செவ்வாய், 14 ஏப்ரல், 2009

2009-04-11

பல படங்கள் திரையரங்குகளில் ஓடுவது போல் சில படங்கள் நம்மை ஓட வைக்கும். நான் அதிகம் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்பதால் திரையரங்கை விட்டு ஓடியதும் சில நேரங்களில் தான். முதன் முதலாக 1997ல் ஒரு தமிழ் படம் பார்க்கும் போது தாங்கவே முடியாமல் பாதியில் கிளம்பினோம். அதன் பின்னர் போல் பாதியில் ஓடியது 2005ல் (The Aviator). சென்ற வாரம் ஒரு படத்திற்கு சென்று பாதியிலேயே திரையரங்கை விட்டு கிளம்பி, அந்த கடுப்பில் டிவிட்டரில்
வானமே எல்லை, வேதம் புதிது போன்ற படங்கள் இனி தமிழில் வரும் சாத்தியக்கூறு உள்ளதா. உங்கள் கருத்து.
என்று கேட்டிருந்தேன்
பிரபல பதிவரும், திரைத்துறையோடு தொடர்பில் இருப்பவருமான திரு நாராயணன் அவர்கள் கீழ்கண்டவாறு பதிலளித்திருந்தார்
கண்டிப்பாக வரும். வெண்ணிலா கபடிக்குழு ஒரு சான்று
அவர் ஏன் அப்படி சொன்னார் என்று இன்று படத்தை பார்த்த போது தான் தெரிந்தது

இரண்டு ஒரு வரி கதைகள். (முதல் கதை - படிப்பறிவில்லாத கிராமத்து வாலிபனும் கல்லூரியில் படிக்கும் நகரத்து பெண்ணும் ஒரு திருவிழாவில் காதலிக்கிறார்கள். அவன் மரணமடைந்து விட அவள் அடுத்த முறையும் திருவிழாவிற்கு வந்து அவனை தேடுகிறாள். இரண்டாவது கதை - கிராமத்தில் இருக்கும் ஒரு கபடி குழு ஒரு போட்டியில் வெல்கிறது) தெளிவான நீரோடை போல் திரைக்கதை, இயல்பான வசனங்கள், யதார்த்த காட்சிகள் (அதில் பல கவிதைகளும் உண்டு), அசத்தல் படத்தொகுப்பு, கோட்டிற்கு அருகில் நின்று கபடி பார்க்கும் உணர்வையும் ஏற்படுத்தும் ஒளிப்பதிவு, திருவிழா கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் உற்சாகத்தை திரையரங்கில் கொண்டு வரும் ஒலிப்பதிவு என்று நீண்ட நாட்கள் கழித்து ஒரு படத்தை ரசித்து படத்துடன் ஒன்றிப்போக முடிந்தது.

படத்தில் நான் பல ரசித்த காட்சிகளில் சில
  • மாரியை அவன் மாமா பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரும் போது வீட்டினுள் நுழைந்ததும் அந்த புத்தக பையை கீழே போடுவான். அதன் பின் அந்த புத்தகப்பை திரையின் ஒரு ஓரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போது அவன் பண்ணை வேலைக்கு அழைத்து செல்லப்படுவான். புத்தகப்பையில் சரஸ்வதி படம்
  • பையன்கள் காலையில் புதருக்குள் அமர்ந்து கொண்டே அரட்டை அடிப்பது. வாலிப வயசு வரை அதே தலைப்பில் தலைப்பில் அரட்டை தொடர்வது !!
  • நாயகனும் நாயகியும் ராட்டினத்தில் சுத்தும் போதை கொலுசையும், டாலரையும் பரிமாறுவது
  • திருவிழா சமயம் ஊரில் வெள்ளையடித்து ஊர் முழுவதும் பளிச் என்று இருப்பது. (பிற காட்சிகளில் சுவர்கள் யதார்த்த நிறமே)
  • உடல் பருமனான கபடி வீரர் விளையாட வரும் போது வரிசை விளக்கில் (சீரியல் லைட்) யானையைக்காட்டியது
  • அடுத்த அணி வீரர்களின் ஜெர்சியை பார்த்து ஏங்கும் வீரர்களுக்கு கோச் ஜெர்சி வாங்கி தருவது
  • மிதிவண்டியை வைத்து பேரூந்தை முந்த முயலும் கிராமத்து இளைஞனுன், அவனது சந்தோஷத்திற்காக தானாக தோற்கும் பேரூந்து ஓட்டுனரும்.
  • தாய் சாப்பிட வேண்டுமென்பதற்காக பாதி சாப்பாட்டுடன் வெளியில் செல்லும் மகன்
  • தன் தந்தை மிதிவண்டியை தள்ளி சிரமப்படுவதை பார்த்து (விளையாட போகும் ஆர்வத்திலும்) உதவும் மகன்
  • கதாநாயகி (படத்தில் பெயர் கூறப்படவில்லை என்று நினைக்கிறேன்) அடுத்த வருடம் அந்த தெரு வழியாக செல்லும் போது மாரி கடைசியில் போட்டிருந்த சட்டை அந்த வீட்டில் தொங்குவது
  • 10 மீட்டர் இடைவெளி விட்டு தொடருவும் என்று பேரூந்தின் பின்புற வசனங்கள் மாறி 10 நிமிடம் இடைவெளி விட்டு என்று intermissionஐ அறிவிப்பது
  • விளையாட்டின் மீது அந்த இளைஞர்களுக்கும் அந்த கோச்சிற்கும் உள்ள ஈடுபாட்டை அப்படியே காட்டியது
  • இறுதி ஆட்டத்திற்கு செல்வது உறுதி என்றவுடன் அரையிறுதியில் முக்கிய வீரர்களை ஓய்வு எடுக்க வைக்கும் நடைமுறை
  • அந்த பரோட்டா சாப்பிடும் போட்டியில் 42 என்று கடைக்காரர் கூறியவுடன், முதலிருந்து ஆரம்பிக்கலாம் என்று கூறும் காட்சி (இந்த ஒரு காட்சிக்காவது நீங்கள் படத்தை பார்க்கலாம்)
  • வைகை பாலம், கிழக்கு வெளி வீதி என்று காட்சிகள் சில வினாடிகளே வந்தாலும் மதுரையை சுற்றிபார்த்தது போலிருக்கிறது
  • மாமியாரின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போடுவது 
  • நமக்கு கூட கைதட்டுகிறார்கள் என்ற அவர்களின் பெருமிதம்
இது தவிர பல விஷயங்களுக்காக இயக்குனரை பாராட்ட வேண்டியுள்ளது
  • கபடியை வைத்து ஒரு முழுநீள படம், ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் எடுத்த்து.
  • சாக்குடன் ஓடுவது, கையில் நீர் பிடித்து பாட்டிலில் நிறைப்பது போன்ற கிராமத்து விளையாட்டுக்களை பதிந்தது.
  • ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை காட்டி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை பாழாக்கும் நடைமுறையை வெளிக்கொண்டுவந்தது
  • அந்த நாயை எப்படித்தான் நடிக்கவைத்தாரோ !!! 
  • நம்மை குத்தும் வசனங்கள் (பஞ்ச் டயலாக்), பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் கூட ரசிக்கும் படி படம் எடுக்க முடியும் என்று காண்பித்தது
  • படம் முழுவதும் கதாநாயகி தாவணியில் வருவது. - அதில் கவர்ச்சியை தவிர்த்து அழகுணர்ச்சியை மட்டும் காண்பித்தது
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. முக்கியமாக அந்த கிளைமாக்ஸ். கண்டிப்பாக தேவையில்லாதது. அடுத்த முறை கதாநாயகி பேரூந்தில் வருவதுடன் படத்தை முடித்திருந்தால் கண்டிப்பாக படம் வணிக ரீதியாக இதை விட அதிகம் வெற்றி பெற்றிருக்கும்.

இந்த படம் பற்றிய சில விமர்சனங்கள்
(ஏதாவது விடுபட்டிருந்தால் மறுமொழியில் தெரிவிக்கவும்)

தமிழ் திரைப்படங்களின் (நிகழ் கால) தரம் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கட்டாயம் இந்த படத்தை பார்த்து உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள்

இது போன்ற நல்ல படங்களை எடுத்தாலும் மக்கள் திரையரங்கில் பார்த்து ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையை வருங்கால இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அளிக்க ஒரு முறையாவது திரையரங்கு சென்று இந்த படத்தை பார்க்கவும்

நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை "பயணங்கள" என்ற வலைப்பதிவில் எழுதப்பட்டது. எழுதியவர் மரு.ஜா மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்

 

பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை இல்லை என்பார் திருவள்ளுவப் பெருந்தகையார்.

உலக வாழ்க்கைக்குப் பொருள் மிக முக்கியம் என்று அழுத்தமாகவே சொல்வார்.

ஆனாலும் நாம் தேடும் செல்வம் நிலை இல்லாதது என்றும் சொல்வார்.

கலைநிகழ்ச்சி நடக்கும்போது அரங்கத்தில் பெருங்கூட்டம் கூடுகிறது.

நிகழ்ச்சி முடிந்தவுடன் கூட்டம் கலைந்து போகிறது.

அரங்கத்துக்கு வரும் கூட்டம் அரங்கத்திலேயே நிலைத்து இருப்பதில்லை.

ஒருவனிடம் சேரும் செல்வம் என்றென்றும் அவனிடத்திலேயே நிலைத்து இருப்பதில்லை.

செல்வம் சேரும்போது சேரும்; போகும்போது போகும்.

செல்வம் நிலைத்து நிற்பதில்லை.

"கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று" (332) என்கிறார் திருவள்ளுவர்.

செல்வம் மிக முக்கியம் என்கிறார்.

ஆனால் அது நிலை இல்லாதது என்றும் சொல்கிறார்.

செல்வம் நிலை இல்லாதது என்றால் செல்வத்தை ஏன் தேடவேண்டும்?

நிலை இல்லாத ஒன்றைத் தேடும் வேலை வீண் வேலைதானே?

நிலை இல்லாத ஒன்று எப்படி முக்கியமானது ஆகும்?

திருவள்ளுவர் முரண்படுகிறாரோ?

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. (5.84.2)

மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்
கூட்டைவிட்டு உயிர் போவதன் முன்னமே
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே.

`செல்வத்தைத் தேடி உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டில் உள்ள பொய்கள் எல்லாம் பேசிடும் நாணம் இல்லாதவர்களே! உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே திருக்காட்டுப்பள்ளி உள்ளான் திருவடி சேர்வீர்களாக!'

மாடு – செல்வம்

நும்முளே – உமக்குள்ளே

நாண் – நாணம்

இலீர் - இல்லாதவர்களே

நாணிலீர் – நாணம் இல்லாதவர்களே, நாணம் அற்றவர்களே

கூடு – உடல்

காட்டுப்பள்ளி – ஊரின் பெயர்: மேலைத் திருக்காட்டுப்பள்ளி என வழங்கப்பெறும்

காட்டுப்பள்ளியுளான் – திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளியுள்ள இறைவர்

கழல் – திருவடி

சேர்மினே – சேர்வீர்களாக

உலக வாழ்க்கைக்குப் பொருள் தேவை என்பது உலகறிந்த உண்மை.

இந்த உண்மையைச் சைவ சமயச் சான்றோர்கள் மிகவும் வலியுறுத்தியே சொல்வார்கள்.

"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்" (3.24.1) என்பார் திருஞானசம்பந்தர்.

மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்குப் பொருள் தேவை.

பொருள் தேவை என்றால் தேடித்தான் ஆகவேண்டும்.

`பொருள் தேடுங்கள்; பொருள் தேடி நன்றாக வாழுங்கள்' என்று ஊக்கம் ஊட்டுகிறார்கள் சமயச் சான்றோர்கள்.

பொருள் தேடுவது எப்படி என்றும் சொல்கிறார்கள்.

உடல் வளர்ச்சிக்கும் நலத்துக்கும் உணவு தேவை.

எனவே உணவு தேடுவதும் உணவு உண்பதும் மிக முக்கியம் ஆகின்றன.

உணவு தேடுவதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.

உணவு உண்பதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.

ஆனால் உணவு தேடுவதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?

உணவு உண்பதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?

உணவே மகிழ்ச்சி என்று வாழத் தொடங்கினால் உணவே நமக்குப் பகையாகிவிடும்.

மூன்றுவேளை உணவு என்பது மறைந்து ஒருவேளை உணவும் நான்குவேளை மருந்தும் உட்கொள்ளும் நிலை வந்துவிடும்.

ஊரிலுள்ள மருத்துவர்கள் எல்லாரும் நமக்கு மிக வேண்டியவர்கள் ஆகிவிடுவார்கள்.

செல்வம் தேடுவதில் மகிழ்ச்சி இருக்கவேண்டும்.

செல்வத்தை நுகர்வதில் (அனுபவிப்பதில்) மகிழ்ச்சி இருக்கவேண்டும்.

ஆனால் செல்வம் தேடுவதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?

செல்வத்தை நுகர்வதே மகிழ்ச்சி என்று வாழலாமோ?

செல்வமே மகிழ்ச்சி என்று வாழத் தொடங்கினால் செல்வமே நமக்குப் பகையாகிவிடும்.

"மாட்டைத் தேடி மகிழ்ந்து" என்கிறார் திருநாவுக்கரசர்.

`செல்வம் தேடுவதற்கே வாழ்கிறோம்; செல்வம் தேடுவதே மகிழ்ச்சி' என எண்ணுவதையே அப்பர் குறிப்பிடுகிறார்.

இப்படி எண்ணத் தொடங்கினால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்காகவே செல்வம் தேடுகிறோம் என்பது மறைந்துபோகும்.

செல்வம் தேடுவதே மகிழ்ச்சியான வாழ்க்கை என்னும் எண்ணம் தலைதூக்கி வலுப்பெற்றுவிடும்.

செல்வமே வாழ்க்கை எனும் எண்ணம் வலுப்பெற்றால் `எப்படியும் செல்வம் திரட்டலாம்; எப்படியும் செல்வம் திரட்டவேண்டும்' என்று செயல்படத் தொடங்குவோம்.

எப்படியும் செல்வம் திரட்டவேண்டும் என்று செயல்படத் தொடங்கினால் எதனையும் செய்யலாம் என்பதே நம் கொள்கை ஆகிவிடும்.

`ஊராரை ஏமாற்றலாம்; வஞ்சகம் செய்யலாம்; நம்பியவர்களை நட்டாற்றில் விடலாம்; பிறர் குடியைக் கெடுக்கலாம்; சட்டத்தை வளைக்கலாம்; சட்டத்தை மீறலாம்; நமக்குப் பணம் வந்தால் சரி, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என்று எதனையும் செய்யத் தொடங்கிவிடுவோம்.

பணத்துக்காகத் தவறான வழிகளில் இறங்குபவர்களுக்கு உற்ற துணையாகவும் வலுவான கருவியாகவும் இருப்பது பொய் ஆகும்.

பொய்யையே முதலாகக் கொண்டு பொய்யைப் பெருக்கிப் பொருளைப் பெருக்குவார்கள்.

பொய் பெருகப் பெருகப் பொருளும் பெருகும்.

பொருள் பெருகப் பெருகப் பொய்யும் பெருகும்.

அளவில்லாமல் பொய் பேசத் தொடங்குவார்கள்.

நாட்டிலுள்ள எல்லாப் பொய்களையும் சேர்த்துப் பேசுவார்கள்.

எவ்வளவு பொய் பேசினாலும் அவற்றுக்காகச் சிறிதும் நாணம் கொள்ளமாட்டார்கள்.

சிறிதுகூட நாணம் இல்லாமல் பணத்துக்காகப் பொய் பேசுவார்கள்.

"நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்" என இவர்களை விளிக்கிறார் அப்பர்.

பொருளுக்காகப் பொய் பேசலாமோ?

பொய் பேசிப் பொருள் தேடலாமோ?

`கூடாது' என்கிறது சைவம்.

`கூடாது' என்கிறார் திருவள்ளுவர்.

`கூடாது' என்கிறார் திருநாவுக்கரசர்.

பொருள் தேடுவது குறித்த சைவக்கொள்கை மிகவும் தெளிவானது.

`எவ்வளவு செல்வம் வேண்டுமானாலும் தேடுங்கள்; முறையான வழியில் தேடுங்கள்; அறவழியில் தேடுங்கள்' என்கிறது சைவ சமயம்.

இந்தக் கொள்கையோடு திருக்குறளும் முரண்படவில்லை; திருமுறையும் முரண்படவில்லை.

இல்லறம் நல்லறம் ஆவதற்குப் பொருள் வேண்டும்.

அறவழியில் நின்று பொருள் தேடவேண்டும்.

பொருள் தேடி மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும்.

உடலைவிட்டு உயிர் பிரிந்துபோவது உறுதி.

என்றாவது ஒரு நாள் உயிர் பிரியத்தான் செய்யும்.

ஆனால் அதற்கு முன் வாழவேண்டும்.

செத்துச் செத்து வாழக்கூடாது.

நன்றாக வாழ்ந்து இறக்கவேண்டும்.

http://nanavuhal.wordpress.com/2009/03/11/selvam-vaazkkai/


More than a Blog Aggregator

by DURAI.N.U 9443337783


More than a Blog Aggregator

by DURAI.N.U 9443337783


More than a Blog Aggregator

by கிருஷ்ணா

பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து
பண்பெனும் பாலூட்டினார் அன்னை..
ஊரில் உன்னை அனைவரும் மதிக்க
அறிவெனும் சோறூட்டினார் தந்தை..
நாரில் பூவாய் என்றும்நீ மணக்க
நாதாக்கள் ஆற்றிய நற்பணியை
நேரில் காணும் நெஞ்சம் துடிக்க
நம்கண் உதிர்க்கும் நீர்த்துளியை..!

பெரியவன் ஆனதும் பெற்றோர்க்கு
பனிசெய்து கிடந்திடு என்றும்நீ
பொதிஇவன் என்றுஉன் தந்தையை
பழித்து விடாதே ஒருபோதும்
கொதித்து எழுவாள் உனதன்னை- உருக்
குலைந்து விடுவாய் உடனேநீ..!
சிரித்து அவர்களை உபசரித்தால்
செழித்திடும் உனது எதிர்காலம்..

கண்ணீர்க் கடலை கடந்தவர்கள்
கவலையறி யாதுனை வளர்த்தவர்கள்..
தண்ணிர் அற்ற நடுக் காட்டினிலே
தவிக்க விடாதே அவர்களைநீ..
முன்னூறு நாளுனை சுமந்ததற்கு
மூச்சடக்கி உன்னை ஈன்றதற்கு
முன்னேறும் வேளையில் பெற்றோரை
மூழ்க விடாதே ஆழ்கடலில்..!!!

-K.கிருஷ்ணமூர்த்தி


இந்தியாவில் தற்கால கிறிஸ்தவ வரலாற்றில் ச‌கோதரர் தினகரன் அவர்களின் ஊழியம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகள், அவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை இருளில் இருந்து உண்மையான ஒளிக்கு அழைத்து வந்த தமிழர், அவர் ஓர் வல்லமையான ஊழியர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, அவர் பரலோகத்தில் பிரவேசித்த முதலாமாண்டு நினைவு நாளில்(பிப்ரவரி 21, 2009) தமிழ் நாடு அரசு ஓர் அரசானையை வெளியிட்டுள்ளது அதில் சென்னையில் உள்ள கீரீன்வேஸ் சாலை இனி Dr.D.G.S.தினகரன் சாலை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

இது உலகப் பிரகாரமான ஓர் அங்கீகாரம் என்றாலும் இந்தியா போன்ற சிறுபாண்மையாக இருக்கும் கிறிஸ்துவின் சீஷர்கள் உள்ள நாட்டில் உண்மையாய் கிறிஸ்துவின் அன்பை எடுத்து சொல்லப்பட்டதை உலகம் அங்கீகரித்திருப்பதாகவே கருதலாம்

இது கிறிஸ்துவின் சீஷர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையவேண்டிய செய்தியாகவே இருக்கிறது, அதே சமயம் ஆணென்றும், பெண்னென்றும் இல்லாமல் இனம், மொழி, பாகுபாடில்லாத (கலாத்தியர்: 3;28.), இந்தியாவை மேலும் வளர்க்க கிறிஸ்துவின் அன்பு மிக அதிகமாகத் தேவை என்பதை அறிந்து செயல் பட ஊக்கத்தையும் நமக்கு அளிக்கிறது,

கருத்துகள் இல்லை: