செவ்வாய், 14 ஏப்ரல், 2009

2009-04-12

இலங்கையில் போர் நிறுத்தம் : லண்டனில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பேரணியில் திரண்டனர் : படங்கள் செந்தில் உடனடியானதும் நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை தேம்ஸ் நதியோர வீதிகளை மக்கள் வெள்ளத்தால் நிரப்பி மாபெரும் பேரணி ஒன்றை நிகழ்த்தி உள்ளனர். பிரித்தானியாவின் சகல பாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் லன்டனின் மையப்பகுதியில் நண்பகலில் கூடிவிட்டனர்.வன்னி மக்களின் அவலங்களை மனதினில் சுமந்தும் அதனைச் சித்தரிக்கும் படங்களை கைகளில் சுமந்தும் மக்கள் ஒருவகைச் சோகமும் கோபமும் கொண்ட எழுச்சியோடு கலந்து கொண்டனர்.தாம் பயணிக்கும் போதே சிறு சிறு குழுக்களாக  தமது கோரிக்கைகளை முழக்கமிட்டு வந்த மக்கள்  பேரணியின் மையநீரோட்டத்தில் கலந்து கொண்டனர். உடனடிப்போர் நிறுத்தம் , இல்லையேல் இலங்கைமீது தடைகளை கொண்டுவரவேண்டும்,இறுதித்தீர்வு இருவேறு நாடுகள் என்ற கோஷங்களை பெரும்பாலும் முழங்கிய வண்ணம் மக்கள் அணி அணியாக சென்றனர். இந்தியாவின் மீது கசப்புணர்வுகளை கொப்பளிக்கும் வாசகங்களும் முழக்கங்களும் பெரும்பாலும் காணப்பட்டன. இலங்கைப் பெருட்களை வாங்க வேண்டாம் அது உங்கள் கைகளை இரத்தம் தோய்ந்ததாக்குகின்றது என்று மக்கள் கோஷமிட்டனர்.  பல இனமக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பேரிகைகள் , வாத்தியங்கள் சகிதம் வெள்ளையினத்தவர்கள் பலர் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கெதிராக பெருமுழக்கமிட்டது இப்பேரணியின் மிகச்சிறப்பான அம்சமாகும்.
சுப்பிரமணிய பாரதியார்!

அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார்.

வளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும்.

இத்தனைக்க மேல் ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்றால் அது எத்தனையோ நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி என்றுதான் கூறமுடியும். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் ஒருவரே.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எத்தனையோ தேசியத் தலைவர்களைப் பெற்றெடுத்த பெருமை உண்டு. வ.உசி. சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்கள் அதே மாவட்டத்தில் பிறந்தவர்கள். எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.

அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'.

அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'விவேக பானு' என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் 'தனிமை இரக்கம்' அச்சாகி வெளியிடப்பட்டது.

1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு 'சக்கர வர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.

1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.

1906ல் சென்னையிலிந்து 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.

சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சதேசகீதங்கள்' என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.

1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்' சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.

அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.

இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா' பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.

அப்போது 'இந்தியா' பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா' பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.

1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.

பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.

அடுத்த ஆண்டில் 'ஞானபாநு' என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.

பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் 'சுதேச கீதங்கள்', 'நாட்டு பாடல்' முதலியன வெளியிடப்பட்டன.

புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.

1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.

1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.

1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.

நன்றி : ஸ்ரீ ஆனந்த நிலையம்
[ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 06:39 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணி தொடக்கம் பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர். இப்பகுதியில் 45 நிமிட நேரத்தில் 300 எறிகணைகள் சிறிலங்கா படையினரால் ஏவப்பட்டன. அதேவேளையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் பதுங்குகுழிகளுக்குள் நீர் நிரம்பியுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்புத் தேட முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நீங்கள் சாப்பிடும் ஒருவேளை பீட்சாவிற்க்காக நீங்கள் கொலை செய்ய படலாம்' இப்படி ஒரு வசனம் 'கற்றது தமிழ்' என்ற திரைப்படத்தில் இடம் பெறுகிறது. இது நிஜம்தான். இன்று இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை நோக்கித்தான் இந்த உலகம் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இன்று ஒரு மனிதன் சிரமமில்லாமல் எதைத்தான் செய்ய முடிகிறது, ஆக ஒருவேளை உணவிற்க்கே மனிதன் சிரமப்பட வேண்டியிருக்கிறது. மனிதன் தன்னுடைய ஒவ்வொரு தேவைகளையும் சிரமங்களுக்கூடகவே நிறைவேற்றி வருகிறான்.

இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியோருவனுக்கு உணவில்லை எனில் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளை இன்று கடைப்பிடிப்பது என்பது முடியாதது என்பது அல்ல சற்று சிரமமான விஷயம் அவ்வளவுதான்.

நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்து கொண்டே இருக்க பழக வேண்டும். உதவி என்பது வெறும், பொருள் (பணம்) கொடுப்பது என்று இல்லை. நமது கண் முன்னே ஒருவர் மிகவும் மனமுடைந்து காணப்படுகிறார் என்றால் அவருக்கு ஆதரவாக சற்று கரிசனமாக பேசுவது கூட உதவி தான். காதலியை இழந்த நண்பனுக்கோ, மனைவியை இழந்த ஒருவருக்கோ அல்லது எதாவது ஒன்றை இழந்து தவிக்கும் நண்பனுக்கு அந்த நேரத்தில் அவனுடைய கையை இணக்கமாக பற்றி இருப்பதை விட என்ன உதவி செய்து விட முடியும். சில நேரங்களில் தொடுதல் என்பது பல நூறு வார்த்தைகள் சொல்லாததை செய்து விடுகிறது.

நம்முள் எத்தனை பேர் இன்று நம்முடைய அண்டை வீட்டாருடன் இணக்கமாக நட்புடன் இருந்து வருகிறோம். இன்னும் ஏன் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வாழ்ந்தது மாறி இன்று ஒரே வீட்டினுள் தனி தனி அறைகள் என்ற சுவர்களுக்குள் குடும்பம் சிறை பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசுவதில் கூட முனைப்பிருப்பதில்லை. நம்மால் முடிந்த வரை நம்மை சுற்றி உள்ளவர்களுடன் மிகுந்த அனபுடன் இருக்க பழக வேண்டும். ஏனெனில் நம்மை சுற்றி உள்ளவர்கள், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வரை நமக்கு எந்த தீங்கும் வராது என்பது ஒரு பழமொழி. எனவே இன்று நாம் நலமாக வாழ நம்மை சுற்றி உள்ளவர்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.

நமது கலாசாரத்தின் இரண்டு கண்கள் அன்பும் பண்பும், இவை இரண்டையும் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். பிறரிடத்தில் நாம் காட்டும் அன்பு நமது மனதில் ஒரு நேரடி வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

இன்னமும் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் சிந்துகிற எத்தனையோ மக்கள் நம்மிடையே இருக்கின்றனர். அந்த கண்ணீர் கூட அந்த கதாபாத்திரத்தின் மீது கொண்ட ஒரு அன்பின் வெளிப்பாடுதான். ஆக ஒரு பிம்பத்தின் மீது நம்மையும் அறியாமல் அன்பு வெளிப்படுகிறது. அன்பின் அழகு அதனை வெளிப்படுத்தும்போதுதான் தெரிகிறது. எனவே நம் ஒவ்வொருவரின் மனதிலும் உறங்கி கிடக்கும் அன்பை எந்த தடையுமின்றி வெளிப்படுத்துவோம்.

ஒரு வலிமையான சமுதாயத்தை உருவாக்குவோம்.

அன்பே சிவம்.

http://eniyoruvithiseivom.blogspot.com/2008/03/adaikkumtaazh.html

10.04.2009

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03


மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

பதற்றத்துடன் வாழும் இடம் பெயர்ந்த மக்களை காப்பாற்றுங்கள்

இராணுவம் தொடர்ந்து முன்னேறுவதை தடுத்து நிறுத்துங்கள் என என்னால் விடப்பட்ட கோரிக்கைகளுக்கு நீங்கள் செவிசாய்க்காமை எனக்கு மிகுந்த மனவருத்தமளிக்கிறது. யுத்தம் கடைசி கட்டத்தை அடைந்துள்ள இவ்வேளை விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பாவிப்பதற்காக சூனியப் பிரதேசத்துக்குள் மக்களுடன் கலந்திருப்பதாலும், பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சூனியப் பிரதேசமாகிய புதுமாத்தளன் பகுதியில் வாழும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிர் ஊசலாடுகிறது. யுத்த விதிகளுக்கமைய புலிகள் நடப்பார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அரச படைகளால் அது முடியும். தமது பல தோழர்களை பலிகொடுத்து மிகச் சிரமப்பட்டு மிகக் குறைந்த மக்களின் பாதிப்போடு நற்பெயரை சம்பாதித்ததோடு இந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் சொற்ப நாட்களில் அந்த நற்பெயரை இழக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. மிகமிக இக்கட்டான நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டு போகிற இவ் வேளையில் தங்களின் தாமதமற்ற தலையீடு அவசியமாகிறது. ஒரு நாள் இன்று நடப்பனவற்றை உலகம் அறியும்வேளை முழு உலகும் அரசையும் மக்களையும் குற்றம் சுமத்தும் இவ் ஆலோசனைகளை நான் தனிப்பட்ட இலாபம் கருதி கூறவில்லை என்பதை நம்புங்கள்.

பல நம்பிக்கையான வட்டாரங்கள் மூலம் கிடைத்த செய்திகளின் படி ஏப்ரல் மாதம் 8ம் திகதி மட்டும் 296 பேர் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 47 பேர் குழந்தைகள் உட்பட இறந்துள்ளனர். இந்த யுத்தத்தில் ஒரேநாளில் இறந்தோரின் மிகக் கூடிய தொகை இதுவாகும். மறுநாள் காயமுற்றோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது இறந்தவர்கள் 30 இற்கு மேற்பட்டவர்கள். ஆனால் அன்று போயா தினமாகும். வைத்தியசாலைக்கு வராமலேயே பலர் வெளியில் இறந்துள்ளதாக அறியப்படுகிறது. அவற்றிற்கு எதுவித ஆவணங்களும் கிடையாது. இந்த மக்கள் யாருடைய தாக்குதலுக்கு இலக்காகி பலியானார்கள் என சர்வதேச சமூகம் கேட்காது. ஆனால் அரசையே குற்றவாளியாக்கும் சர்வதேச சமூக அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தாம் விரும்புவது போல் கண்டிப்பது எதிர்பார்த்ததற்கு மாறான பலனையே தரும் மனிதாபிமான அடிப்படையிலும் நாட்டின் நற்பெயரையும் காப்பாற்ற வேண்டுமானால் நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை பின்வருவனவாகும் என நான் கருதுகிறேன்.

உடனடியாக செல் தாக்குதலை அரச படைகள் நிறுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அல்லாது அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒரு இடத்தை யுத்தத்திற்குள் அடங்காத பகுதியாக பிரகடனப்படுத்தி மக்களை அங்கே வர வைக்க வேண்டும். ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்தினதே. ஆகவே நான் உங்களை வேண்டுவது ஐக்கிய நாடுகள் சபையில் உதவிகளை பெற்றோ அல்லது நட்பு நாட்டின் அல்லது நாடுகளின் உதவியை நாடலாம். அமெரிக்காவும், இந்தியாவும் அத்தகைய உதவியளிக்க முன் வந்ததாக அறிகிறோம். அது உண்மையாயின் அவர்களின் உதவியினூடாக மக்களை மீட்டெடுக்கலாம். ஒரு தனி உயிரை காப்பாற்ற பல நாடுகள் பெரும் தொகை பணத்தை செலவழித்துள்ளன.

அங்கே மக்கள் பட்டினி சாவை எதிர் நோக்குகின்றனர் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அம் மக்களுக்கு போதிய உணவை அனுப்பி வையுங்கள். தாய்மார் பிள்ளைகளுக்கு பாலூட்ட சக்தியற்றவர்களாக தேநீர் பருக கொடுக்கின்றனர். பிள்ளைகளுக்கு வேண்டிய பால்மா மற்றும் தேவையானவற்றை ஆகாயமார்க்கமாக அனுப்பி வைக்கவும்

உடனடியாக ஐக்கிய நாடுகள் குழு ஒன்றை அனுப்பி அங்குள்ள மக்களின் எண்ணிக்கை தேவைகளை கண்டறிய வையுங்கள்

நன்றி

வீ. ஆனந்தசங்கரி
த.வி.கூ- தலைவர்

கருத்துகள் இல்லை: