செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-13

பிப்ரவரி 19 உயர்நீதி மன்றத் தாக்குலுக்கு எதிராக தமிழக வழக்குரைஞர்கள் ஒரு மாத காலமாக நடத்தி வந்த நீதிமன்றப் புறக்கணிப்பு இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றத் தாக்குதலுக்குப் பொறுப்பான இரு போலீசு அதிகாரிகளை (ராமசுப்பிரமணியம், விசுவநாதன்) தற்காலிகப் பணிநீக்கம் செய்வதாக, 18.3.09 அன்று முகோபாத்யாயா தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிடுவதாக வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு 20.3.09 அன்று மாலை அறிவித்திருக்கிறது. புறக்கணிப்பு கைவிடப்பட்ட போதிலும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரையில் பிற வடிவங்களிலான போராட்டங்கள் தொடரும் என்றும் போராட்டக்குழு கூறியிருக்கிறதே தவிர, என்ன விதமான போராட்டங்கள் நடத்தப்படும் என்பது குறித்து விளக்கவில்லை.

போராட்டங்களில் வெற்றிதோல்வி சகஜம்தான்; பிழைப்புவாத சங்கத் தலைமைகள் போராட்டத்துக்குத் துரோகமிழைப்பதும் சகஜம்தான். எனினும், இந்தத் தலைமையால் ஒரு தோல்வியை வெற்றியாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. ஆகப்பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் இதனை ஒரு வெற்றி என்று நம்பவில்லை; எனினும், இந்த முடிவை எதிர்க்கவும் இல்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/

அந்த சிலை வெய்யிலில் காய்ந்தது மழையில் நனைந்தது. ஓடும் நாய் முகர்ந்து பார்த்து சிறுநீர் கழித்தது. அதற்கு தெரியுமா அது எட்டி பார்க்க முடியாத இடத்தில் அது இருந்தது என்று. வணங்கிய தலைகள் கும்பிட்ட கைகள் பார்த்த கண்கள் வேண்டுதல் செய்த வாய் கண்டு காணாமல் போனது.

இருபைதைந்து முப்பது வருடங்களாக கருவறையில் தீப ஓளி மலர் மாலைகள் முதல் மரியாதை இடையே வாழ்ந்தது அந்த சிலை. அதற்குரிய அய்யர் மட்டுமே தொடலாம் குளிப்பாட்டலாம் ஆடை அணிவிக்கலாம் அலங்காரம் செய்யலாம். யாரும் பார்க்க அனுமதி இல்லை.

காலப்போக்கில் அபிஷேகம் தண்ணீர் ஊற்ற மூக்கின் நுனியில்சிறுசில் பெயர்ந்து போனது சிலை மூளியானது.
அய்யர் வேண்டுதல் விடுத்தார் ஊர் பெரியதலைகளிடம் சிலை மாற்ற வேண்டும் என்று கோரினார்.

புதிய சிலை மாற்றப்பட்டது.பழைய சிலை வெய்யிலில் காய்ந்தது மழையில் நனைந்தது.

சென்னை: மதிமுகவுக்கு ஊடக பலம் இல்லாத குறையைத் தீர்க்கும் விதமாக வைகோ டிவி எனும் பெயரில் புதிய டிவி சேனல் துவக்கப்படவுள்ளது.

இதுகுறித்து நேற்று வைகோ சென்னையில் கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாம்.

திமுகவிலிருந்து பிரிந்து வந்தபின் வைகோவுக்கு முன்னணி நாளிதழ்களின் வெளிப்படையான ஆதரவு இருந்தது. அந்த பலத்தையும் மக்கள் மீது கொண்ட நம்பிக்கையையும் வைத்து மார்க்சிஸ்ட் மற்றும் ஜனதா தளத்துடன் தனி அணி அமைத்துக் களம் கண்டார் வைகோ. ஆனால் மக்கள் அவரை கைவிட, வெறுத்துப் போய் அவரும் கூட்டணியில் விழுந்தார்.

அதன்பிறகு மதிமுகவை ஆதரித்த பத்திரிகைகளும் முகத்தைத் திருப்பிக் கொள்ள தங்களுக்கென்று தனி பத்திரிகை இல்லாமல் தவித்து வந்தார் வைகோ (இதற்காக சங்கொலியை ஆரம்பித்தார். அது கட்சியினரோடு சுருங்கிவிட்டது. பின்னர் நின்றும் போனது).

அன்று முதல் தங்களுக்கென்று தனி நாளிதழ் மற்றும் டிவி ஆரம்பிக்க வேண்டும் என தொண்டர்களும் நிர்வாகிகளும் வைகோவை வற்புறுத்தி வந்தனர்.

தற்போது அந்தக் கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. பொதிகை தவிர தமிழகத்தில் இன்றுள்ள அனைத்து சேனல்களுமே ஏதாவது அரசியல் கட்சியின் சார்பு கொண்டவை என்பதால், மதிமுகவுக்கென்று தனி சேனல் ஆரம்பிக்க வைகோவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்தத மதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்குள் மதிமுகவுக்கென்று 'மறுமலர்ச்சி டிவி' என்ற பெயரில் சேனல் துவங்க திட்டமுள்ளதாக வைகோ அறிவிக்க, உடனே தொண்டர்கள் அந்தப் பெயர் வேண்டாம், வைகோ டிவி என்றே வைக்கலாம் என்று வற்புறுத்தினர்.

எனவே தொண்டர்களின் விருப்பத்துக்கிணங்க வைகோ டிவி என்ற பெயரை வைகோ ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

டிவியின் 'லோகோ' புலியா?!
ஒரு தொழிலில் 100 ரூபாய் முதலீடு செய்து 1000 ரூபாய் சம்பாதித்தால் அது லாபம் என்போம். அதையே 100 ரூபாய் முதலீடு செய்து 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் அது கொள்ளை லாபம். அந்த அளவு கொள்ளை லாபம் கிடைக்கும் தொழில் ஒன்று உண்டா? ஆம் இருக்கிறது. பாக்கிஸ்தான் அந்த வியாபார தந்திரத்தை கண்டுபிடித்து பெரிய அளவில் பயனடைகிறது. என்ன என்று கேட்கிறீர்களா? பாக்கிஸ்தான் தலிபான், லஸ்கர்-இ-தொய்பா என பல தீவிரவாத இயக்கங்களை சில மில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கி, அதன் பலனாக இன்று பல பில்லியன் டாலர்களை அமெர்க்காவிடமிருந்து நிதி உதவியாக பெற்று கொள்ளை லாபம் அடைகிறது. 21ம் நூற்றாண்டில இதுவும் ஒரு லாபமிகு தொழில் தான்.

--
காதல். பதின்ம காதலை சத்தமில்லாத முத்தங்களுடனும் காற்றைக் கிழிக்கும் அம்புகளைத் தாங்கும் அம்பாறாத்தூளியைத் தோளில் சுமக்கும் அழகிய அர்ச்சுனனின் திறமையை பரிகசிக்கும் விதமாய் யாரோ ஒருவனின் அம்பால் அனுமதியோடோ அனுமதியில்லாமலோ கிழித்தெறியப்பட்ட காற்றை சுவாசத்திற்கு ஒப்புக்கொள்ளும் மனநிலையுடனும் இருந்த என்னை என் மனைவி மணமான சில மாதங்களுக்குள் புரிந்து கொண்டிருந்தால் தான் ஆச்சர்யமே. கேள்விகளைத்
குஜராத் படுகொலைக்கு பின் சென்னையில் நடந்தஒரு ஜீம்மா பிரசங்கத்தில் பி.ஜெயினுல்லாபுதீன் "குஜராத்தில் இரயிலை முஸ்லிம்கள் எரித்ததால்தான் அவர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுகின்றார்கள்" என்று குஜராத்தில் முஸ்லிம்கள் மீது மோடியால் நடத்தப்பட்ட அக்கிரமத்தை நியாயப்படுத்திப் பேசினார். ஆனால் இன்று நீதி விசாரனையோ இரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் நடத்தப்படவில்லை என்று கண்டறிந்து அறிவித்துள்ளது என்பதை

கருத்துகள் இல்லை: