செவ்வாய், 21 ஏப்ரல், 2009

2009-04-13



நம் வீட்டுக்கணினிகளில் நமது குழந்தைகளை விளையாட அனுமதிக்கலமா?

நாம் நமது ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயங்குதளத்தில் குறிப்பாக விண்டோஸ், லினக்ஸ் போன்றவற்றில் பதிந்திருப்போம்.

இதே கணினியை குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதித்தால் அவர்களது குறும்புத்தனத்தால் நமது கோப்புகளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழலாம்.

அவர்களது திறமையை வளர்ப்பதற்காகவும், அச்சமின்றி பாதுகாப்பு உணர்வுடன் கணினியை குழந்தைகள் வசம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியுடன் இருக்க என்ன வழி?

மழலைகளுக்காகவே ஒரு இலவச இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் Qimo

Qimo மென்பொருள் மிக இலகுவானது. சிடி, பென் டிரைவ் இவற்றில் Qimo வை ஏற்றி பிறகு கணினியில் நிறுவிப் பயன்படுத்தலாம்.

மிகக் குறைந்த திறன் கொண்ட கணினியிலும் நல்ல முறையில் இயங்க வல்லது( 400 MHz மைக்ரோப்ராசசர், 256 MB நினைவகம், 6GB வன்வட்டு )

வழக்கமான கணினித் திரையில் இயங்குதளத்தில் கண் முன் தெரியும் ஐகான்கள் எல்லாவற்றையும் விட இந்த Qimo வில் அளவில் பெரிய ஐகான்களாகத் தெரியும்.

TuxPaint, eToys, Gcompris ஆகிய பயன்பாடுகளை உள்ளடக்கியது.

பழைய மடிக்கணினிகள், ஒன்றுக்கும் உதவாது எனத் தூக்கிப்போடும் நிலையில் உள்ள பழைய கணினிகளில் இந்த Qimo வை நிறுவினால் அவற்றை இன்னும் பல காலம் பயன்படுத்தலாம்.

3 வயது குழந்தைகளும் பயன்படுத்தும் வண்ணம் மிக எளிமையான முகப்பையும்,நிறைய கணினி விளையாட்டுகளையும் உடைய இயங்குதளம் இது. இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்தால் ஒரு ISO கோப்பாகக் கிடைக்கும்.

அதை ஒரு சிடி / டிவிடியில் எரிக்க வேண்டும். பின்பு அந்த சிடி / டிவிடி வழியாகக் கணினியை பூட் செய்து Qimo வை நிறுவலாம்.

ISO கோப்பினை சிடி / டிவிடியில் ஏற்றுவதற்கு ISO Recorder மென்பொருள் உதவும்.

உங்கள் ரகசியக் கோப்பு, ஆவணங்களை தனி இயங்குதளத்திலும், குழந்தைகளுக்கான பயிற்சிகளை, விளையாட்டுகளை இந்த Qimo விலும் என தனியாகப் பிரித்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் நிகழாது.

மேலும் பழைய கணினிகள் வீட்டில் பயன்படுத்தாது இருப்பின் அதில் இந்த Qimoவை நிறுவி அதை சிறுவர்களிடம் தைரியமாகக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்.

சுட்டி : http://www.qimo4kids.com/

கலைச்சொற்கள் :

வீட்டுக்கணினி : Home PC
மடிக்கணினி : Laptop
கோப்புகள் - Files
ஆவணங்கள் - Documents
இயங்குதளம் - Operating System
நிறுவுதல் - Installation
ஐகான் - Icon
பயன்பாடுகள் - Software Applications
ISO - An ISO image is an archive file (a.k.a. disk image) of an optical disc using a conventional ISO (International Organization for Standardization
தரவிறக்கம் - Download
சிடியில் எரித்தல் - CD Burning
பூட் - Boot - Startup

ஒரு ரூபாய்... நூறு ரூபாய்... பத்தாயிரம்... லட்சம் ஊழல், பத்து லட்சம் ஊழல், ஒரு கோடி ஊழல், நூறு கோடி ஊழல், ஆயிரம் கோடி ஊழல் கேள்விப்பட்டிருக்கிறோம்!

லட்சம் கோடி ஊழல்... நம்ப முடிகிறதா? நடக்க சாத்தியம் உள்ளதா... 1947 முதல் 2007 வரை நாட்டில் நடந்த ஒட்டு மொத்த ஊழல்களைக் கூட்டினாலும், பெருக்கினாலும் வராத தொகை சில நூறு கோடி போபர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கியது. அரசையே மாற்றியது.

ஆனால் ஒரு லட்சம் கோடி ஊழல்! தேசத்தின் வருவாய்க்கு மிகப் பெரிய இழப்பு. வாங்கிய கடனை செலுத்த முடியாமல் நேர்மையான விவசாயிகள் ஒரு லட்சம் பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். பள்ளிக்கு செல்லும் வயதில் குழந்தைகள் செங்கல் சூளைகளில் இருக்கிறார்கள். வேலை இழந்த தொழிலாளிகள் தங்கள் வாழ்விற்காக சிறுநீரகத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வைரம் மிக உயர்ந்த ஆபரணம். ஆனால் 71 பட்டை தீட்டும் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்பது சமீபத்திய செய்தி. வைரத்திற்கு மதிப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் உயிர்க்கு மதிப்பு இல்லை.

ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக ஆனவர்களை பார்த்திருக்கிறோம். அதே தலைமுறையில் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனவர்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரே வருடத்திற்குள், எந்த வித வேலையும் செய்யாமல் 5000 கோடி சம்பாதிப்பது எப்படி? அதற்கும் வழி உள்ளது இந்த நாட்டில். தேவை தொலைதொடர்பு அமைச்சரின் கருணை மட்டுமே!

சுவான் டெலிகாம், யூனிடெக் டெலிகாம் இந்தப் பெயர்களை நீங்கள் யாரும் கேட்டிருக்கிறீர்களா! கேள்விப்பட்டு இருக்கிறீர்களா! ஒரு டவர் கூட அமைக்காமல் ஓர் ஆபிஸ் கூட இல்லாமல் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல் ஒரு செல்போன் கம்பெனி 5000 கோடி சம்பாதித்திருக்கிறதே! சுவான், யூனிடெக் இவை எல்லாம் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். ஒரு நகரையே கட்டி முடித்தால் கூட கிடைக்காத லாபம்! ஒரே ஒரு உரிமத்தில் கிடைத்தது எப்படி? செல்போன் சேவை மட்டுமா ஹை டெக். அதில் நடைபெற்றிருக்கும் ஊழல்களும் ஹைடெக்தான்.

பிரதமர், நிதி அமைச்சர், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆலோசனை, எல்லாவற்றையும் மீறி ஓர் அமைச்சர் செயல்பட முடியுமா? மத்திய அமைச்சரவைக்கு பதில் சொல்ல வேண்டாமா? ஆனால் அமைச்சர் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு, தனக்கு மட்டுமே அதிகாரம் என்று செயல்பட்டுள்ளார். தட்டிக் கேட்க பிரதம அமைச்சருக்கு தைரியம் இல்லை. மானியங்கள் இருக்கக் கூடாது என்று கூப்பாடு போடும் நிதி அமைச்சருக்கும் துணிவு இல்லை. கூட்டணி அவ்வளவு பலமாக உள்ளது.

இந்த ஊழலை யார்தான் தட்டிக்கேட்பது? இந்த ஊழலைப்பற்றி யாராவது தட்டிக் கேட்க வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
(அறிவாலயம் பின்புறம்)
தேனாம்பேட்டை, சென்னை -600 018.

தொலைபேசி: 044-2433 2924

விலை ரூ. 5


நீண்ட நாட்களுக்கு பிறகு சிங்கையில் டிக்கெட் கிடைக்க சிரமப்பட்ட படம் என்றால் இந்த படத்தை கூறலாம். திரையில் இருந்து இரண்டாவது வரிசையில் தான் இடமே கிடைத்தது.

வழக்கமான கடத்தல் கதை தான் என்றாலும் அதை கூறிய விதத்தில் தான் இந்த படம் வெற்றி பெற்று இருக்கிறது. பிரபு கடத்தல் தொழில் செய்பவர் நன்கு படித்து இருந்தும் அவருக்கு வலது கரமாக இருப்பவர் சூர்யா. பிரபு கடத்தல் தொழில் செய்தாலும் அதிலும் சில நேர்மைகள் தொழில் தர்மங்கள் பார்ப்பவர். அனைத்து கடத்தல்களையும் செய்வார் ஆனால் போதை பொருள் போன்ற பொருட்களில் மட்டும் தலையிடமாட்டார்.

இவருடைய தொழில் போட்டியாளர் நேர்மையாக இருந்தாலும் அவருடைய மகன் பிரபுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார், தொழிலில் பிரபுவை முந்தி முதலிடத்திற்கு வர பல தகிடுதத்தங்கள் செய்வார். அதை சூர்யா தடுத்து அனைத்திலும் வெற்றி பெறுவார். அதை சூர்யா எவ்வாறு தெரிந்து கொண்டு அதில் வெற்றி பெறுகிறார் என்பதை சுவராசியமாக கூறி இருக்கிறார்கள். வழக்கமான படம் போல இல்லாமல் கொஞ்சம் டெக்னிகலாக செய்துள்ளார்கள், அதுவே அனைவரையும் கவர்ந்துள்ளது என்றால் மிகையல்ல. இவர்கள் கும்பலில் கருணாசும் உண்டு ஆனால் நடிக்க வாய்ப்பில்லை.

சூர்யாவுடன் உடன் வருபவராக விஜய் டிவி கடவுள் பாதி மிருகம் பாதி நண்டு நடித்துள்ளார். இவர் வரும் காட்சிகளில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை, இவருடைய தங்கை தமன்னா, இந்த காரணங்கள் போதும் என்று நினைக்கிறேன் சூர்யா அவரை காதலிக்க. தமன்னாவிற்கு பெரிதாக நடிக்க ஒன்றும் வாய்ப்பில்லை ஒரே ஒரு முறை CID சங்கர் போல வேலை செய்வதை தவிர்த்து.பாடல்கள் சுமார் ராகம் தான், முதல் பாடல் எடுத்த விதம் அருமை.

சூர்யா அசத்தலாக நடித்துள்ளார், நடிப்பு என்றால் வாரணம் ஆயிரம் போன்று அல்ல, தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக செய்துள்ளார். அவரது நடிப்பு நல்ல சுறுசுறு விறுவிறு. பல பெண்கள் சூர்யா ரசிகைகளாக மாற அதிக வாய்ப்பு ;-) காதல் காட்சிகளில் பின்னி பெடலெடுக்கிறார், அடடா! இப்படி ஒரு ஆள் கிடைத்தா நல்லா இருக்குமே என்று பல பெண்களை ஏங்க வைத்து விடுவார் என்று நினைக்கிறேன். சூர்யாவிற்கு ஒரு சில காட்சிகளில் விக் வைத்துள்ளனர், ஏன் என்று தெரியவில்லை.

படம் எடுக்கிறவர்கள் (ஹிந்தி தெலுங்கு உட்பட) அனைவரும் அமெரிக்கா, சுவிசர்லாந்து, லண்டன் என்று ஒரே இடமாக சென்று மொக்கை போட்டு வெள்ளைகாரர்களையே காட்டி கொண்டு இருக்க, யோவ்! காங்கோ மாதிரி வித்யாசமான இடங்களும் நிறையா இருக்குயான்னு நம்மை அங்கே அழைத்து சென்று புது வித அனுபவத்தை கொடுத்து விட்டார்கள், அதற்காக கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நான் காங்கோ சம்பந்தப்பட்ட காட்சிகளை ரொம்ப ரசித்து பார்த்தேன்.

அதிலும் அங்கே நடக்கும் சேசிங் காட்சிகள் அசத்தல், கேமரா கலக்கி இருக்கிறது. இங்கே ஸ்லம் டாக் எடுத்து நம்ம ஊர் சேரி பகுதிகளை காட்டி நம்ம மானத்தை (உண்மை தான் என்றாலும்) வாங்கியது போல இதில் அங்கே உள்ள பல பெண்கள் பாலியல் தொழிலாளர்கள் போலவும் எய்ட்ஸ் அதிகம் போலவும், திருட்டு அதிகம் போலவும் காட்டி இருக்கிறார்கள் (அது உண்மையும் கூட).

சூர்யாவை சோதனை செய்கிறேன் பேர்வழி என்று அவரது ஷு வை கஸ்டம்ஸ் அதிகாரி பொன்வண்ணன் சேதப்படுத்தி விட அதற்க்கு பதிலாக அவர் வேறு பெறுவது, அதே போல முடிவிலும் இதே முறையை பயன்படுத்தி இருப்பது நம்பும்படி இல்லை என்றாலும் ரசிக்கும்படி உள்ளது.

படத்தில் லாஜிக் பல இடங்களில் உதைக்கிறது, அதுவும் சூர்யா அனாசியமாக அனைத்து பொருட்களையும் கடத்தி கொண்டு வருகிறார், மலேசியாவில் ஒரு சேசிங் காட்சி இருக்கும் அதில் விமான நிலையத்தில் இருந்து துரத்தி வருவது போல காட்சி, அப்போது சூர்யா உடன் அவரது பொருட்களை விட்டு விடுவார், ஆனால் திரும்ப அவரது பாஸ்போர்ட் எப்படி பெறுகிறார் என்று தெரியவில்லை, ஒருவேளை பேன்ட் பாக்கெட் லையே வைத்து இருக்கிறாரோ என்னவோ!

கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்கே இரண்டு கொடுமை திங்கு திங்குனு ஆடிச்சாம் அது மாதிரி வீட்டுல, கோலங்கள் சீரியல் ஆதி தொல்லை தாங்க முடியலைனு இப்ப தான் ஒரு பதிவு போட்டு புலம்பினேன். இங்க வந்தா வில்லன் குரலுக்கு டப்பிங் ஆதி தான். சீரியல் போலவே இதிலையும் கத்து கத்துனு காத்துறாரு. வில்லன் சேட்டு பையன் எனபதால் தமிழ் சரியா பேச தெரியாத ஆள் வேண்டும் என்று நினைத்த போது இவர் நினைவு வந்து இருக்கலாம் :-)))நன்றாக நடித்து இருக்கிறார்.ஆரம்ப காட்சிகளில் முக்கியத்துவம் இல்லாத மாதிரி தெரிந்து பின் வர வர நல்ல வாய்ப்பு அவருக்கு.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் நல்ல ஜாலியா படம் பார்க்க உத்திரவாதமான படம். படம் போர் அடிக்காம நல்லா போகுது. இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் மெதுவாக போவதாக ஒரு சிலர் கூறினார்கள் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

கொசுறு

இந்த படத்தை AVM சன் க்கு விற்று விட்டதை நினைத்து வருத்தப்படுவார்கள் என்று நினைக்கிறேன், விற்காமல் இருந்தால் இவர்களே நல்ல லாபம் பார்த்து இருந்து இருக்கலாம். முதல் முறையாக பழைமையான AVM நிறுவனம் தான் எடுத்த படத்தை இன்னொருவருக்கு விற்று இருக்கிறது.

இயக்குனர் கே வி ஆனந்த் ஒரு பேட்டியில் என்னை மசாலா இயக்குனர் என்று கூறாதீர்கள் என்று கூறி உள்ளார். மசாலா இயக்குனராக வெற்றி பெற்றதற்கு இவரது நண்பர்கள் வாழ்த்து கூறிய போது வருத்தப்பட்டதாக கூறி இருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியாவது லாஜிக் இல்லாமல் எடுத்ததாக கூற முடியுமா! என்று கேட்டு இருந்தார்.

ஆனந்த் சார் உங்கள் படம் சூப்பர்! அதில் சந்தேகமில்லை. நல்லா விறுவிறுப்பாக செல்கிறது, ஆனால் லாஜிக் என்று வரும் போது நீங்கள் கூறுவதை ஏற்க முடியலை.
ஒரு காலத்தில் 'கிராஜுவேட்' ஆக நமக்கெல்லாம் குறைந்த பட்சம் இருபது வயதுக்கு மேல் ஆக வேண்டி இருந்தது. இப்போதெல்லாம் அப்படி இல்லை. மிகக் குறைந்த வயதிலேயே 'கிராஜுவேட்' ஆகி விடுகிறார்கள். மழலையர் பள்ளியிலிருந்து (KG) முதல்நிலை பள்ளிக்கு 'கிராஜுவேட்' (primary school) ஆனாலும் அதற்கென ஒரு தனி பட்டமளிப்பு விழா.




இது வேறு யாரும் இல்லை. எனது செல்ல மகள். டிகிரி வாங்கி விட்டோம் என்று ஒரே பூரிப்பு.



இந்த கிராஜுவேட் மேலும் பல கிராஜுவேஷன் பெற வேண்டுமென்று மனதார வாழ்த்துவோம்.



நன்றி.


அனைத்து வளங்களும் பெற்று நிறைவாய் வாழ உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நட்பான பல வருசங்களே தப்பாகிப்போன என்னூரில் இரத்தங்களுக்கும், துப்பாக்கிச் சத்தங்களுக்கும் நடுவில் இருள்கிழிக்குமா ? என்ற கேள்விக்குறியோடு தமிழுக்கு விரோதி வருசம் பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.இதில் தமிழுக்கு வருசம் தை யா? சித்திரை யா ? என்ற வாதப்பிரதிவாதங்கள் வேறு.
யுகயுகமாய் புரியப்படாமலே இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. யுத்தத்தின் முடிவை யுத்தமே தீர்மானிக்கும் என்ற உண்மை.வரலாறுகள் அதைத்தானே சொல்கின்றன. இருந்தும் இரத்தப் பசி அடங்காமல் தலைவரித்தாடித் திரிகிறது புறநாநூற்றுப் பேய்கள் மனித மனங்களுக்குள்.
வரலாற்றில் இருந்து நாம் கற்கும் பாடம் யாதெனில் ,வரலாற்றில் இருந்து நாம் பெரிதாய் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.
ஜேர்மன் தத்துவஞானி  HEGEL { 1770 -1831 } 
பிறந்தது முதல் யுத்தமும் ,சமாதானமும் நித்தமும் மாறி,மாறி வந்து கடைசியில் இரத்தமுறைந்து பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என் தேசத்தை. எப்போதோய்ந்து போகுமோ இந்தத் துப்பாக்கிகளுக்கு நடுவிலான துயரவாழ்க்கை?????
{ படங்களில் காண்பது தம்பலகாமம் }

கருத்துகள் இல்லை: