இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக இலங்கை அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பதாகத் தெரியவருகிறது. 'அக்ட் நௌவ்' அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் வடபகுதியில் பாதித்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கென 2000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்களுடன் ‘வணங்கா மண்’ நிவாரணக் கப்பல் பிரித்தானியாவிலிருந்து இலங்;கையை நோக்கிப் [...]
பெங்களூரில் 'பங்கி ஜம்ப்' சாகச விளையாட்டு விளையாடிய சென்னை மரைன் என்ஜினீயர் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் அறுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன், வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மூத்த மகன் பார்கவ் (வயது 23), மரைன் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 'பங்கி ஜம்ப்' என்ற சாகச விளையாட்டு பற்றி இன்டர்நெட் மூலமாக தெரிந்து கொண்டார்.
நட்பான பல வருசங்களே தப்பாகிப்போன என்னூரில் இரத்தங்களுக்கும், துப்பாக்கிச் சத்தங்களுக்கும் நடுவில் இருள்கிழிக்குமா ? என்ற கேள்விக்குறியோடு தமிழுக்கு விரோதி வருசம் பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.இதில் தமிழுக்கு வருசம் தை யா? சித்திரை யா ? என்ற வாதப்பிரதிவாதங்கள் வேறு.
யுகயுகமாய் புரியப்படாமலே இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. யுத்தத்தின் முடிவை யுத்தமே தீர்மானிக்கும் என்ற உண்மை.வரலாறுகள் அதைத்தானே சொல்கின்றன. இருந்தும் இரத்தப் பசி அடங்காமல் தலைவரித்தாடித் திரிகிறது புறநாநூற்றுப் பேய்கள் மனித மனங்களுக்குள்.
வரலாற்றில் இருந்து நாம் கற்கும் பாடம் யாதெனில் ,வரலாற்றில் இருந்து நாம் பெரிதாய் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.
ஜேர்மன் தத்துவஞானி HEGEL { 1770 -1831 }
பிறந்தது முதல் யுத்தமும் ,சமாதானமும் நித்தமும் மாறி,மாறி வந்து கடைசியில் இரத்தமுறைந்து பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என் தேசத்தை. எப்போதோய்ந்து போகுமோ இந்தத் துப்பாக்கிகளுக்கு நடுவிலான துயரவாழ்க்கை?????
{ படங்களில் காண்பது தம்பலகாமம் }

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் விரைவில் அதன் கடந்த கால உயர்ந்த பட்ச அளவான 21000 புள்ளிகளைத் தாண்டி முன்னேறும் என அமெரிக்க பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான இலியட்வேவ் இண்டர் நேஷனல் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
கரடியின் பிடியில் சிக்கி மீள முடியாமல் தவிக்கும் பங்குச்சந்தைகள் ஒரு தொகுப்பு . அவை ஜப்பான் சிங்கப்பூர் ஹாங்காங் சீனா ஆஸ்திரேலியா. ஆவை சரிவின் வேகத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நிலை உருவாகும். இரண்டாவது பிரிவு நாடுகள் இந்தியா தாய்வான் நியூஜிலாந்து. இவற்றை இளங்காளை நாடுகள் என வர்ணிக்கலாம். இவற்றின் பங்குச் சந்தைகள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன என ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்திய பங்குச்சந்தை அடுத்த 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வளரும் திறன் உடையது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டெண் 2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி 21206.77 புள்ளிகளை எட்டியது. அந்த அளவில் இருந்து சறுக்கி அக்டோபர் மாதத்தில் சுமார் 8000 புள்ளிகளுக்கு வீழ்ந்துவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து முன்னேறி வருகிறது. வுpரைவில் அதன் உயர்ந்த பட்ச அளவான 21 ஆயிரத்து 200 புள்ளிகளையும் தாண்டி உயரும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உயர்வு தான் என்று அந்த அறிக்கை கூறுகிறது….
குறிப்பு---இன்று காலை தினசரியில் கண்டேன் நம்பலாமா…? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்…!

மனிதனாக மனிதன் வாழ்ந்தால் மண்ணில் மனிதன் இறப்பதில்லை...

கம்பு சண்டை கத்துகிட்டாலே ஒரு தெம்பு வரும் போலிருக்கு! சரித்திரம் படத்தின் நாயகி ஸ்ரீதேவிகா கொஞ்சம் வெளிப்படையா பேசுறேன்னு வாயாலேயே கம்பு சுற்றியிருக்கிறார்! அவசரப்படாதீங்கப்பு, இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லே.
'ஒரு கதாநாயகிக்கு கல்யாணம் ஆயிட்டா மறுநாளில் இருந்தே அவளை அக்கா வேடத்துக்கோ, அம்மா வேடத்துக்கோ கூப்பிடுது சினிமா. இது என்னங்க அநியாயம்? பாலிவுட்லே அப்படியா நடக்குது? காஜோல், ஐஸ்வர்யாராயெல்லாம் இன்னும் ஹீரோயினாதானே நடிக்கிறாங்க, இங்கே மட்டும் ஏன் இப்படி பார்ஷியாலிடி பார்க்கிறாங்க? திருமணத்திற்கு பிறகு இன்னும் அப்படியேதான் இருக்காங்க சிம்ரன். அவங்க திரும்பி வந்தப்போ யாராவது ஹீரோயின் வாய்ப்பு கொடுத்தாங்களா, இல்லையே? இந்த நிலைமை மாறணும். இல்லைன்னா மாத்தணும்!' (ஹையோ...) என்கிறார் சூடு ஆறாமல்!
தங்கச்சி பேசுறத பார்த்தா, இலைய போட்டுட்டு இட்லிக்காக வெயிட்டிங் போலிருக்கு. ஒங்களை நம்பி இரண்டு மூணு படம் மார்க்கெட்ல இருக்கு. பார்த்தும்மா...

காதிலே ஜொள்ளு வழிய காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு எக்ஸ்கியூஸ்... கந்தசாமி ஆடியோ விழா முன்பு அறிவித்த மாதிரி ஏப்ரல் 14 ந் தேதி நடைபெறாது. அப்படியே கேமிராவை நகர்த்தி வைக்கிற மாதிரி விழா தேதியையும் நகர்த்தி வச்சுட்டாங்க. ஏன்?
சில சொல்ல முடியாத தொழில்நுட்ப காரணங்களாம். தொழில் நுட்பமாச்சே, சொன்னா மட்டும் புரியவாப் போவது? நந்தம்பாக்கம் டிரேட் சென்ட்டரில் மிக பிரமாண்டமாக இந்த விழாவை நடத்த முடிவு செய்திருந்தார் தயாரிப்பாளர் தாணு. (அவருக்கு நேரு ஸ்டேடியம் ராசி இல்லீங்களே) இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வாங்கியிருந்தது சன் டிவி.
இந்த விழாவில் சுமார் 30 கிராமங்களை தத்தெடுப்பது பற்றியும் அறிவிப்பதாக இருந்தாங்க. முக்கிய விருந்தினரா ரஜினி கலந்துப்பாருன்னும் பேச்சு! ஆனால், எல்லாமே ஒரு வாரம் தள்ளி போயிருக்கு. ஏப்ரல் 26 ந் தேதி இந்த விழாவை ஜாம் ஜாம்னு நடத்தப் போறாங்களாம். படத்திலே இடம் பெற்ற பாடல் ஒன்றுக்கு நேரடியாக மேடையிலே ஆடுவதற்கும் சம்மதித்திருக்கிறாராம் ஸ்ரேயா! (யப்பா, மொத வரிசைய பிரஸ்சுக்கு ஒதுங்குங்கப்பா...!)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக