ரொம்ப நாளா தேடித் தேடி இந்த அம்மையாரைக் கண்டு பிடித்து கேட்டேன் ."ஷூ ஒண்ணு தைக்கணும் வரமுடியுமா?"
"....பேஷா தைச்சுத் தரேன் ஷூ எங்கே...எடுத்துட்டு வாம்மா...."
"எடுத்துட்டு வர முடியாது, நாமதான் போகணும்...[ஏகப்பட்ட கண்டிஷனோடு என்னோடு கிளம்பிய அந்த தொழிலாளிணி..நான் காட்டிய ஷூவைப் பார்த்ததும் ...
என்னை முறைத்த முறைப்பு இருக்கே இன்னைக்கு வரை மறக்கவே முடியாது.
"என்னை என்ன கேணச்சின்னு நினைச்சியா...அங்கெ இருந்திருந்தா நாலு ஷூ தச்சு கொடுத்திருப்பேன் ...ஏம்பொழப்பைக் கெடுத்தியே மகராசி...."ன்னு ,என்னை நார் நாராக்கி ,விடுவிடுவென்று திரும்பி நடந்தது, இன்னும் வீடியோ க்ளிப்பிங்ஸ் மாதிரி ஓடிக்கொண்டே இருக்கிறது .["அடி செருப்பாலே!!!!ன்னு கூடச் சொல்லியிருக்கலாம் ,என்று நினைக்கிறேன்]
நீங்களே பாருங்களேன் நான் காட்டிய ஷூவை ஏன் அவள் தைக்க முடியாதுன்னு சொல்லணும்.....?
அந்த ஷூவை நீங்க பார்த்துட்டு எனக்காக கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்களேன்.அல்லது உங்களுக்குத் தெரிந்த தொழிலாளி யாராவது இருந்தால் விலாசம் சொல்லுங்கள் ப்ளீஸ் !!!!!
இங்கே கிளிக்கினால் கிட்டும்
http://picasaweb.google.com/ngomathi/Shoe?authkey=Gv1sRgCN3vvrva-9WkLQ#
படத்தில் பாருங்கள் ...ஷூவின் பின்பக்கம் கிழிந்திருக்கிறது ,அதைத் தைக்கணுமா வேண்டாமா?
புரிதல் என்பது...
பழகிய அறையில்
இருள்
பழகிவிட்டிருக்கிறது.
பழகாத அறையில்
இருள்
பார்க்க
மிகக் கருப்பாக இருக்கிறது.
அச்சம்பவம்
நம் கண்கள்
சந்தித்துக்கொள்ளும் கணந்தோறும்
அச்சம்பவம் தலைதூக்கி
என்னை
தலைகுனியச் செய்கிறது.
இத்தனைக்கும்
எனக்கு நேர்ந்தேவிட்ட
அவமானத்தின்
பாதிப்புகளைக் குறைத்து உதவிய
தோழமைதான் உன்னுடையது.
என் மனம் பிரார்த்திக்கிறது
நாமிருவரும்
சந்தித்துக்கொள்ளவே முடியாத
தொலைதூரத்தில் நீ
போகக்கடவது.
இரண்டும் ஒன்றல்ல- (மீள் பதிவு)
ஆளரவம்
ஓய்ந்தவொரு தெருவில்
பின்னிரவில்
மூன்று சக்கர
சைக்கிள் பழகும்
அச்சிறுவனின் முகத்தில்தான்
எத்தனை குதூகலம்.
இரண்டு கால்களும் செயலிழந்த
அச்சிறுவனை அமர்த்தி
சைக்கிளைத் தள்ளும்
அம்மாவின் சிரிப்பில்தான்
ஏதோ ஒரு ஊனம்.
தயாராக
இருப்பை
நிறுவத்துடிக்கிற,
உள்ளீடற்ற
வெற்றுப் புகழ்ச்சிக்கு
ஏங்குகிற உன்னை
குளிரெடுக்குமளவுக்கு
வார்த்தை மழையில்
நனைக்கமுடியுந்தான்.
உன்னிடமிருந்து
பெற்றுக்கொள்ள
ஏதும் இருந்தாலுமே கூட
கொடுப்பதற்குத் தயாராக
இல்லை நான்.
நன்றி- வார்த்தை


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக