செவ்வாய், 14 ஏப்ரல், 2009

2009-04-11

போர் நிறுத்த காலத்தில் சிறீலங்காவின் படை கட்டமைப்புக்களை பலப்படுத்தி அமைதி உடன்பாட்டை சீர்குலைத்ததில் மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் பங்களிப்புக்கள் ஏராளம். எனவே போரை தூண்டிய அவர்களுக்கு தான் அதனை நிறுத்தும் கடமையும் உள்ளது என படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசு வாரஏட்டிற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு :
11.04.2009. இலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை   வெளியான   செய்தி குறித்து அந்தக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் துணைத்தலைவர் மாவை சேனாதிராஜா விளக்கமொன்றைத் தெரிவித்திருக்கிறார். “இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே புதுடில்லியிடமிருந்து எமக்கு அழைப்பு வந்திருக்கிறது. எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் [...]
[சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009]

தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார்.

சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் -

அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களின் மேற்பார்வையுடன் உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படவேண்டும் -

சிறிலங்கா அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுக்கு அனைத்து அமைப்புக்குளும் அனுமதிக்கப்பட வேண்டும் -

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே அவர் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்.

டேர்பன் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெறும் தனது உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்:

என்னுடைய கோரிக்கைகளை அனைத்துலக சமூகம் பரிசீலிக்கும் வரைக்கும் இந்தப் போராட்டத்தைத் தொடர்வேன். எமது மக்கள் அனுபவிக்கும் சொல்லெணாத் துன்பங்களுடன் ஒப்பிடுகையில் நான் தற்போது அனுபவிக்கும் வேதனை ஒன்றும் மிகையானதல்ல. அத்துடன் இத்தகைய போராட்டத்தில் உலகத் தமிழர்களும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டும்.

ஈழத்தில் தமிழ் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். உணவுக்காக மட்டுமல்லாமல், சுயகௌரவம், சமாதானம் மற்றும் விடுதலைக்காக அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வறுமையின் காரணமாக ஏங்கவில்லை. மாறாக, அவர்களுடைய தாயக பூமி மற்றும் அவர்களுடைய சுதந்திரம் மீண்டும் மீண்டும் கொள்ளையடிக்கப்படுவதால் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் வழிமுறைகைளைத் தேர்ந்தெடுக்காமல் இராணுவ வழிமுறைகளில் நாட்டம் கொண்டிருப்பதானது எம்மைப் போன்றவர்களையும் தற்போது மாற்று வழிகளில் ஈடுபட நிர்ப்பந்தித்துள்ளது.

ஆகவேதான் நான் தற்போது உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கு ஏற்றவகையில், தென்னாபிரிக்க அரசியல் தலைவர்களான நெல்சன் மண்டேலா, ஜக்கப் சூமா மற்றும் மதகுருத் தலைவர் டெஸ்மன் டுற்று ஆகியோர் செயற்படவேண்டும் என்றார் அவர்.
[சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009]
பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கிய இருவரில் ஒருவர் நேற்று நள்ளிரவு தொடக்கம் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தில் நடைபெறும் சந்திப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படுவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே சிவதர்சன் சிவகுமாரின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வார் என்று பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை தந்து சந்திப்பை நடத்தியிருக்கின்றார்.

இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பிற்கு செல்ல வேண்டிய காரணத்தால் சிவதர்சன் சிவகுமாரின் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரித்தானிய அரசின் சார்பில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் பிரித்தானிய அரசாங்கத்தால் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கைப் பிரச்சினை குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழுவினருடன் பிரித்தானிய தமிழ் இளையோர் இணைந்து செயற்படுமாறும் அவர் தெரிவித்திருந்தார் என்று கூறப்படுகின்றது.

இதேவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியையும் இறக்குமாறு பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதையடுத்து அங்கு ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடியும் இறக்கப்பட்டுள்ளதுடன் - ஒலிபெருக்கிகளில் முழக்கமிடுவதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் நிறுத்தியுள்ளனர்.

அதேநேரம் பிரித்தானியாவில் இன்று பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவின் எம்பாக்மென்ட் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடங்கி ஹைட் பார்க் என்ற இடத்தை சென்றடையும் என்றும் அங்கு பிரித்தானிய அரசுக்கான மனு கையளிப்பு வைபவம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்பவர்கள் தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியை தமது கைகளில் ஏந்தியிருப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையிலேயே நேற்று இரவு நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடிகள் இறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


அக்கினியின் ஆசை


ஒரு காலத்தில் சப்த ரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்குச் சென்று அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்னி பகவான் அந்த ஏழு ரிஷிப் பத்தினிகள் மீது காமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் கூறினானாம். ஆண்டவனான அக்னி தன் மனைவியிடம் ரிஷி பத்தினியிடம் காமுற்று இருப்பதைக் கூறியதுடன், தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படி கேட்டானாம். அவன் மனைவியும் சப்த ரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போலவே உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம். ஆனால், ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லை என்றும் அதற்குக் காரணம் அருந்ததி ஆதி திராவிடப் பெண்மணி என்றும், காரணம் மேலும் தொடருகிறது.

------------------அறிஞர் அண்ணா சொன்ன 100 குட்டிக் கதைகள் நூலில் இருந்து

கருத்துகள் இல்லை: