மும்பையை அடுத்த தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷோர் சாவன் (50). சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். அவரது மனைவி பெயர் அஞ்சனா (46). இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
பெரிய பெண்ணுக்கு 21 வயதும், சிறிய பெண்ணுக்கு 15 வயதும் ஆகிறது. இந்த குடும்பத்தினர் மும்பை நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புறநகரில் வசித்துவருகின்றனர்.
தொழில் விருத்தி அடையவில்லையே என்ற கவலையுடன் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடினார் கிஷோர். மந்திரவாதியின் பெயர் ஆஸ்முக் ரத்தோட் (56). "உங்களது மகளுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் தொழில் சிறக்கும்" என்று அந்த மந்திரவாதி அறிவுரை கூறியுள்ளார் கிஷோரிடம்.
இதனை உண்மை என நம்பிய கிஷோர், தனது மனைவி துணையுடன் மூத்த மகளை 9 ஆண்டுகளாக பலாத்காரமாக உறவு அனுபவித்து வந்துள்ளார். ஆனாலும் தொழிலில் முன்னேற்றம் அடையவில்லை.
மீண்டும் மந்திரவாதியிடம் சென்று முறையிட்டார் கிஷோர். உன்னுடைய இளைய மகளுடனும் உறவு வைத்துக்கொள்ள மந்திரவாதி கூறியுள்ளார். இளைய மகளையும் பலாத்காரத்துக்கு வற்புறுத்தவே விஷயம் போலீஸ் நிலையத்துக்கு வந்தது.
இதையடுத்து வியாபாரி, உடந்தையாக இருந்த மனைவி மற்றும் மந்திரவாதி 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அதுவும் அந்த தகாத உறவு, மந்திரவாதி கண்முன்னே நடந்துள்ளது. பெற்ற மகளை கற்பழிப்பதைப் பார்த்துள்ளார் கிஷோரின் மனைவி.
மந்திரவாதியும் அந்த பெண்ணை கற்பழித்திருக்கிறார். இது பல தடவை நடந்துள்ளது. தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கும், கற்பழிப்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? சற்றாவது சுயஅறிவு வேண்டாமா? சற்றேனும் சிந்திக்க வேண்டாமா?
தொழிலில் முன்னேற்றம் அடையவேண்டுமானால், இரவு-பகல் பாராமல் அயராது உழைக்கவேண்டும். முதலீடு செய்ய வேண்டும். தொழிலில் நட்டம் ஏற்படாமல் இருக்க கழுகு கண்ணைப் போல தொழலை பார்த்துக் கொள்ளவேண்டும்.
அதைவிட்டுவிட்டு மந்திரவாதியை நாடுவது, வேலையே இல்லாமல் அடுத்தவர் உழைப்பில் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் (அட்டையைப்போல) மந்திரவாதியின் பேச்கைக் கேட்டு நடப்பது போன்ற செயல்களை செய்தால் முன்னேற்றம் அடையுமா?
இப்படியே போனால் நீ தற்கொலை செய்து கொள்! உன்னுடைய தொழில் சிறக்கும் என கூறினாலும் நம்புவார்கள் போலிருக்கிறது கிஷோர் போன்றவர்கள். இதனை படிக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டுகிறேன்.
நடிகர் மன்சூர்அலிகான் தன்னை டி.ராஜேந்தரின் லட்சிய திமுகவில் இணைத்துக்கொண்டார். மன்சூர்அலிகான் ராஜேந்தருக்கு சால்வை அணிவித்து வீரவாள் பரிசு வழங்கி கட்சியில் இணைந்தார்.
இணைந்த பின் இவ்வாறு கூறுகிறார்
இலங்கை தமிழர்களை காக்க கூட்டு பிரார்த்தனைக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. சினிமாவில் மட்டும் கதாநாயகியை காப்பாற்றுவதற்கு வில்லன்களை பந்தாடுகிறார். நிஜத்தில் தமிழர்களை பாதுகாக்க மண்டியிட வேண்டும் என்கிறார்.
ராஜேந்தர் தமிழ் இன உணர்வுமிக்கவர். அவருடன் இணைந்து இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்போம்"
சனி, ஞாயிறு இவர்களுக்கு விடுமுறை கிடையாதா ? மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல :-)
வாசல்புற சாக்கடையில் பூக்கள் மிதந்து
வருகின்றன. பக்கத்து வீட்டின்
காம்பவுண்ட் சுவர்களுக்கப்பால் வளர்ந்த
பவழமல்லிகை கிளையொன்று
காற்றுடன் சல்லாபிக்கும் ஒவ்வொரு
தருணத்திலும் பூக்களை உதிர்க்கின்றது.
இத்தெருவிலே பல பூமரங்களுண்டு
அனைத்துமே சுவரைவிட்டு தள்ளியே
கிளைபரப்புகிறது. அனைத்துமே பூக்களை
உதிர்க்கின்றது பல வண்ணங்களில்
சாக்கடைப்பூக்கள். இந்த நகரத்திலே
பெண்கள் பூக்களை சூடுவதில்லை
சாக்கடைக்குதான் வாய்த்திருக்கிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக