புதன், 29 ஏப்ரல், 2009

2009-04-29

மணவாழ்க்கைச் சட்டம்!    புதன் 29, ஏப்ரல் 2009 இள மனங்களைக் கேட்காமலே இங்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன!
மணவாழ்க்கைச் சட்டம்!    புதன் 29, ஏப்ரல் 2009 இள மனங்களைக் கேட்காமலே இங்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன!

படம் எடுப்பதில் ராம் கோபால் வர்மாவை நமது கெளதம் வாசுதேவ மேனன் பின்னுக்கு தள்ளினாலும் ஆச்சரியமில்லை.

விண்ணைத்தாண்டி வருவாயா இன்னும் முடியவில்லை. அதற்குள் அடுத்தடுத்த புராஜெக்ட்கள். த்ரிஷா நடிப்பில் தொடங்கப்பட்ட சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை முடிக்கிறார் என்பது ஒரு தகவல்.

இன்னொருபுறம் தனது உதவியாளர் வீரா என்பவரை வைத்து புதிய படம் ஒன்றை தொடங்கயிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் விருப்பமும் கெளதமுக்கு இருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டான வேட்டையாடு விளையாடு தமிழ் சினிமா மேக்கிங்கில் ஒரு மைல் கல் என்றால் மிகையில்லை. கமல், ஜோதிகா நடிப்பு படத்தின் மற்றொரு ப்ளஸ்.

இரண்டாம் பாகம் தயாரானால் கமல் இருப்பார், ஜோதிகா? ம்... வேறொரு நல்ல நடிகையை தேட வேண்டியதுதான்!

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் எதிர்பார்ப்பு இதுதான். சிம்பு அஜித்துக்கு வாய்ஸ் கொடுக்கப் போகிறார்!

அஜித்தின் ரசிகர் சிம்பு. இதனை பல பேட்டிகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார். தனது மன்மதன் படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க என கோஷமிடுவதுபோல் ஒரு காட்சியும் வைத்திருந்தார் சிம்பு.

சமீபத்தில் வெளியான சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜித்போல் காஸ்ட்யூம் அணிந்து சிம்பு செய்த அலப்பறையை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சரி, விஷ­யத்துக்கு வருவோம். சிம்பு தனது படங்களில் மட்டுமின்றி விரும்பி கேட்கும் அனைவரின் படத்திலும் பின்னணி பாடி வருவது தெரியும். அஜித்தின் அசல் படத்திலும் ஒரு பாடல் பாடுகிறாராம்.

சரண் இயக்கும் அசலுக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். படத்தில் வரும் அஜித்தின் ஓபனிங் பாடலை சிம்புவை வைத்து பாட வைக்கலாம் என்பது சரண் மற்றும் பரத்வாஜின் விருப்பமாம். இந்த விருப்பத்துக்கு அஜித் நிச்சயம் தடை சொல்லப் போவதில்லை. சிம்புவைப் பொறுத்தவரை அஜித்துக்கு பாடுவது அல்வா மாதிரி.

ஆக, அஜித்துக்காக சிம்பு வாய்ஸ் கொடுக்கயிருப்பது உறுதி என்கிறார்கள் அசல் யூனிட்டில். பொருத்திருந்து பார்ப்போம், ஸாரி… கேட்போம்.

மலை போல உசரம் இருந்தா மட்டும் போதாது. மனசும் அப்படியிருக்கணும்! அழகர் மலை ஹீரோ ஆர்.கேவுக்கு அப்படியரு மனசு. இல்லேன்னா நாலு நாளைக்கு மேலே தேதி கேட்டா, 'ரேஷன் கார்டு இருந்தா கொடுங்க. யோசிப்போம்'னு சொல்ற வடிவேலு இருபது நாள் தொடர்ச்சியா கால்ஷீட் கொடுப்பாரா? ஏழு மாடி கொண்ட விஜய் பார்க்கில் ஷ§ட்டிங். மூன்றாவது மாடியில் இருக்கும் வடிவேலு கோபித்துக் கொண்டு ஜன்னல் வழியாக இறங்க முயல்வது போல காட்சி. நிஜமாகவே உணர்ச்சிவசப்பட்ட புயல், கதவை பிடித்துக் கொண்டு சன் ஷேர்டில் இறங்கிவிட்டார். கீழே பார்த்தால் 'குப் குப்..' அதிர்ச்சியில் 'அட பாவி மக்கா. கைய புடிச்சு மேலேத்துக்கப்பா'ன்னு அலற, பாய்ந்து வந்த டைரக்டர் எஸ்.பி.ராஜகுமார் வடிவேலுவை காப்பாற்றினாராம். (நல்லா கௌப்புறாங்கப்பா பீதிகளை!)

இப்போ இசைஞானி இளையராஜாவும் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியதோடு அப்பாடலில் தோன்றி நடித்தும் இருக்கிறாராம். அம்மாவை போற்றும் பாடல் இது.

உலகம் இப்போ எங்கோ போகுது.
எனக்கு இந்த அன்னை பூமி போதும்.
இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார்.
எனக்கு எந்தன் சொந்த நாடு போதும்...

வாலி எழுதிய இப்பாடலுக்கு ட்யூன் போட்டு பாடல் பதிவும் நடந்தது. ரொம்ப தயங்கி தயங்கி 'ஐயா, இதிலே நீங்களே நடிச்சா நல்லாயிருக்குமே?' என்றாராம் படத்தின் இயக்குனர் எஸ்.பி.ராஜகுமார். உடனே ஒப்புக் கொண்ட ராஜா, சென்னையில் இருந்து தான் பிறந்த பண்ணைபுரம் வரைக்கும் வந்து நடித்து கொடுத்திருக்கிறார். ஒரு காட்சியில் இவரது அன்னை சமாதியில் அவர் வணங்குவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை: