாதிரி ஓவரா பீல் பண்ணதடா ..nonsense ..மேல போ..

அது இல்லைங்க .. அவள எப்படி கூப்பிடறது ???? வெறும் பேர் சொல்லி கூப்பிட்டால் ஏதோ வாத்தியார் கூப்பிட்ட மாதிரி இருக்க்ன்னு சொல்றா.. வேற மாதிரி கூப்பிட்டால் கும்முன்னு குத்துறா ? நான் இப்ப என்ன செய்ய ??? ( விறைப்புடன் கேள்வி வருகிறது )

அப்ப விஜய் ..இப்ப மாதவனா..? சரி விடு .. வேணும்ம்னா ..அடியேய் செல்லம் அப்படி சொல்லு ..

அருந்ததி படம் பார்த்ததில் இருந்து , அடியேய் என்று சொன்னால் , அடி நிச்சயம் என்கிறாள்.

அப்ப Darling, Dear, My Sweety அப்படின்னு சொல்லிப் பாரு ..

சொன்னனே ..அதுக்கு அவ ..அவ..

ம்..சொல்லுடா ..சீக்கிரம் ..

ஒத்த வார்த்தையில அவ சொல்றா ..

என்னடா சொன்னா ?

"பச்சை தமிழச்சி" அப்படின்னு சொல்லி ஒன்னு கொடுத்தா பாருங்க .. வெளியே சொன்னால் வெட்க கேடு ... வேண்டாம் விட்டுடுங்க ..

இது என்னடா வம்பு ..பொண்டாட்டியை கூப்பிடறதற்க்கு இவ்வளவு அக்க போரா? நண்பர்களே ..நாலும் தெரிந்த பெரிய, சிறிய , புது பதிவர்களே , கல்யாணம் செஞ்சிகிட்ட பாவப்பட்ட ஆண் நண்பர்களே , கல்யாணம் பண்ணிகிட்ட பெண் முதளாளிகளே இந்த பாவப்பட்ட ஜென்மம் ஹரிக்கு ஒரு நல்ல பதிலா சொல்லுங்க பார்ப்போம் ..

திடீர் பஸ் கட்டணம் குறைப்பு தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சிகள் அனைத்தும் ராக்கெட் வேகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றன . ஒவ்வெரு கட்சிகளும் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்றும் முன்னர் என்ன செய்தேன் என்றும் மக்கள் மத்தியில் விளக்கி பிரசாரங்களை ஏற்படுத்தி வருகின்றன . எல்லா தேர்தலையும் விட இந்த தேர்தலில் முக்கியமான பிரச்சனையாக ஈழ தமிழர்களின் பிரச்னை மாறியுள்ளது இதை

கருத்துகள் இல்லை: