செவ்வாய், 14 ஏப்ரல், 2009

2009-04-11

  தலைவரின்  மகளுடன் கூட்டணி சேர்வதாகச் சொன்ன ஹாலிவுட் நிறுவனம் பின் வாங்குகிறதாம். முதலில் எல்லாமே நீங்கதான் என்று சொன்ன அந்த நிறுவனம், தற்போது போ கம் படத்தின் ஸ்கி‌ரிப்ட் கேட்டு நச்ச‌ரிக்கிறதாம். 

  கழன்று கொள்வதற்கான வெள்ளோட்டம் இது என அனுபவசாலிகள் சொன்னதால் கலக்கத்தில் இருக்கிறாராம் உச்சத்தின் மகள்

****************************************************
  என்னவோ தெ‌ரியவில்லை உலக நாயகனுக்கு தொட்டதெல்லாம் துயரமாகவே முடிகிறது. யோகி போகியானது ஒருபுறம் என்றால் அடுத்து எடுப்பதாக இருந்த தலைவன் படத்திலும் தலைவலி. 

இந்தியில் படத்தை தய‌ரித்தவர்களிடமிருந்து முறைப்படி ‌ரீமேக் உ‌ரிமையை வாங்கிய பிறகு, அவர்கள் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயா‌ரித்தவர்கள், உண்மையான ரைட்ஸ் எங்களிடம்தான் இருக்கிறது என புதிதாக ஒரு குரூப் போர்க் கொடி தூக்கியிருக்கிறதாம். தாடியை சொறிந்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறார் உலகம்.

***************************************************
திமிரு நடிகருடன் மீண்டும் ஜோடி சேரயிருக்கிறார் சென் நடிகை. முதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது எழுந்த கிசுகிசு இதனால் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. 

ஜோடி சேருவோம் என்று நடிகை விரும்பிப் போய் நடிகரை கேட்டாராம். மனம் கனிந்த நடிகரும் உடனே ஓகே சொல்லியிருக்கிறா

****************************************************

புத்த இயக்குனர் தனது ஹெவன் படத்துக்கும் சிக்ஸ் பேக் ஹீரோவிடம்தான் கால்ஷீட் கேட்டிருக்கிறார். 

யானை படத்துக்கு வர வேண்டிய சம்பளமே இன்னும் கிடைக்கவில்லை. மறுபடியும் ஒரு படமா என்று கௌரவமாக கழன்று கொள்ள, வேறு வழியில்லாமல் அவர் பிடித்ததுதான் விரல் நடிகராம்

***********************************************************

சத்தம் போடாத முட்டைக் கண் நடிகர் பற்றிதான் வயிறு தீப்பிடிக்க பேசுகிறார்கள் கோலிவுட்டில். 

அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கும் இவர், உச்சத்துக்கே ஜோடியாக நடித்த பூம்பாவாயுடன் டேட்டிங் சென்றாராம். 

இந்த எடக்கு மடக்கு காம்பினேஷனின் அடித்தளம் தெ‌ரியாமல் புகைந்து கொண்டிருக்கிறார்கள் டேட்டிங் டேட்ஸ் கிடைக்காதவர்கள்

***************************************************************
அப்பா கண்டிக்கவே மாட்டார் என்று பேட்டி கொடுத்துக் கொண்டே கண்டபடி மகள் சுற்றுவதால் குறுமுனி இயக்குனர் வீட்டில் கசமுசாவாம். 

நடிக்கிறது ச‌ரி, ஆனால் அளவோடு ஊர் சுற்று என முனிவர் போடும் வட்டத்தை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறார் மகள். 

ஒருகட்டத்துக்கு மேல் கண்டிக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் காதலில் கோட்டை கட்டிய குறுமுனி

*****************************************************************

எகிப்து எம்பள நிறுவனம் தல தளபதி படங்களின் தோ‌ல்‌வியால் துவண்டு போயிருக்கிறது. 

கோடிகளை கலைத்துறையில் கோட்டைவிட்டது போதும் என்று முடிவெடுத்திருப்பவர்கள் தங்களது பிஸினஸ் பார்வையை கடல் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். 

அதாவது மீன்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம். கலையில் விட்டதை வலையில் பிடிக்கப் பார்க்கிறார்கள். வெற்றி கிட்டட்டும்

நன்றி : வெப்துனியா.காம்

செம்ம தாஙக்ஸ் மச்சான்!

நமீதாவின் தொடையை தின்ன வந்த மாட்டை ஆக்ரோஷத்துடன் விரட்டினார் நமீதா ரசிகர். கிழிந்திருந்த போஸ்டரை நாக்கில் எச்சில் எடுத்து தடவி மீண்டும் சுவற்றில் ஒட்டி பரவசத்துடன் பார்த்தார்.

இன்றைய ஸ்பெஷல்

ரெண்டடுக்கு டிபன் பாக்ஸில் இருந்த பையனின் மதிய டிபனை குப்பைத் தொட்டியில் கொட்டினாள் அம்மா இரவு.அலாரம் வைத்து விடிகாலையில் எழுந்து செய்த டிபன். 

வாக்கிங்

நடுநீசியில் பாலத்தின் மீது எக்பிரஸ் ரயில் எதற்கோ நின்றிருந்தது.அவசரமாக கதவை திறந்து இறங்கினான் சுப்புரத்தினம். இவனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. 

ஆதலினால் காதல் செய்வீர்

"பொய்ய்ங் ..பொய்ய்ங்' பல வண்டிகள் ஹாரன் சத்தம் அடித்தும் ட்ராபிக்கை விடவில்லை கான்ஸ்டபிள். நடு ட்ராப்பிக்கில் காதல் செய்துக் கொண்டிருந்த நாயகளின் காதல் முடியும்வரைக் காத்திருந்து ,பிறகு செல்லமாக ஒரத்தில் விரட்டி ட்ராப்பிக்கை அனுமதித்தார். 


EMI அதிர்வுகள்

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கணினி திரை அதிர்ந்தது.அலைபேசியில் எஸ் எம் எஸ். வீட்டுக் கடனின் 12வது தவணை Rs.7224/- இன்று வங்கியில் வருகிறது.தகுந்த பேலன்ஸ் வைக்கவும்.காலையிருந்து பார்த்துக்கொண்டிருந்த செக்ஸ் சைட்டை மூடி பாங்கிற்க்கு அலறி அடித்துக்கொண்டு ஓடினான். 

படிக்க: திரில்லர்
கதையின் முடிவு என்ன? சொல்லியாச்சு!




http://raviaditya.blogspot.com/feeds/posts/default


More than a Blog Aggregator

by தீப்பெட்டி
நம்ம தலைவர்களின் கருத்துகளை படித்து பாருங்க...... இப்போ சிரிக்க வச்சாலும் இது நாளைக்கு உண்மையாகலாம். யார் கண்டது.....நாம எப்பாடு பட்டாவது நம்ம இறையாண்மைய காப்பாத்த வேண்டியது இருக்கே


தலைவர்: எதிர் கட்சியில் கேட்கிறார்கள் ஏன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று, கடைசி பத்து மாதம் உள்ள எம்.பி பதவியை இலங்கை தமிழர்களுக்காக ராஜினாமா செய்ய எனக்கு மனம் வரவில்லை. அதில் பயனும் இல்லை. நீங்கள் இந்த முறை 40 தொகுதியிலும் எங்கள் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைத்தால், இலங்கை போர்நிறுத்தத்தை வலியுறுத்தி அவர்கள் பதவி ஏற்ற கையுடன் ராஜினாமா கடிதத்தினை அளிப்பார்கள் (யாரிடம் என்று சொல்ல மாட்டேன்- அவசியம் ஏற்பட்டால் அவரவர் மனைவிமாரிடமோ அல்லது துணைவியாரிடமோ) என உறுதி கூறுகிறேன்.

தலைவி: எங்கள் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்தால் அவர்களை கூட்டணி தலைவருடன் நல்ல தோணியில் ஏற்றி இலங்கை தமிழ் மக்களுக்காக பக்க்ஷேவுடன் இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவைப்பேன்.

அரிதார தலைவர்: எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்று நன் சொல்லமாட்டேன்,சொன்னால் மற்ற கட்சிகார்கள் காப்பி அடித்து விடுவார்கள். நீங்கள் வெற்றி பெற வைத்து பாருங்கள். இலங்கை தமிழர்களை இந்திய தமிழர்களாக்கி விடுவோம்.

தேசிய மத தலைவர்: எங்கள் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்தால், ராமர் பாலத்தை மீண்டும் உருவாக்கி இலங்கைக்கு எங்கள் தலைவர் ரத யாத்திரை மேற்க்கொள்ளுவார்.

தேசிய மதசார்பற்ற தலைவர்: நாங்கள் போர்நிறுத்தத்தை இப்போது போல எப்போதும் வலியுறுத்த நீங்கள் எங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் அதுதான் இந்திய இறையாண்மைக்கு நீங்கள் செய்யும் மரியாதை. எதிர் கட்சியை ஆதரித்தால் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி (இந்திய இறையாண்மையா இலங்கை இறையாண்மையா என்பதை எங்கள் தலைவிக்கு மட்டும் தான் சொல்லுவோம்) கைது பண்ண தயங்க மாட்டோம்.

இந்திய தமிழர்கள்: சீரியல் பார்த்து அழுது போரடித்த நேரத்தில் ஈழ தமிழர்களுக்காகவும் அழுவோம். அதுவும் போரடித்தால் எங்க 'தலை' களின் கருத்துகளை எண்ணி சிரிப்போம்.

ஈழ தமிழர்கள்: இன்று நான்........நாளை ........ நீயாய் இருக்கக்கூடாது. அதுவே எனது கடைசி ஆசை.

இலங்கையில் ஒரு யுத்தநிறுத்தத்தினையோ அல்லது ஒரு இடைக்கால மோதல் தவிர்ப்பினையோ மேற்கொள்ளும்படி கோருவதை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தவிர்த்திருந்த மறுதினமே அவரது மிகவுயர்ந்த தரத்தினரான மனிதவுரிமை அதிகாரி ஜோன் ஹோம்ஸ், பிரித்தானிய கார்டியன் பத்திரிகையில் தெரிவித்த கருத்தில் இடைக்கால போர் ஓய்வு வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்ற மதியநேர செய்தியாளர் மாநாட்டில் இன்னர் சிற்றி பிறஸ் சார்பில், ஜோன் ஹோம்ஸ் இன் கருத்து இப்போது ஐ.நா.வினது நிலைப்பாடா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் நுட்பமான விபரங்களை நீங்கள் நாளையோ, நாளை மறுதினமோ அறியலாம் என்று பான் கீ மூனின் பேச்சாளர் மைக்கெல் மொன்ராஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் எந்தவொரு விமர்சனத்தையும் நிராகரிக்கும் நிலையில், ஒரு மனிதாபிமான இடைக்கால போர் ஓய்வினைக் கூட கோரும் நிலையில் இல்லை. ஆனால், ஹோம்ஸ் எதிர்வுகூறுவது போன்று கடற்கரையோரம் இரத்த காடாகும் நிலை ஏற்படுமாயின் ஐ.நா. மீது குற்றஞ் சுமத்ப்படுவதை அவர் விரும்பவில்லை. இருவகை நிலைப்பாட்டினை எடுப்பதும் தனது அறிக்கையை வெளியிடச் செய்வதும் ஐ.நா.வின் பழைய நிலையிலிருந்து மீட்புப் பெற உதவலாம் என அவதானிகள் கூறுவதாக இன்னர் சிற்றி பிறஸ் கூறுகிறது. இதேவேளை, இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட செலவினத்தையும், வடக்கின் தடுப்பு முகாம்கள் தொடர்பான செலவினத்தையும் ஈடுசெய்யும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள இரண்டு பில்லியன் டொலர்கள் தொடர்பான கடன் பற்றி ஏப்ரல் 25ஆம் திகதி முடிவு செய்யப்படவிருக்கிறது.

மேலும் அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஜி20 மõநாட்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் சில உறுதிப்பாடுகள் விடப்பட்டுள் ளன. இந்த இரண்டு பில்லியன் டொலர்கள் சிறிய விடயம். மனிதவுரிமைகள் பற்றி கரிசனை கொள்வது யார்? என்பதே சிலரின் அபிப்பிராயமாகவுள்ளது. இதேவேளை,இன்னர் சிற்றி பிறஸ்: த கார்டியன் பத்திரிகையில் வெளியான அமைப்பு ஐ.நா.வினதா அல்லது ஹோம்ஸினதா? என்று எழுப்பியுள்ள கேள்விக்கு, பேச்சாளர் மொன்ராஸ்: ஹோம் ஸ் ஐ.நா. சார்பில் பேசுகிறார். மனிதவுரிமை அதிகாரி என்பதால் அல்ல என்று கூறியுள்ளார். அத்துடன், செயலாளர் நாயகம், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஏற்றுச் செ யற்படுமாறு இலங்கை அரசினைக் கோருவது போல் தெரிகிறது. ஆனால், ஹோம்ஸ் பகைமைகளை இடைநிறுத்திக் கொள்வது பற்றியல்லாவா பேசுகிறார்? ஐ.நா. வின் நிலைப்பாடு யாது? என்ற இன்னர் சிற்றி பிறஸ் எழுப்பிய கேள்விக்கு, இவ்விடயம் தொடர்பில் நாம் மேலும் சரியான நிலைப்பாட்டி னை நாளையே அறி யலாம் என்று ஐ.நா. பேச்சாளர் கூறியுள்ளார்.

நன்றி
- வீரகேசரி -
13அத்தியாங்கள்

இதுவரை : மருத நாட்டின் மன்னர் ராஜாவீரவிக்ரம குலசேகர தொண்டைமானையும் இளவரசன் மாறவர்மனையும் அந்நாட்டின் தளபதி வீரவிக்ரமன் துரோகம் செய்து சிறைபிடித்துவிடுகிறான்.. தப்பி வந்த மாறவர்மன் தன் காதலி சொர்ணவள்ளியின் தந்தையும் வணிகருமான வேலவரின் உதவியுடன் நாட்டை மீட்க இன்னும் சில நண்பர்களுடன் திட்டம் தீட்டுகிறான்.. தளபதி மாறவர்மனை பிடிக்க முயற்சித்து வருகிறான்..தளபதி,மாறவர்மன் இருப்பிடமான வழுவூரை நோக்கிச் செல்கிறான். மன்னர் சிறையில் இருந்து காவலன் கருணாமூர்த்தியின் உதவியுடன் தப்பி விடுகிறார். வீரவிக்ரமன் வழுவூரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறான்

இனி..

வழுவூர் செல்லும் வழியில் தளபதியின் கூடாரம்:

தளபதி வீரவிக்ரமன் விழித்த பொழுது, பொழுது விடிந்து இருந்தது..அந்த வெட்டவெளியின் விளிம்பில் வட்டவடிவச் சூரியன் குருதிக் குழம்பாய் வழியத் துவங்கி இருந்தான்.வீரவிக்ரமனின் அசைவிற்கு காத்திருந்த மற்ற தளபதிகள் புறப்படத் தயாரானார்கள்.. இளஞ்செழியனும்தான்.

"மன்னா நல்லுறக்கம் என நம்புகிறேன்"

"ம்ம்.. சற்று அசந்து விட்டேன்.. என்றாலும் நினைவு தப்பாத நித்திரைதான்.. இரவு முழுதும் சிந்தனையினூடேதான் இருந்தேன்.. யாமத்தில் உறங்கிப்போயிருப்பேன்.."

"அப்படி என்ன சிந்தை மன்னா ?.. நெருங்கி விட்டோமே.."

"இல்லை இளஞ்செழியா.. அவ்வளவு எளிதில் மாறவர்மனை நெருங்க முடியாது.. ஏதோ தவறாகப்படுகிறது.."

"அச்சமாய் உணர்கிறீர்களா அரசே?"

"அச்சமா?" என்ற வீரவிக்ரமன் இளஞ்செழியனின் கழுத்தில் வாளை வைத்து..

"இந்த வாள் முதலில் மாறவர்மனின் குருதி குடிக்கக் காத்திருக்கிறது..வீணாய் அதன் விரதத்தை முடித்துவிடாதே.."

"மன்னிக்க வேண்டும் அரசே.. நான் கூறவந்..தது.."

அவனைப் பேச வேண்டாம் எனக்கை அமர்த்திய வீரவிக்ரமன்சடுதியில் தயாரானான்.கூடாரம் இருந்த இடம் வெற்றிடம் ஆனது.புரவிகள் எழுப்பிய சத்தத்தில் பறவைகள் அலமந்தன.அவைகளின் கிரீச் ஒலிகள் காற்றில் மிதந்தது..காற்றும் மிதந்தது.

வேலவர் வீடு..

அதிகாலைவேளையின் இன்பம் துய்க்க, தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தாள் சொர்ணவள்ளி.அலர்ந்த மல்லிகைகளும் மலர்ந்த மகரந்தங்களும் எழுப்பிய வாசம் சுவாசத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தது.அவளின் பாத அடிகளுக்கு ஏற்ப புற்கள் மடிந்து எழுந்தன..

கைகள் செடிகளிலும் கண்கள் மலர்களிலும் இருந்தாலும் மனம் மட்டும் இன்னும் துயில் கொண்டிருக்கும் மாறவர்மனைச் சுற்றிக் கொண்டிருந்தது..

காதல்..மின்னலாய்த் தோன்றி மழையாய் பொழியும் காதல்.வானையும் மண்ணையும் மலரையும் ரசிக்கச்செய்யும் காதல்.மனதில் சிறு கீற்றாய் கிளறி பின் வற்றா ஊற்றாய் கிளம்பும் காதல்.துணையின் நினைவுகளோடே நொடிப்பொழுதுகளையும் யவ்வணமாய் வாழ்விக்கும் காதல். நங்கைகளின் கொங்கைகளையும் நாயகர்களின் கண்களையும் துடிக்கச் செய்யும் காதல்..பிரிந்தால் துடிதுடிக்கச்செய்யும் காதல்..

அந்த காதலின் தீரத்திலும் மாறவர்மனைச் சந்தித்த நினைவுகளின் ஈரத்திலும் காலைவேளையின் ரம்மியத்திலும் நகர்ந்த பொழுதுகளில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தாள் சொர்ணவள்ளி..தந்தை வேலவரின் காலடி ஓசைக் கேட்டு.. நிகழ்விற்கு வந்தவள் நிமிடத்தில் வீட்டிற்குள் சென்று விட்டாள்.சென்றவள் அனிச்சையாய் மாறவர்மன் படுத்திருந்த மஞ்சத்தை ஆசையாய் பார்த்தாள்..

அங்கே..

மாறவர்மனைக் காணவில்லை...

தொடரும்..

..

கருத்துகள் இல்லை: