இலங்கைக்கு லிபியா 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை உடனடியாக வழங்க முன்வந்துள்ளது. சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் லிபியா நாட்டு அதிபர் கேணல் முகம்மர் கடாபிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்த இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த நிதி சிறீலங்காவின் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவே லிபியா அரசு வழங்கியுள்ளது. அத்துடன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் அனைத்துல வானூர்தி நிலையத்தின் நிர்மாண வேலைகளை லிபியா அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கவும், வடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கும் நிதியுதவி வழங்க கேணல் கடாபி இணங்கியுள்ளார்.
தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ற்' நாளிதழ் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய அந்த இதழில் முதற்பக்க செய்தியாக தமிழ் இளைஞர்களின் சாகும் வரையிலான உண்ணா நோன்பு தொடர்பான செய்தியும், ஆய்வும் வெளியிடப்பட்டிருந்தது.

An introduction to some of the new features of Windows Server 2008. Intended audience: administrators with previous experience of Windows 2000 and 2003 Server.
Thanks to : http://www.youtube.com/user/tobyonline
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழைக்கும் மத்தியில் சனிக்கிழமையன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்கணை ஆகிய பகுதிகள் மீது சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, மோட்டார் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கொல்லப்பட்டவர்களை புதைக்க முடியாமலும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமலும் உள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர், விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. TNC


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக