ஒரு குப்பம் காலனியாகிற கதைதான் 'மத்திய சென்னை'. ராபர்ட்-ராஜசேகரன், பாரதி வாசு போன்ற இரட்டை இயக்குனர்கள் வரிசையில் விவேகானந்த்-வீரசிங்கம் இயக்குகிறார்கள். புதுமுகம் ஜெய்வந்த் ஹீரோ. மனுஷன் ரொம்ப காயப்பட்டிருப்பாரு போலிருக்கு, தனது திரையுலக என்ட்ரியை சற்று சலிப்புடன் சொல்ல ஆரம்பித்தார்.
'பத்து வருஷத்துக்கு முன்னாடியே சினிமாவுக்கு வந்திட்டேன். ஆனா, இடைத்தரகர்களும், போலி தயாரிப்பாளர்களும் என்னை ஏமாத்தி எக்கச்சக்கமா சாப்ட்டுட்டாங்க. ஆனாலும் போராடி இந்த மத்திய சென்னையிலே நடிச்சு முடிச்சிட்டேன். என் அனுபவத்தை எடுத்தாலே ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்கலாம்' என்றார் சலிப்பு மாறாமல்! மத்திய சென்னையை பொறுத்தவரை ஜெய்வந்த் வெறும் ஹீரோ மட்டுமல்ல, இந்த கூட்டணியை அமைத்ததே இவர்தானாம்.
'ஐந்து வருஷத்துக்கு முன்னாடி ஆபிஸ் போட்டோம். ஆனா, கடைசி மூணு மாசத்திலேதான் படத்தை முடிச்சோம். ஆனாலும் இந்த படம் எங்க எல்லாருக்கும் பெரிய பேரு வாங்கி தரும்' என்றார் இயக்குனர்களில் ஒருவரான விவேகானந்த். கதையை கேட்ட இளையராஜா, இதுவரைக்கும் இந்த கதையை எத்தனை பேருட்ட சொல்லியிருப்பே? என்றார். அந்தளவுக்கு கதையை ஒரே மூச்சுல சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. முதன்முறையா கம்போசிங்கிற்காக என்னையும் அழைச்சுகிட்டு கேரளாவுக்கு போயிட்டார். எல்லா பாடல்களும் ரொம்ப அற்புதமா வந்திருக்கு' என்றார்.
ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். ரம்யா பார்னாங்கிற புது ஹீரோயினை மும்பையில் இருந்து இறக்குமதி பண்ணியிருக்காங்க. அப்படியே எல்லார் மனசுக்குள்ளும் ஏற்றுமதியும் பண்ணிடுங்க சாருங்களா...!
வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சுவிஸ் வெளிநாட்டு அமைச்சுக்கு அருகே சாகும்வரை உண்ணாவிரதம் : தமிழரை வாழவிடு! Let the Tamils Live! - வன்னியில் தொடரும் இனஅழிப்புப் போரை உடன் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சுவிஸ் அரசின் நேரடித் தலையீடு - வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு நேரடி மருந்து மற்றும் நிவாரண உதவி - சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விசேட விவாதத்துக்கு முயற்சி - பிரிந்து செல்வதா இல்லையா என ஈழத் தமிழரின் கருத்தறிய ஐ.நா. தலைமையிலான சர்வசன வாக்கெடுப்பு இவை எதுவும் சாத்தியமில்லாதவிடத்து, தமிழரின் சுய நிர்ணய உரிமையை சுவிஸ் அரசு உட்பட அனைத்துலக சமூகம் அங்கீகரித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் மேற்கொள்ளும் நீராகாரம் எதுவுமின்றி சாகும் வரை உண்ணாவிரதம். காலம்: 13 ஏப்ரல் 2009 திங்கட்கிழமை காலை 10:00 மணி இடம்: Hirschengraben, Bern (சுவிஸ் வெளிநாட்டு அமைச்சுக்கு அருகே) TNC

பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் சனிக்கிழமை (18.04.09) தலைநகர் பரிசில் ஒன்று கூடவுள்ளனர். இந்த ஒன்றுகூடலில் ஈழத் தமிழ்ச் சமூகம் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகவும் பிரெஞ் வாழ் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் விருப்பத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். சிறிலங்கா அரசின் இன அழிப்புப் போர் உச்சம் பெற்றும் அனைத்துலக அரங்கில் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சிப் போராட்டங்கள் தீவிரமுற்றும் இணைத்தலைமை நாடுகளும், ஐ.நா. அமைப்பும் அக்கறையை வெளிப்படுத்தும் இன்றைய சூழலில் பிரான்சில் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இப்பேரவையை கூட்டியிருப்பது முக்கியத்துவமாகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக