செவ்வாய், 14 ஏப்ரல், 2009

2009-04-12



ம்...
எல்லோர்க்கும்
சொல்வீரா...?

இயேசுநாதரே
மூன்றாம் நாள்
உயிர்தெழும் ரகசியத்தை...

மதக்கலவரத்தில்
செத்துப்போன
எல்லாக் குழந்தைகளும்

உயிர்த்தெழ...
இலங்கை அரசும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது. அதேவேளை, இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக  மீண்டும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.  வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர். இது இலங்கை பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை புரிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுவதாகவே உள்ளது. [...]


வட சென்னையை தொடர்ந்து இன்று கோவை...

கோவை பாராளுமன்றத் தொகுதியில் தற்போது உள்ள தொகுதிகள்

1. சூலூர்
2. கவுண்டம் பாளையம்,
3. கோவை வடக்கு ,
4. கோவை தெற்கு,
5. பல்லடம்,
6. சிங்காநல்லூர்.

கோவை மக்களவையில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில், தற்போது 5 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன.

1952-ல் துவங்கி 2004 வரை நடந்த பொதுத் தேர்தல்களில் கோவை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 5 முறை, இந்திய கம்யூனிஸ்ட் 4 முறை, திமுக, பாஜக தலா 2 முறை, மார்க்சிஸ்ட் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இதுவரை இங்கே இரட்டை இலை வென்றதே கிடையாது.

1996 தேர்தலுக்குப் பிறகு கோவை தொகுதி கிடைத்திருப்பதால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இது "கெளரவ' தொகுதியாகக் கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் சி.கே.குப்புசாமி இங்கு மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது உறவினரான சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் இருமுறை இத்தொகுதியின் எம்.பி ஆகியுள்ளார்.


2004 முடிவுகள்
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 504981 57 %
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 340476 39 %
18% வித்தியாசம்

1999 முடிவுகள்:
ராதா கிருஷ்ணன் பா.ஜ.க 430068 49 %
நல்லக்கண்ணு சி.பி.ஐ 375991 43 %
6% வித்தியாசம்.

2004 தொகுதி முடிவுகள்

சிங்காநல்லூர்.
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 106004
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 61772
வித்தியாசம் 26% ( இங்கே மதிமுகவிற்கு செல்வாக்கு இருக்கிறது )

கோவை மேற்கு
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 40471
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 35678
வித்தியாசம் 6%

கோவை கிழக்கு
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 47961
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 30591
வித்தியாசம் 22%

பேரூர்
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 101089
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 67122
வித்தியாசம் 20%

பல்லடம்
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 79777
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 55994
வித்தியாசம் 27%

திருப்பூர்
சுப்பராயன் கம்யூனிஸ்ட் 128325
சி.பி. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க 89253
வித்தியாசம் 18%

2004 முவுகளை பார்க்கும் போது அதிமுக கூட்டணிக்கு 39% சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளது என்று தெரிகிறது (பிஜேபிக்கு 5% ஓட்டு வங்கி இருக்கிறது என்று வைத்துக்கொண்டால்).

கோவையில் கட்சிகளின் நிலவரம்:

அதிமுக - 35%
திமுக - 36%
கம்யூனிஸ்ட் - 10-12% ( தொழிலாளர்கள் நிரம்பிய தொகுதி )
காங்கிரஸ் - 10-11%
பிஜேபி - 5% (தற்போது நிச்சயம் 2-3% குறைந்திருக்கும் )
தேமுதிக - ?

1970களில் ~65% சதவிகிதம் பதிவான ஓட்டுகள், கடந்த இரண்டு தேர்தல்களில் 55% சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இந்த முறை 60% மேல் பதிவாகும் என்று எண்ணுகிறேன், பார்க்கலாம்.


பழைய முடிவுகள் பார்க்கும் போது மதிமுகவிற்கு சில இடங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. தேமுதிகவிற்கு என்ன செல்வாக்கு என்று தெரியவில்லை. பாமகவிற்கு இங்கே செல்வாக்கு கிடையாது(கோவை மக்கள் புத்திசாலிகள்).


2009 எப்படி இருக்க போகிறது ?

அதிமுக கூட்டணி 47-51%
திமுக - 44-47%%

தேமுதிக ஓட்டை பிரித்தாலும், இங்கே அதிமுக கூட்டணி தான் வெற்றி பெரும்.




More than a Blog Aggregator

by திகழ்மிளிர்




கணவன் அவன்
காலம் ஆனதும்
கன்னி அவள்
காலம் முழுவதும்
விதவை எனும்
வேடம் தரிக்க‌
வேண்டும் என்ற‌
வேதனைக்கு உள்ளாக்கி
வேடிக்கை பார்த்தது
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

காலங்காலமாய்
கல்வி என்பது
ஆணுக்கு மட்டும்
கலவிக்கு மட்டும்
பெண் என்பதும்
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

கற்பு என்பது
கன்னியருக்கே சொந்தம்.
காளையருக்கு எதற்கு
கடிவாளம் எனும்
கற்பனைகள் பிறந்தது
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

கருவிலே
குழந்தை பெண் என்றால்
கள்ளிப்பால் என்றும்,
கருக்கலைப்பு என்றும்
கருணையற்று
கொடுமைகள் புரிந்தது
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

எண்ணிப் பாருங்கள்
எத்தனை எத்தனை
வேதனைகளில் வெந்து
துடித்திருப்பாள்
வட்ட்த்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

கட்டுப்பாடு எனும் பெயரால்
காலங்காலமாய்
கன்னியரை
காயப்படுத்திய,
களங்கப்படுத்திய‌
கருத்துகளையும்
காரியங்களையும்
களைந்து எறியுங்கள்

ஆண் என்றும்,
பெண் என்றும்
பேதம் அற்ற‌
அடிமை அற்ற‌
புது தலைமுறையை
படையுங்கள்

-----------------------------------------------

கன்னி - பெண்

-------------------------------------------------

அழைப்பு விடுத்து, அன்புச்சங்கலியில் கோர்த்து விட்ட‌ ஷைலஜா அவர்களுக்கு அகம் நிறைந்த நன்றிகள். என் எண்ணத்தை இங்கே கிறுக்கி உள்ளேன்.

மூவரை அழைக்கவேண்டும். அதனால்
மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது.

அதிகமாக ஆழமாக சிந்தித்தால்
அகப்பட்ட அரிமாக்கள் (சிங்கங்கள்) இவர்கள்
அய்யோ என்று அலறுவது கேட்கின்றது,
அடிக்கவும் வருவது தெரிகின்றது
அதாவது அன்பால், தயது செய்து
அடியேனை மன்னிக்கவும்.

1.அன்பு நண்பர் ஜோதிபாரதி அவர்கள் ( கவிதையாலும் தமிழாலும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் )

2.அன்பு நண்பர் குடந்தைஅன்புமணி அவர்கள் ( அய்க்கூ கவிதையால் அசத்திக் கொண்டு இருப்பவர் )

3.அன்பு நண்பர் ஆதவா அவர்கள் ( கவிதை, கதை என அனைத்திலும் அகம் கவர்ந்தவர் )

கருத்துகள் இல்லை: