செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-13

வன்னிப் போர் முனையில் கடமையாற்றி விட்டு விடுமுறையில் செல்லும் சிறிலங்கா இராணுவத்தினர் பலர் பெருமளவான தங்க நகைகளை அநுராதபுரம் நகரிலுள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்து வருவதாக தெரியவருகின்றது. வன்னிப் போர் முனைகளிலிருந்து தரை வழியாக வரும் இராணுவத்தினர் வவுனியாஅநுராதபுரம் ஊடாகவே தென் பகுதியிலுள்ள தமது வசிப்பிடங்களுக்குச் செல்கின்றனர். இவ்வாறு விடுமுறையில் வரும் இராணுவத்தினர் பெறுமதிமிக்க தங்க நகைகளை அநுராதபுரத்திலுள்ள தங்க நகைக் கடைகளில் விற்பனை செய்வதாக கடையுரிமையாளர்களும் இவ்வியாபாரத்தின் தரகர்களாகக் கடமையாற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளும் தெரிவிக்கின்றனர். கடந்த மாத நடுப்பகுதியில் பெருமளவான தங்க நகைகளுடன் தம்புத்தேகம பகுதியில் இராணுவத்தினர் ஒரவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சந்தேகத்துக்கிடமான வகையில் பயணப்பையொன்றுடன் நகரின் முக்கிய பகுதிகளில் அலைந்து கொண்டிருந்ததாலேயே இவர் சோதனையிடப்பட்டார். அப்போது இவரிடம் பெருமளவு தங்க நகைகள் கண்டு பிடிக்கப்பட்டன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற சமுதாய அமைப்பு சமீபத்தில் மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை உருவாக்கியது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த இந்த கட்சி 2 தொகுதிகளை கேட்டது. ஆனால் ஒரு தொகுதி மட்டும் தான் தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அ.தி. மு.க. தரப்பில் இருந்து பேசப்பட்டது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி புதிய தமிழகத்துடன் இணைந்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது.
புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுபாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 7:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக  வன்னி செய்தியாளர் தெரிவிக்கின்றார். தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் படையினருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருப்பதாக சிறிலங்கா அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்ற போதிலும், நேற்று நள்ளிரவு 12:00 மணி முதல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மக்கள் அதிகமாகவுள்ள பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர்.  

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படம் வந்த போது...நான் சென்னையில் இல்லை..ஆனால்..படத்திற்கான விமரிசனங்கள் கண்டு..அப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.

சென்னைக்கு நான் வந்ததும்...விசாரித்ததில்..படம் தோல்வி...தியேட்டர்களில் இருந்து படத்தை எடுத்துவிட்டார்கள் என்றனர்.

செகண்ட் ரன் ..வருமா..என பார்த்தேன் அதுவும் இல்லை..

நேற்றுதான் பார்த்தேன்..ஆச்சர்யம் அடைந்தேன்...

என்னவொரு அருமையான கதை அமைப்பு, திறமையான எடிட்டிங், நானாபடேகரின் மிகையில்லா அற்புத நடிப்பு, எதிர்பாரா முடிவு...

பாரதிராஜா...சார்...உங்களுக்கு என் சல்யூட்..

படிக்காதவங்களும்...வில்லுகளும்..நிறைந்துள்ள இந்நாளில் உங்கள் பொம்மை விலைபோவது சிரமம்தான்..யாவரும்நலம் என்பார்கள்..ஆனால் நலம் இல்லை.

பணநெருக்கடியிருந்தும்...படம் முடிந்தும்...வெளியிட சிரமப்பட்டீர்கள் என படித்தேன்...

உங்கள் திறமையை புரிந்துக்கொள்ளா..ரசனை...இதில் தரமான உங்கள் படம் ஓடாதது ஆச்சர்யம் தரவில்லை.

மீண்டும் ஒரு அருமையான படத்தை செதுக்கி...செதுக்கி தந்ததற்கு நன்றி.

படம் பார்க்காதவர்கள்...திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...என்று சூரிய,கலைஞ தொலைக்காட்சியில் விரைவில் வரும்...

தவறாமல் பாருங்கள்...அதுதான் அந்த படைப்பாளிக்கு நம்மால் தர முடிந்த மரியாதை.

கருத்துகள் இல்லை: