இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் 2,100 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திறமையின்மையால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுதும் நிறுவனம் நடத்திய திறன் சோதித்தலின் விளைவு.
மொத்தம் 60,000 பணியாளர்களின் திறன் சோதிக்கப்பட்டு, அதிலிருந்து 2,100 பேர் நீக்கப்பட்டுள்ளனர். பயிற்சி்க் காலத்தில் இருப்பவர்களுக்கு நடத்தவில்லை. பெரிய நிறுவனங்கள் ஏதோவொரு காரணம் சொல்லி ஊழியர் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன. தற்போதுள்ள சூழலில், தவிர்க்க இயலாத ஒன்று!
சில மாதங்களுக்கு முன்புவரை கூட பணியாளர்கள், பெஞ்ச் எனப்படும் காத்திருப்பில் வைக்கப்படுவார்கள். வேலை செய்பவர்கள் பெறும் சலுகைகள் இவர்களுக்கும் உண்டு. இன்றைய யதார்த்தம் வேறு. நிறுவனங்கள் முன்பு போல் பொருளீட்ட முடியவில்லை. வர்த்தகத்தில் நிலைத்திருக்கவே பாடுபடுகின்றன. செலவுகளைக் கூடுமானவரை குறிவைத்துக் குறைக்கின்றன. அதில் ஒருவழி, தேவையற்ற அல்லது நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க இயலாத பணியாளர்கள் வெளியேற்றப்படு்தல்.
நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். சூழலுக்கேற்ப முடிவெடுத்துச் செயல்படுத்துவதில் இந்தியர்கள் தலைசிறந்தவர்கள். பணி நீக்கத்தை நம்மால் தடுக்க இயலாது. நம்மைப் பணிநீக்கம் செய்யாதபடித் தடுத்துக் கொள்ள முடியும்.
உயிர்க் கொல்லி நோய் எனப்படும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுப் பரப்புரைகள் நம் நாட்டில் மிகுதியாக செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இத்தகைய பரப்புரைகள் எல்லா ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். மக்களிடம் எயிட்ஸ் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமையால்தான் இந்நோய் பரவுவதாக அரசு உட்பட அனைத்து அதிகார நிறுவனங்களும் பரப்புரை செய்து வருகின்றன. அடித்தளத்தில் நேர்ந்த குறைபாட்டை மேல் கட்டுமானத்தில் சரி செய்வதைப் போல்தான் இப் பரப்புரை உள்ளது. சாலையோரத்தில் வாழ்வோர், குடிசையில் கூட்டுக்குடும்பமாக வாழ்வோர் ஆகியோருக்குள்ள பாலியல் சிக்கல்கள் பெரிதும் கண்டுகொள்ளப் படுவதில்லை. கூட்டுக்குடும்பம் வசித்து வந்தது/ஒரே அறையில்/அப்பா அம்மா/பெரியவன் அவன் சம்சாரம்/நடாள் அவன் சம்சாரம்/சின்னவன் அவன் சம்சாரம்/மருமக்கள் மூவரும் தாய்மையடைந்தனர்/என்ன நடந்தது/எப்பொ நடந்தது/எப்படி நடந்தது? என்ற மகுடேஸ்வரனின் கவிதை எள்ளல் தொனியில் இருந்தாலும் கவி மாந்தர்களின் பாலியல் சிக்கல் நம் அதிகார நிறுவனங்களை வெட்கித் தலை குனிய வைக்கும் ஆற்றல் படைத்தது. பாலுணர்ச்சி எல்லா உயிர்களுக்குமுள்ள ஓர் இயல்புணர்ச்சி என்றாலும் அது குறித்து வெளிப்படையாக நாம் பேசுவதில்லை. நம் பண்பாடு அதற்குத் தடையாக உள்ளதாகக் கருதுகிறோம். தமிழர்களுக்கு பாலியல் குறித்த மரபு வழி அறிவை நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், விடுகதைகள், சிற்பங்கள் என கலை இலக்கிய வடிவங்கள் அனைத்தும் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன என்பதுதான் உண்மை. காமத்தைக் கொண்டாடிய மரபு தமிழர் மரபு என்பதைக் காமன் பண்டிகைகள் நமக்கு உணர்த்துகின்றன.ரதி மன்மதன் கதைப்பாடல்களும் அதை உறுதி செய்கின்றன. சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது யோனிப் பொருத்தத்தை முக்கியமானதாகக் கருதுவர். பொருந்தாக் காமம் தீராத் துன்பம் என்கிறது நம் செம்மொழி. அறம் பொருளுக்கு இணையாக நம் நீதி நூல் காமத்தையும் பேசுகிறது. கலை இலக்கியங்கள் காமத்தை உணர்வு பூர்வமாகவும், அழகியல் ரீதியாகவும் வெளிப்படுத்துகின்றன என்றால் காம சூத்திரத்தை அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்துகின்றன மதன நூல்கள். கன்னலன்றி வேம்பு நுகர் காமத்துரோகிகள் போற் பிள்ளையரு தெய்வத்தை பேசாமலே எந்நாளும் சாற்றுவதுங் காமாலை சாதிப்பதுங் கரணம் போற்றுவது காமனடி போதுஎன்று கடவுள் வாழ்த்தோடு தொடங்கி புணர்ச்சி விதிகளை விலாவாரியாக விளக்குகிறது கொக்கோக நுட்பம். பிறப்புறுப்பு, பாலியல் நுட்பம், கருத்தரித்தல், மித மிஞ்சிய பாலுறவால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியன பற்றியெல்லாம் நவீன அறிவியலை விஞ்சும்படியான கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இறுதியில் மானிடர் ஒழுக்கம் பற்றியும் கூறத் தயங்கவில்லை. வாய் மொழி இலக்கியம், நாட்டுப்புற இசை, கூத்து, வானியல், கட்டடக்கலை, ஓவியக்கலை, மருத்துவம், வேளாண்மை, வாணிகம், நெசவு என சகலத் துறைகளிலும் தமிழர்களுக்கென்று தனித்த மரபு உண்டு என்பதைக் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள் எனப் பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழர்கள் பாலியல் குறித்தும் தெளிந்த அறிவுடையவர்களே என்பது கல்விப் புலங்களால் கண்டு கொள்ளப்படாத ஒன்று. இது குறித்த ஆய்வுகள் பெரிதும் நடைபெற வேண்டும். பாலியல் குறித்த தயக்கங்கள் தகர்த்தெரியப் பட்டால் எதிர்காலத்தின் மனித வளம் காப்பாற்றப்படும். காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்
போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனாதிபதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் சவாலை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். தான் தெரிவித்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் ஜனாதிபதி தயக்கம் காட்டாமல் மேல்மாகாண சபைத் தேர்தல் நடக்கவிருக்கும் இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்க விவாதத்திற்குரிய திகதியை [...]
போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனாதிபதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் சவாலை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். தான் தெரிவித்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் ஜனாதிபதி தயக்கம் காட்டாமல் மேல்மாகாண சபைத் தேர்தல் நடக்கவிருக்கும் இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்க விவாதத்திற்குரிய திகதியை [...]



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக