குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி இன்று மூன்று நாள் பயணமாக குவைத் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்திய அரசு சார்பில் உயர் தலைவர் ஒருவர் குவைத் வருகைத் தருவது 28 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.
கல்வி, தொழிற்நுட்பப் பங்கீடு முதலியவற்றில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் குடியரசு துணைத்தலைவர் முன்னிலையில் கைச்சாத்திடப்படும் என்று தெரிகிறது.
மேலும், கடலோரப் பாதுகாப்பு, தீவிரவாதத் தடுப்புவழிகள், எண்ணெய்வளம் குறித்தும் ஹமீத் அன்சாரி குவைத் அரசுடன் பேச்சுகள் நடத்துவார் என்று அவர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்க சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கித் தங்கள் அறுபது நாட்கள் நடைப்பயணத்தைத் தொடங்கிய மாணவர்கள் வின்சர் டெற்ரோய்ட் எல்லையினைக் கடந்து அமெரிக்காவினுள் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 3, பிற்பகல் 1 மணிக்கு சென்றுள்ளனர். இலங்கைத் தீவிலே சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் மனித அவலத்தை ஒபரா வின்ப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி அந் நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்கள் சிலர் இந் நடைப்பயணத்தினை கடந்த மாதம் 4ம் திகதி ஆரம்பித்திருந்தனர்.
வன்னி மண் என்றுமே கண்டிராத ஒரு அவலம் தற்போது நடந்து விடுமோ என்ற நிலையில் இருக்கின்றது. பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களை அழித்து தமது இராணுவ வெற்றியை அடையும் வெறியில் கர்சிக்கிறது சிங்கள அரசு. இதனை தடுத்து நிறுத்தி, ஒரு போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வரும் வரை ஓய்வு ஒளிச்சலற்ற, தொய்வு அற்ற போராட்டங்கள் பல நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில் லண்டனில் பாராளுமன்றத்தை சூழ பல்லாயிரகணக்கான தழிழ் மக்கள் அலை அலையாக திரண்டவண்ணம் உள்ளனர்.

இணையத் தளங்களில் உலா (surfing) வரும்போது எவையெல்லாம் நல்ல தளங்கள், எவை கேடு விளைவிப்பவை என்பதை நாம் அறியோம்.
ஏதேனும் தெரிந்திராத, அறிந்திராத (unknown) தளத்தைப் பார்வையிடும்போது எப்போதுமே ஒரு பாதுகாப்பில்லாத தன்மையை உணர்ந்திருப்போம்.
ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் நமது பார்வைக்கு நல்ல தளங்களாகத் தெரிகின்றன. ஆனாலும் அவற்றின் உள்ளே குறும்புசெய்யும் விசமத்தனமான, கேடு விளைக்கக் கூடிய நிரல்களை எழுதிப் பொதிந்திருப்பார்கள்.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குற்றம் செய்வபவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். அதே போல உலவியின் நிரலில் உள்ள பிழைகளை அறிந்திருப்பவர்கள் (hackers), அதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதற்கேற்ற எதிர்நிரல் (malicious code) ஒன்றை எழுதி அதை இணையத் தளத்தில் கோர்த்திருப்பார்கள்.
அந்த குறிப்பிட்ட சில தளங்களில் நாம் உலா வரும் வேலையில், அவை நமது கணினியில் பாதகம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும். ஏதேனும் குற்றச் செயல்களில் அந்த நிரல்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் அறியோம்.
நம்மிடம் நல்ல வைரசு எதிர்ப்புத் தொகுப்பான் (anti virusl) இருந்திருக்கும். நாமும் அதை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருப்போம். எனினும் சில நேரங்களில் அதுவும் கையை விரித்துவிடும்.
உலாவரும்போது பாதுகாப்புத் தன்மையை (security) அதிகரிப்பதற்காகவே சிறப்புக் கருவிகள் (tools) சிலவற்றை இங்கே காண்போம்.
மிகப் பயங்கரமான தளங்களை நாம் உலவ முயற்சித்தால் இந்தக் கருவிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து இப்போது தளத்தைப் பார்வையிடலாகாது - அதில் கேடுவிளைவிக்கக் கூடிய ஆபத்து உள்ளது என சிவப்பு அறிக்கை (red alert) விடும்.
நல்ல தளங்கள் எவை? கெட்ட தளங்கள் எவை - என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்திடலாம்.
நம்பகமான உலாவலுக்கு இவற்றை நாளும் பயன்படுத்தலாம்.
உலவியில் தள முகவரியைத் தட்டி Enter அழுத்திய உடனேயே எச்சரிக்கை செய்திடும் கருவிகள் இவை.
இந்தக் கருவிகள் பற்றிய மேலதிக விபரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தித் தெரிந்துகொள்ளவும்.

McAfee Site Advisor
LinkScanner Online
Norton Safe Web
Anti-malware tool by Google
Web Of Trust
தொடர்புடைய சுட்டி :
WOT (Web Of Truest) பற்றி மேலதிக தகவல்களுக்கு இந்த Firefox உலவியின் பாதுக்காப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க பதிவைக் காண்க.
ஒளிக்களஞ்சியம் :
Windows Vista Vs Ubuntu Linux
டாடாவின் நானோ கார் ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதர வரிகள் எல்லாம் சேர்த்தால் ரூ.ஒரு லட்சத்தை விடவும் கொஞ்சம் அதிகம் வரும் என்று சொன்னாலும், அதன் எக்ஸ் ஃபேக்டரி விலை ரூ. ஒரு லட்சம் தான். ஆனால் அதைவிடவும் அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் ஒன்று இந்த வகை நாய். ' பிரஞ்ச் மஸ்டிப் ' என்ற இந்த வகை நாய் குட்டிகளில் விலை சந்தையில் ரூ.1,16,000 க்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.நன்றி : தினமலர்
சிறிலங்கா மிக மோசமான இனப்படுகொலை ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் மக்கள் தன்னிச்சையாக பேரெழுச்சி கொள்ளத் தொடங்கியுள்ளனர். இன்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்பாக மக்கள் அணிதிரண்டுள்ள அதேவேளை, பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டுள்ளதாக அறியவருகின்றது. இந்தியாவும், சிறிலங்காவும் கூட்டாக இணைந்து மேற்கொள்ளும் படுகொலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக