
"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க".
என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட
தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------------------------------
17. சமதர்மம்
சமதர்மக் கொம்கைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் எந்த ஸ்தாபனக்காரர் ஆனாலும், எந்தத் தலைவரானாலும்,எந்தம் பிரமுகர் ஆனாலும் முதலில் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா,மூடநம்பிக்கையற்றவர்களா (உண்மையான நாத்திகர்களா) என்று சந்தேகமறத் தெளிவாய்த் தெரிந்துகொண்ட பிறகே, அவர்களை நம்புங்கள்; அவர்களுடன் இணைப்புக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளால் விளைந்த கேடு
நமது நாட்டில் இன்று அரசியல் பிழைப்புக்காரர்களாய் விளங்குபவர்களில் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது பேர், தங்கள் வாழ்வு நலத்திற்காக எந்த வேஷத்தையும் போட்டுக்கொண்டு - எந்தக் கொள்கைகளையும் சொல்லிக்கொண்டு மானம், வெட்கம், நேர்மை, உண்மை, யோக்கியம், நாணயம் இல்லாமல் மக்களை ஏய்த்தும் பிழைக்கத் துணிந்து முன்வந்து விட்டார்கள்.
இது-
காந்தி சகாப்தம் ஏற்பட்டதிலிருந்து பாவமன்னிப்பு ஸ்தாபனம் போல் அரசியலைக் கருதிக்கொண்டு நடந்து - நாட்டையும், நாட்டின் உயர் பண்புகளையும் அடியோடு அழித்து ஒழித்து கடும் புலி வாழும் காடாக ஆக்கிவிட்டது.
கேடு கெட்ட அரசியல் நிலை
இந்த இழி நிலை சிறிதாவது மாற்றம் அடைய வேண்டுமானால், நமது நாட்டு கேடுகெட்ட அரசியல் நிலை மாறியே ஆகவேண்டும். அதனால் -சமதர்மம் என்ற கொள்கையைக் காட்டிப் பேசும் வெறும் பேச்சைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள்.
ஒருவன் பேத வாதியாய் இருந்தாலும், அவன் பகுத்தறிவு -
நாத்திகவாதியாய் இருந்தால் அவனை நம்புங்கள். கண்டிப்பாய் நாமம், விபூதிக்காரனை நம்பாதீர்கள். கண்டிப்பாய் நம்பாதீர்கள்.
பகுத்தறிவாளர்களுக்குத்தான் இடம் உண்டு என்று சொல்லப்படுகின்ற ஸ்தானங்களை, குழுக்களை நம்புங்கள்.
லாபம் இல்லாவிட்டாலும் நட்டம் இருக்கக்கூடாது.
சமதர்மத்துக்கும் பகை
ஒருவன் பூணூல் போட்டுக் கொண்டு, நெற்றிக்குறி இட்டுக் கொண்டு - அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து "நான் பொதுவுடமைவாதி"அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்டு என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால், நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாளாவீர்களோ-
அதே போல்தான்
நெற்றிக்குறியுடன் ராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு - பாராயணம் செய்து கொண்டு, பூஜை புனஸ்காரங்களுடன் திரிகின்றவனை சமதர்மவாதி என்று நம்புவதால் முட்டாள்களாவீர்கள்; நம்பாதீர்கள்; கண்டிப்பாய் நம்பாதீர்கள்.
புரட்டர்கள்
ஆனால் -
இந்த நாமக்கார, விபூதிக்கார சமதர்மவாதிகள் அத்தனை பேரும் புரட்டர்கள் அல்லது முட்டாள்கள் என்பவர்களே; எந்த அளவுக்கு இவர்களை அண்டுகின்றோமோ -
அந்த அளவுக்கு மோசம்தான்; ஆபத்துத்தான்.
உணருங்கள்.
--------------------- தந்தைபெரியார் – நூல்:-"உயர் எண்ணங்கள்" பக்கம்:-39-40
(இத்துடன் இந்நூல் முடிவடைந்தது- படித்த தோழர்களுக்கு மிக்க நன்றி)
நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மீது ஞாயிற்றுகிழமையன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை மதியம் தூதுரகத்திற்குள் ஒரு சில நபர்கள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும், எனினும் அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லை என்பதால் நபர்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறினார் நார்வேவுக்கான இலங்கை தூதர் அசலா வீர கோன். மேலும் இந்த தாக்குதல்களை சமீபத்தில் இங்கே ஆர்பாட்டம் நடத்துபவர்கள் தான் செய்து இருக்க வேண்டும் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும், இருந்த போதிலும் யார் மீதும் தாங்கள் குறிப்பாக [...]
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் தேதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் தற்காலிகமாக நிறுத்திவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து தப்பித்து வெளியேற ஒரு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கத்தில் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படும் என்று இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் நிறுத்தம் தொடர்பில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரையில் கருத்து எதுவும் வெளியாகவில்லை. நண்பர்களுக்கு இந்தப் பதிவை [...]

சில மணித்தியாலங்கள் முன்னதாக twitter ஐ ஒரு வகை வைரஸ் தாக்கியது. வைரஸை உருவாக்கியவரது twitter கணக்கை (profile) அணுகியதை தொடர்ந்து அவர்களது கணக்கும் மாற்றமடைய தொடங்கியது. அவர்களுடைய கணக்கும் StalkDaily.com ஏற்றவாறு மாற்றடைய தொடங்கியது.
twitter நிர்வாகிகள் துரிதமாக செயற்பட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தற்பொது வழமை போல் இயங்க ஆரம்பித்து விட்டது. இந்த தாக்கத்துடன் சம்பந்தமான இணையத்தின் சொந்தக் காரர் 17-வயதுடைய kid Mikeyy Mooney என்பவராம். அவர் BNO செய்திச் சேவைக்கு பின்வருமாறு பதிலளித்தார்.
"it's for boredom"
மேலதிக செய்தி:- http://www.bnonews.com/news/242.html
இது தொடர்பாக எனக்குக் கிடைத்த வீடியோ காட்சி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக