வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02

Maanoothu Mandhayilae



Aathanga Marame



Kathalan kaatu vazhi



Then kizhaku



Edhukku ponddatti

"பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டுமானால், முதலில் மதவாதத்தை ஒழிக்கவேண்டும்" என்று நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு ஒற்றுமையாக இருந்தால் தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியம் ஆனால் பாரதிய ஜனதா போன்ற மதவாத கட்சிகள் நாட்டைத் துண்டாட நினைக்கின்றன. மதவாதத்தை ஒழிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்க இயலாது. மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சி மட்டும் தான் மத்தியில் ஆட்சியமைக்க தகுதியுடையது. அதனால் மக்கள் காங்கிரசுக்கு ஓட்டளிக்க ‌வேண்டும். தேர்தலை அமைதியாக நடத்த போதிய படை பலத்தை தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்‌ளோம்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

donkey

நாட்டுப்புறக் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. மூதாதையரின் குரல்கள் ஒளிந்திருக்கும் தொன்மையின் வசீகரம் நம்மை எளிதாக விழுங்கிவிடுகின்றன. கதை சொல்லுகிறவன் தோன்றித் தோன்றி மறைவான். புதிர்களோடு வாழ்வின் அனுபவங்கள் பிசுபிசுப்பாய் ஒட்டிக் கிடக்கின்றன. ரொம்ப எளிமையான சொல்லாடல்களும், கதைகளும் நவீன புத்திகளை சர்வசாதாரணமாக தாண்டிச் செல்கின்றன.

அறிவொளி காலத்தில் பேராசிரியர் மாடசாமி தொகுத்தளித்த இந்தக் கதைகள் எல்லாம் நம் பாரம்பரியத்தின் செல்வங்கள். இன்று அவைகளில் ஒரு கதையை கேட்போம்.

கழுதையும் குருவியும் நண்பர்களாம். இரண்டும் சேர்ந்து விவசாயம் செய்ய ஒப்பந்தமிட்டன.

ஒப்பந்தத்தில் ஆளுக்கொரு ஒரு உரிமை தரப்பட்டது. பயிரில் எந்தப்பகுதி யாருக்கு என்று தீர்மானிக்கும் முதல் உரிமை கழுதைக்கு. என்ன பயிரிடுவது என்று தீர்மானிக்கும் இரண்டாவது உரிமை குருவிக்கு.

ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. "விவசாயம் செய்ய ஆரம்பிப்போம். நண்பா! பயிரில் உனக்கு எந்தப் பகுதி வேண்டும்?" என்று குருவி கனிவோடு கேட்டது.

கழுதை விறைப்பாகச் சொன்னது. "பயிரின் கீழ்ப்பகுதி எனக்கு, மேல்பகுதி உனக்கு" என்று முதல் உரிமையை நிலைநாட்டிக் கொண்டது.

குருவி நெல்லைத் தேர்தெடுத்துப் பயிரிட்டது. கழுதைக்கு வைக்கோலும், குருவிக்கு நெல்மணியும் கிடைத்தன. கழுதை ஏமாந்தது.

அடுத்தமுறை கழுதை ஜாக்கிரதையாய்ச் சொன்னது. "இந்தமுறை மேல்பகுதி எனக்கு, கீழ்ப்பகுதி உனக்கு"

"சரி, சரி" என்று குருவி இணக்கமாய் ஒப்புக் கொண்டது. இந்தமுறை கடலை பயிரிட்டது. குருவிக்கு கடலையும், கழுதைக்குச் செடியின் இலைகளும் கிடைத்தன. ஏமாற்றத்தால் கழுதை தொங்கிப் போனது.

அடுத்தமுறை  கழுதை பதில் சொல்ல ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டது. இறுதியில், "மேல்பகுதி, கீழ்ப்பகுதி இரண்டும் எனக்கு. நடுப்பகுதிதான் உனக்கு" என்றது.

குருவி நமுட்டுச் சிரிப்போடு பயிரைத் தேர்தெடுத்தது. கழுதை இந்த முறையும் ஏமாந்து போனது.

குருவி எந்த பயிரை தேர்தெடுத்தது?

சரி... நீங்கள் கழுதைப் பக்கமா... குருவிப் பக்கமா?

இந்தக் கதை எதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது?

கதைகள் முடிந்தாலும், முடியவில்லை தானே?

 

சொல்லாமலே யார் பார்த்தது!! சொல்லத்தான் நினைக்கிறேன்!!!

என்ன பாட்டா கிளப்பறேன்னு பார்க்கிறீர்களா? என்ன செய்வது?

"இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாயோ?"- என்பது போல சொல்லவந்ததைச் சொல்லி விடுகிறேன்!

பதிவரா வந்து என்ன சாதித்தோம்?சாட்டில் ஒரு நண்பர் கேட்டார்" எதுக்காக ப்ளாக் எழுதுகிறீர்கள் ? என்ன யூஸ்?" என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வது? பதிலும் கேள்வியும் தகவல்களும் உலகம் முழுக்க வலை முழுக்க பரவிக்கிடக்கின்றன!!

தேவையானதை பதிவர் தொகுக்கிறோம்!! கடை போலத்தான்!!  தேவையானவர் ருசிக்கிறார்.

அவ்வளவுதான்!

ஆனந்தவிகடன் நான் விரும்பிப் படிக்கும் இதழ்களில் ஒன்று!! எல்லோருக்கும் புடிக்கும்னு நினைக்கிறேன்!! குமுதம், விகடனில் எழுத என் அப்பாவுக்கு ரொம்ப ஆவல்!! நிறைய எழுதியிருக்கிறார்!!

அப்பொழுதிலிருந்தே எழுத்துமேல் எனக்கு ஆசை!! ஆனால் தொடக்கம் ஒன்று வேண்டுமே!

கல்லூரி மலரில் என் கவிதைகள், ஓவியங்கள் வந்துள்ளது!! 

அதன் பின் எழுதும் ஆர்வம் இல்லை!! ப்ளாக் தான் நான் எழுத வாய்ப்பாக அமைந்தது!!

எழுத வந்தவுடன் ஆதரவளித்த பதிவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!!

அதன் பிறகு வலைச்சர ஆசிரியர்!!  எழுதும் ஆவலைத் தூண்ட இவை போதாதா?

இன்று யூத் விகடன்!!! யூத் விகடனில் முதல் பதிவை கண்ட  நம் பதிவர்கள் சந்தோசத்தில் குளித்தார்கள்!!வலையுலகமே திருவிழாக்கொண்டு கொண்டாடிமகிழ்ந்தது!! அது புதிய பதிவர்களுக்கு தரமான பதிவுகள் எழுத யூத் விகடன் தந்த உற்சாக மருந்து!!

அதுவே பதிவர்களுக்கு சந்தோசத்தை அள்ளி அள்ளித் தந்தது!! தந்து கொண்டு இருக்கிறது! ஊக்கம் இருந்தாத்தானே எழுத ஒரு ஆர்வம் வரும்!!

அந்த விதத்தில் யூத் விகடனுக்கு நன்றி! நன்றி நன்றி!!

நானும் இப்பப் போடுவோம், அப்பப்போடுவோம் என்று காலம் கடத்திவிட்டேன்.. இப்போதுதான் நேரம் வந்தது!!

லேட்டா எழுதினாலும் லேட்டஸ்டும் சேர்த்து எழுதுவோம்!! என்ன நான் சொல்வது?

யூத் விகடனில் என் பதிவுகள் இதுவரை 9 ஒன்பது வந்து உள்ளது!!

எனக்கு மகிழ்ச்சிதான்!! அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!

1.இந்தியா அமெரிக்காவை முந்துகிறது! ----http://youthful.vikatan.com/youth/bcorner2.asp

2.தலை நிமிர வைத்த இந்தியன் ------http://youthful.vikatan.com/youth/bcorner3.asp
3.தண்ணீர் தண்ணிர் ---http://youthful.vikatan.com/youth/bcorner3.asp
4.இளைஞர்களும் தவறுகள் 10 ம் ---http://youthful.vikatan.com/youth/bcorner3.asp
5.மரம் ஒரு அதிசயம் ---http://youthful.vikatan.com/youth/bcorner3.asp 6.மரியாதைக் கொலையும் மடியும் மங்கையரும்!
7.வன்முறை இளைஞர்களும் நாமும் ---http://youthful.vikatan.com/youth/bcorner.asp

8.மனைவியை மயக்கும் மந்திரங்கள்--http://youthful.vikatan.com/youth/devanmayamstory23032009.asp

9.சினேகிதியை வசீகரிக்க உங்கள் அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்!http://youthful.vikatan.com/youth/dhevanmayamstory02042009.asp

என் பதிவுகளை வெளியிட்ட யூத் விகடனுக்கு நன்றிகள் பல!!!

தமிழ் இதழ்களில் வருவதைவிட சிறப்பான ,தரமான பதிவுகளை நம் வலையுலக அன்பர்கள் தந்துகொண்டு இருக்கிறார்கள்!! என்பது இன்றைய தமிழ் இதழ்களைப் படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்!!

பதிவர்கள் தரமான பதிவுகள் நிறையத்தருகிறார்கள்!!திறமை மிகுந்தவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை!

நான் பொறாமைப்படும் பதிவர்கள் நிறய இருக்கிறார்கள்! அவர்களிடமிருந்து நான் தினமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்! ஏகப்பட்ட துரோணர்களுக்கு

 "நான் கட்டைவிரல் கொடுக்காத ஏகலைவன்!"

கருத்துகள் இல்லை: