வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-18

வேணாம் பாஸ்..!

சொன்னாக் கேளுங்க...!

இதை தயவு செஞ்சி பாக்க வேண்டாம்...!

சொன்னாக் கேக்க மாட்டீங்க..!

சரி..! OK..! பாத்துக்கங்க..!

நாம சின்ன வயசுல இருந்தே, "இதைச் செய்ய்யாதே..! அதைச் செய்ய்யாதேன்னு..!"
"இங்க போகாதே..! அங்க போகாதேன்னு..!"
எப்படியெல்லாம்... எதிர் மறைக் (Negative) கட்டளைகளால் சூழப்படுகிறோம்...

அதை நாம எப்படி எதிர்கொள்கிறோம்ங்கறதை விளக்குவதற்க்காக மனோதத்துவ நிபுணர் "டெரன் பிரவுன்"- ங்கறவரு நடத்திக் காட்டிய பரிசோதனையின் வீடியோக் காட்சிதான் அது.

அந்த சின்னப்பசங்க கிட்ட ஒரு பெட்டியக் காட்டி...
இது்லக் கைய வச்சிராதீங்கன்னு... திரும்பத் திரும்ப சொன்னப்பறம் அவங்க என்ன பண்ணினாங்க...?

அப்புறம் என்ன நடந்திச்சு..?-ங்கறதைத்தான் நீங்க வீடியோவுல பாத்தீங்க.

சரி...! நான் ஒண்ணு சொல்றேன்.

"இப்ப நீங்க நீல நிறத்தைப் பத்தி நினைக்கக் கூடாது-ன்னு" நான் சொன்னா...

முதல்ல உங்க மனசுல நீல நிறத்தை நினைச்சுப் பாத்துட்டுத்தான், அதை நினைக்காம இருக்க முயறசி பண்ணுவீங்க.

சரியா..?

இன்னொரு உதாரணம்:

"நான சிகரெட் பிடிக்கக் கூடாது-ன்னு நீங்க நினைச்சீங்க-ன்னா...,"

முதல்ல உங்களுக்கு சிகரெட் நினைப்பு வந்து... அப்புறம்தான் அது வேணாம்-ன்னு நினைப்பீங்க.

இப்ப என்ன ஆகும்- ன்னா... ஆல்ரெடி உங்களுக்கு நீங்களே சிகரெட்டை நினைவுபடுத்திட்டீங்க.
அப்புறமென்ன..?

இன்னேரம் புகை பிடிக்கறதுக்கான முஸ்தீபுல இறங்கியிருப்பீங்க. (புகைப் பழக்கம் உள்ளவர்கள் மட்டும்.)

பைக்ல வெளிய கிளம்பறீங்க.
"இன்னிக்கு எந்த விபத்தும் நிகழக் கூடாதுன்னு" நினைச்சிட்டே போனீங்கன்னா...
கண்டிப்பா ஒரு சின்ன சிராய்ப்போடயாவது வீடு திரும்புவீங்க.

(ஏன்னா நீங்கதானே விபத்தை உங்க நினைப்புலயே கொண்டு போறீங்க?)

ஆக நம்ம மனசை...
நமக்கு எது தேவையோ... அதை நினைக்க பழக்கணும்.

தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விலக்கி...
அங்கே நமக்குத் தேவையான நேர்மறைச் சிந்தனைகளை நிரப்ப வேண்டும்.

"இன்னிக்கி நான் பாதுகாப்பாய் பைக்ல போய் வருவேன்-ன்னு நினைச்சுட்டே வண்டிய எடுங்க."

Relace your Negative thoughts by Positive thoughts.

எப்படி...?

அடுத்த பதிவுல இன்னும் விரிவா பாப்போம்.

"நன்றி: இங்க இருந்துதாங்க பாஸ...,் இந்த வீடியோவைச்் சுட்டேன்.
ஹி..! ஹி..! ஹி..!"

பதிவப்படிச்சுட்டு நல்லா இருந்திச்சுன்னா... பின்னூட்டம் போட்டே ஆக வேண்டிய கட்டாயமில்லை பாஸ். ஜஸ்ட்... மேல தமிழ்மண கருவிப்பட்டைல கட்டைவிரல் மேல இருக்க இடத்துல ஒரு தடவை க்ளிக் பண்ணுங்க. போதும். (அதுக்காக பின்னூட்டமே வாணாம்-னு அர்த்தமில்லை. விரும்பினால் போடுங்க. சரியா..?)

"அப்படியே இங்க க்ளிக் பண்ணி இந்த பதிவையும் படிச்சுப்பாருங்களேன். (விரும்பினால்)"

கால ஓட்த்தில் காணாமல் போனவை எழுதும் போதே கால ஓட்த்தில் புதிதாய் வந்தவையையும் எழுதுவது தானே முறை அதனால் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவைகளை எனது பார்வையில் எழுத போகிறேன்.

உலகில் மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்பதுதான் உலகில் மாற்றவே முடியாத விதி.

நீங்கள் சேமிக்கும் பணத்தை பாதுகாப்பாக வைக்கும் இடம் தேசிய மயமாக்கப்ட்ட வங்கிகள்தானே அப்படி பட்ட வங்கிகளில் பணம் எடுக்க வேண்டம் என்றால் அவ்வளவுதான் எழு கடல் எழு மலைதாண்டி கிளி உயிரை எடுத்து வரும் விஷயம். அதுவும் சனிக்கிழமை என்றால் 11.30 வரைக்கும்தான் அன்னைக்கு வேற பேங்குல கூட்டம் அல்லும்.

கவுன்டரின் உள்ளே இப்படித்தான் சம்பாஷனைகள் நடக்கும்...

நங்க நல்லூர் ஒரு கிரவுண்டு இடம் இருக்காம் நீ வாங்கிக்கிறியா?

அட நீங்க வேற பையனுக்கு வாங்கின லோனே மாசம் ஆன கழுத்தை கடிக்கிது...

ஒரு காலத்துல காடா இருந்த இடம் அந்தப்பக்கம் போகவே அப்பெல்லாம் பயமா இருக்கும்

இது ஆண்களின் சம்பாஷனை...

இதுவே பெண்களின் சம்பாஷனை வேறு மாதிரியாக இருக்கும்....

"மேடம் கொஞ்சம் சிக்கரம் பணம் எண்ணி கொடுங்க மேடம்"
நான் என்ன பத்ரகாளியா பத்துக்கை இருக்க நான் மனுசி சார் அத புரிஞ்சிக்கோங்க... அவசரத்துல ஒரு நோட்டு தப்பா வந்துட்டா நீங்க நேர்மையா கொடுத்துடுவிங்கலா? பணம்சார் உங்க வேகத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது.....

பெண் ஊழியர்களையும் குத்தம் சொல்ல முடியாது ஆனால் அவர்கள் பணத்தை மிக மெதுவாக எண்ணுவார்கள்.

காலையில வேலைக்கு போகனும் என்று புருஷனிடம் கெஞ்சியும் மீறி ஏதாவது நடந்து இருக்க வேண்டும்

அது அப்பட்டமாய் வெளியே தெரியும், தலை காய்ந்தவனிடம் எல்லாம் எறிந்து விழுவார்கள் ..

"ஏன் சார் ஒரு டேட்டை கூட பில்லப் கூட செய்யாம செலனை நீட்டறிங்க"?
என்று சொல்ல டென்ஷன்ல மறந்துட்டேன் என்று இவர் தன்னிலை விளக்கம் வேறு கொடுக்க அப்புறம் சண்டை நடக்க ஒரே காமெடியாக இருக்கும்...

எல்லா குறைகளையும் தீர்க்க ஏடிஎம் வந்தது அனைவர் வயிற்றிலும் பீர் வார்த்தது...

டேட் எழுதவில்லை என்ற சண்டை இல்லை, அவசரத்துக்கு பேனா எடுக்காமல் போய் எவரிடமும் வழிய வேண்டாம். மிக முக்கியமாக 100 ரூபாய் எடுக்க கால் கடுக்க கவுண்டரில் காத்து இருக்க தேவை இல்லை...
ரெகுலர் கஸ்டமர் என்றால் கவுண்டர் பின்புறம் போய் பணம் கட்டி விட்டு வரலாம்... இங்கு அப்படி இல்லை .இது மெஷின்....

எல்லோலரயும் எண்களாக ஞாபகம் வைத்துக்கொண்டு தாள்களாக கொடுக்கும் அதிசயம்.. ராமசாமியும் ஜாபர் அலியும் இதற்க்கு ஒன்றுதான்.

என்ன ஒரு குறை ஏட்டிஎம்மில் பணம் எடுத்து பர்ச்செஸ் போகலாம் என்று கையில் 100 வைத்துக்கொண்டு ஏட்டிஎம் சென்றால் நெட் ஒர்க் பெயிலர் நியரஸ்ட் ஏட்டி்எம்முக்கு செல்லவும் அங்கு சென்றால் இதே நிலமைதான்.

எவனோ ,

"உன் பணத்தை உன் முகத்துல இன்னும் பத்து நிமிஷத்துல வீசி எறியறேன் இல்லைன்னா நான் ரத்ன வேலுக்கு பொறக்கலடா"

என்று தொடை சவால் வீட்டு பணம் எடுக்க ஏடிஎம் வந்து நெட் ஒர்க் பெயிலியர் என்றால் எவ்வளவு ஆத்திரம் வரும் விளைவு

வடபழனி கே கே நகர் அசோக் பில்லர் கனாரா பேங்க் ஏடிஎம் டிஸ்பிளேக்களில் கோப முத்திரையாக சாவியால் கோடு கிழித்து இருப்பதை இன்றும் காணலாம்

ஏடிஎம் என்றால் எனி டைம் மணி என்று அர்த்தம்.....

எனது ஏடிஎம் கவிதை....

ஒவ்வோறுமுறை ஏடிஎம்மில்
பணம் எடுக்கும் போதும்
எடுக்கும் தொகையை விட
ஒருதாளாவது அதிகம்
இருக்கும் என்று
திரும்ப திரும்ப
சலிக்காமல் இன்றுவரை
எண்ணுகிறேன்....

என்ன செய்வது அது
என்னை விட பெரிய பிராடு போலும்...

அன்புடன்/ ஜாக்கிசேகர்

வேணாம் பாஸ்..!

சொன்னாக் கேளுங்க...!

இதை தயவு செஞ்சி பாக்க வேண்டாம்...!

சொன்னாக் கேக்க மாட்டீங்க..!

சரி..! OK..! பாத்துக்கங்க..!

நாம சின்ன வயசுல இருந்தே, "இதைச் செய்ய்யாதே..! அதைச் செய்ய்யாதேன்னு..!"
"இங்க போகாதே..! அங்க போகாதேன்னு..!"
எப்படியெல்லாம்... எதிர் மறைக் (Negative) கட்டளைகளால் சூழப்படுகிறோம்...

அதை நாம எப்படி எதிர்கொள்கிறோம்ங்கறதை விளக்குவதற்க்காக மனோதத்துவ நிபுணர் "டெரன் பிரவுன்"- ங்கறவரு நடத்திக் காட்டிய பரிசோதனையின் வீடியோக் காட்சிதான் அது.

அந்த சின்னப்பசங்க கிட்ட ஒரு பெட்டியக் காட்டி...
இது்லக் கைய வச்சிராதீங்கன்னு... திரும்பத் திரும்ப சொன்னப்பறம் அவங்க என்ன பண்ணினாங்க...?

அப்புறம் என்ன நடந்திச்சு..?-ங்கறதைத்தான் நீங்க வீடியோவுல பாத்தீங்க.

சரி...! நான் ஒண்ணு சொல்றேன்.

"இப்ப நீங்க நீல நிறத்தைப் பத்தி நினைக்கக் கூடாது-ன்னு" நான் சொன்னா...

முதல்ல உங்க மனசுல நீல நிறத்தை நினைச்சுப் பாத்துட்டுத்தான், அதை நினைக்காம இருக்க முயறசி பண்ணுவீங்க.

சரியா..?

இன்னொரு உதாரணம்:

"நான சிகரெட் பிடிக்கக் கூடாது-ன்னு நீங்க நினைச்சீங்க-ன்னா...,"

முதல்ல உங்களுக்கு சிகரெட் நினைப்பு வந்து... அப்புறம்தான் அது வேணாம்-ன்னு நினைப்பீங்க.

இப்ப என்ன ஆகும்- ன்னா... ஆல்ரெடி உங்களுக்கு நீங்களே சிகரெட்டை நினைவுபடுத்திட்டீங்க.
அப்புறமென்ன..?

இன்னேரம் புகை பிடிக்கறதுக்கான முஸ்தீபுல இறங்கியிருப்பீங்க. (புகைப் பழக்கம் உள்ளவர்கள் மட்டும்.)

பைக்ல வெளிய கிளம்பறீங்க.
"இன்னிக்கு எந்த விபத்தும் நிகழக் கூடாதுன்னு" நினைச்சிட்டே போனீங்கன்னா...
கண்டிப்பா ஒரு சின்ன சிராய்ப்போடயாவது வீடு திரும்புவீங்க.

(ஏன்னா நீங்கதானே விபத்தை உங்க நினைப்புலயே கொண்டு போறீங்க?)

ஆக நம்ம மனசை...
நமக்கு எது தேவையோ... அதை நினைக்க பழக்கணும்.

தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விலக்கி...
அங்கே நமக்குத் தேவையான நேர்மறைச் சிந்தனைகளை நிரப்ப வேண்டும்.

"இன்னிக்கி நான் பாதுகாப்பாய் பைக்ல போய் வருவேன்-ன்னு நினைச்சுட்டே வண்டிய எடுங்க."

Relace your Negative thoughts by Positive thoughts.

எப்படி...?

அடுத்த பதிவுல இன்னும் விரிவா பாப்போம்.

"நன்றி: இங்க இருந்துதாங்க பாஸ...,் இந்த வீடியோவைச்் சுட்டேன்.
ஹி..! ஹி..! ஹி..!"

பதிவப்படிச்சுட்டு நல்லா இருந்திச்சுன்னா... பின்னூட்டம் போட்டே ஆக வேண்டிய கட்டாயமில்லை பாஸ். ஜஸ்ட்... மேல தமிழ்மண கருவிப்பட்டைல கட்டைவிரல் மேல இருக்க இடத்துல ஒரு தடவை க்ளிக் பண்ணுங்க. போதும். (அதுக்காக பின்னூட்டமே வாணாம்-னு அர்த்தமில்லை. விரும்பினால் போடுங்க. சரியா..?)

"அப்படியே இங்க க்ளிக் பண்ணி இந்த பதிவையும் படிச்சுப்பாருங்களேன். (விரும்பினால்)"

தினமும் பல்லாயிரக்கணக்கான படங்கள் ஈ மெயி்லில் நிறைய வருகின்றன, நான் என்ன செய்கின்றோம் படிக்கின்றோம் டெலிட் செய்கின்றோம், அப்படி செய்யாமல் நான் ரசித்ததை உங்களுக்கு அன்ன பறைவை போல் கொடுக்க இருக்கிறேன். உலகில் ஏதோ ஒரு பகுதியில் அல்லது கணத்தில் நடந்த படங்களை உங்களுக்கு தருகிறேன்....

அன்புடன் /ஜாக்கிசேகர்

இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும், புராண இதிகாசங்கள் பெருமையுடன் எடுத்தியம்பிய, இலங்காபுரி என்னும் அழகுறு தீவின் தலையென விளங்கும் வட திசையாம் யாழ்ப்பாணம் என்னும் அழகுறு நகரில் நீர்வளமும் நிலவளமும் மட்டுமல்ல கலைவளமும் கல்விக்கூடங்களும் கற்றவர் பலரையும் கல்வியில் சிறந்த கனதனவான்களையும் கொண்ட கிராமமாக விளங்கும் "மூளாய்" என்னும் பதியினிலே வதிரன்புலோ என்னும் திவ்விய ஷேத்திரத்தில் அழகு பொழியும் திருவீதிகளுடன் அண்ணனும் தம்பியும் வாழ்ந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என எடுத்துக்காட்டாக தம்பிக்கு துணையாக அண்ணனும் அண்ணனுக்குத் துனையாக தம்பியுமாக ஓரே வீதியில் வானளாவ உயர்ந்து நிற்கும் இராஜகோபுரத்துடன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமும் அருகில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலயமும், இந்தஇரு ஆலயங்களுக்கும் பொதுவான சித்திரத் தேரும் அமையப் பெற்றமை சிறப்புக்குரியதாகும். இப்பதியில் வீற்றிருந்து திருவருள் பாலித்து வரும் எம்பிரான் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 30.03.2009 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும்.

03.04.2009 வெள்ளிக்கிழமை மாலை சப்பறத் திருவிழா

07.04.2009 செவ்வாய்க்கிழமை காலை தேர்த் திருவிழா

08.04.2009 புதன்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிக்கமும்

09.04.2009 வியாழக்கிழமை மாலை பூங்காவனத் திருவிழா

இவ்வேளையில் நாட்டில் சாந்தியும் சமாதானமும் கிடைக்க எல்லாம்வல்ல முருகப் பெருமானைப் பிரார்த்திப்போமாக.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

செய்தியை அனுப்பிய கா. பார்த்தீபன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

கருத்துகள் இல்லை: