வீதியால் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அமைதியாகப் பாராளுமன்றத்தின் முன்பாகத் தொடங்கிய ஊர்வலம் யாராலும் கவனத்தில் கொள்ளப்படாததால் ஆவேசம் அடைந்த இளையோர்கள் ஒஸ்லோவின் முக்கிய வீதியில் அதாவது பாராளுமன்ற வீதியில் குதித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஒஸ்லோ நகர முக்கிய பாதை எந்தவிதமான போக்குவரத்தும் நடைபெறமுடியாதவாறு தடைப்பட்டது. பேரணி நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறையினர் மக்களைக் கலைந்து செல்லுமாறு கூறியும் யாருமே அசையாது அந்த வீதியில் அமர்ந்து விட்டனர்.
காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசப்போவதாக மிரட்டியும் தமிழ் இளையோர்கள் பயப்படவில்லை. பேரணியை அடக்கமுடியாமல் காவல்துறையினர் ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டதாகவும் அறியக்கூடியதாக இருந்தது. மிகக்குறுகிய நேரத்தில் அறிவித்தல் விடுத்தும் கிட்டத்தட்ட 1500 தமிழ் மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தள்ளனர்.
தமிழ் இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் தெரிவிக்கையில் அமைதிவழியில் இனிமேல் போரடி எந்த விதமான பிரயோசனம் இல்லையென்றும் எமது உணர்வை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லையென்றும் கூறினார் ஆகவே தமிழர்கள் தொடர்ந்தும் இப்படியான கவனயீர்ப்புப் போரட்டங்களை மேற்கொண்டால் மட்டுமே ஊடகங்களும் திரும்பிப்பார்ப்பதாகக் கூறினார.;
இதைத் தொடர்ந்து பேரணியில் சென்ற சில இளையோர்கள் E18 என்ற ஐரோப்பிய மத்திய வீதியையும் தடைப்படுத்த முயன்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் பின்பு சில நிமிடங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்ப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்களால் கூறப்பட்டது.
இன்றைய பேரணி பற்றிய செய்திகள் உடனடியாக எல்லா நோர்;வேஜிய ஊடகங்களிலும் வெளிவந்திருந்தமை கூறப்படக்கூடிய விடயமாகும். அனைத்து நோர்வேஜிய செய்தித் தளங்களிலும் பேரணி பற்றிய செய்திகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
ஈழத்தமிழ் மக்களின் அவலத்தை வெளியுலகுக்கு எடுத்து விளக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடான கட்டாரில் நேற்று (திங்கட்கிழமை) கறுப்புக்கொடி, மற்றும் சுவரொட்டிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மக்களின் அவலத்தை கட்டார் அரசுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தி சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வன்னியில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2:00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவை கருதி சில வேளைகளில் காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்பதால் தமிழ் உறவுகள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் மக்கள் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஆரம்பித்துள்ள தன்னெழுச்சிப் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிகளவிலான தமிழ் மக்கள் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் லண்டனில் ஆரம்பமான தமிழ் மக்களின் போராட்டமானது தொடர்ந்தும் கவலை தோய்ந்த எழுச்சியுடன் நடைபெறுகின்றது.
வயது வேறுபாடின்றி மக்கள் அலை அலையாக வந்த வண்ணமுள்ளனர்.
மக்கள் அமர்ந்துள்ள மையப்பகுதியை சூழ காவல் துறையினர் ஒர் வலயமிட்டு மேலும் மக்கள் அங்கு சேர்வதை தடுக்க முயன்ற போது , மக்கள் காவல் துறையினரின் வலயத்துக்கு அப்பால் அமர்ந்து கொண்டனர்.

மாபெரும் மனிதப்பேரவலத்திற்கான சாத்தியம் ஒன்று வன்னியில் தோன்றியுள்ள செய்தி அறிந்தவுடன் பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் லண்டனின் மையப்பகுதி நோக்கி வரத் தொடங்கி விட்டனர்.
இது பற்றிக் கருத்து தெரிவித்த ஒருவர் "தை 31ல் கூடியதுபோல் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு இவ்விடத்தில் கூடினால் பிரித்தனியா அரசு நிட்சயம் எமது கோரிக்கையை ஏற்று , வன்னி மக்களை காத்திடும் " என்று உணர்ச்சி பூர்வமாகக் கூறினார்.
இது பற்றிக் கூறிய மேலும் ஒருவர் " இது ஒரு இக்கட்டான சூழ்நிலை , இதில் வாதங்கலுக்கு இடமில்லை , அவலப்படும் மக்கள் காக்கப்படுவதுதான் முக்கியம்." எனக் கூறியதோடு மக்கள் அனைவரையும் லண்டனின் மையப்பகுதி நோக்கி வருமாறு அழைத்தார்.

உலக வரலாற்றில் இதற்கு முன்னும் பல பாரிய மனித படுகொலைகள் நடைபெற்றுள்ளன. ருவண்டா படுகொலைகள் சூடான் படுகொலைகள் என பட்டியல் இடலாம். இவை நடக்கும் என்பதை உலகம், அவை நடக்கும் முன்னரே நன்கு அறிந்திருந்தது. ஆனாலும் அவை தடுக்கப்படவில்லை. அப்படுகொலைகள் பின்னால் விசாரிக்கப்பட்டன. அவலப்பட்ட மக்கள் பின்னர் சாட்சியம் அளித்தனர். இந்த பட்டியலில் நம் இனமும் சேர்ந்துவிடுமா ? அல்லது உலகப் பந்தில் வாழும் 80 மில்லியன் தழிழ் மக்களிடம் அதனை தடுத்து நிறுத்தும் சக்தி உள்ளதா ? என அங்கு கூடியுள்ள மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இன்று இந்த நிலையில் உலகின் திக்கெட்டும் வாழும் தழிழர்கள் தாம் வாழும் நாடுகளில் தம்மாளான முழு அளவிளான போராடடங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அப்போராட்டங்கள் ஒரு யுத்த நிறுத்ததம் என்ற தற்போதைய இலக்கை அடையும் வரை தொடரப்படவேண்டும். ஓய்வு ஒழிச்சல் அற்ற , தொய்வு அற்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற வைராக்கியத்தோடு மக்கள் குளிரையும் பொருட்படுத்தாது அமர்ந்துள்ளனர்.



நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நம்ம சகா ஒருத்தர் கேட்டிருந்தார். அதன் பின்புதான் யாருக்கு வாக்களிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினேன். இதுவரை இரண்டு முறை மட்டுமே வாக்களித்திருக்கிறேன். இரு முறையும் உதய சூரியனுக்கே..
பரிசல் ஸ்டைல்ல சொன்னா ரொம்ப ஃபார்மலா இருக்கில்ல? சரி. இந்தப் பதிவு எதுக்குன்னா, யார் யார் என்ன என்ன வாக்குறுதிகள் அளித்தால் அவர்களுக்கு நான் வாக்களிப்பேன் என்று சொல்லவே. ஸ்டார்ட் மீஜிக்..
1) காங்கிரஸ்: சஞ்சய 2013ல (எப்படியும் தேர்தல் வரும்னு தோணுது பாஸ்) எம்.பி ஆக்குவோம்னு சொல்லுங்க. என் ஓட்டு உங்களுக்குதான்.
2) திமுக: அடுத்த தேர்தலில் உதயநிதி, அறிவுநிதி, ***நிதிகளுக்கு சீட்டு கிடையாது என்று சொல்லுங்கள்
3) பாமக: தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸூடன் சேர மாட்டோம் என்று சொல்லுங்கள். என் வீட்டில் இருக்கும் மூனு ஓட்டும் உங்களுக்குத்தான்
4) கம்யூனிஸ்ட்: மன்னிக்க தோழரே, ஜெவை விட்டு வாங்க. யோசிக்கலாம்.
5) தேமுதிக: இனிமேல் விஜய்காந்த் நடிக்க மாட்டார் என்று சொன்னால் யோசிக்கலாம். கவனிக்க, யோசிக்கலாம்.
6) மதிமுக: தேர்தலில் நின்னா சத்தியமா என் ஓட்டு உங்களுக்குத்தான்
7) சமக: அதாங்க சரத்குமார் கட்சி. நீங்க ஏதாவது பேச வாய் திறந்திங்கன்னா என் ஓட்டு உங்களுக்கு இல்லை. அப்படியே மூடிகிட்டு இருங்க.
8) அ.இ.நா.ம.க: கட்சி பேர மாத்தறன்னு கார்த்திக் சொல்லட்டும், என் ஓட்டு மட்டுமில்ல என்னால முடிஞ்ச 20 ஓட்டும் அவருக்குத்தான், டவுட்டேயில்ல.
9) பா.ஜ.க: ஹிஹிஹி..
10) ஜனதா தளம்: ஓட்டு போடறது இருக்கட்டும். ஞாபகம் வச்சிருந்து அந்தக் கட்சி பேர சொல்லியிருக்கேன் இல்ல. அதுக்காக என்னைப் பாராட்டி தமிழ்மணத்திலும் தமிலிஷிலும் ஒரு ஓட்டுப் போட்டு போங்க.
ஆர்க்குட் பக்கமே தலைகாட்ட முடியவில்லை. போக மாட்டேன் என்று அங்கு அவர் உட்கார்ந்து அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். முக்கிய இணையப் பக்கங்கள் எங்கு போனாலும் நானே வருவேன் என்று பாடியபடி தோன்றுகிறார். திகிலாய் இருக்கிறது. வெற்றிக்கு அடையாளமாய் இரண்டு விரல்களை நீட்ட வேறு செய்கிறார். திரும்பத் திரும்ப முகத்தைக் காட்டி நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கும் உத்தி இது. செல்போன்களையும் விடப் போவதைல்லையாம். மக்கள் மனதைத் தவிர அனைத்து இடங்களையும் பிடித்துக் கொள்வது என்ற முடிவு போலும். ஏன் இந்தக் கொலைவெறி. யார் அவர் எனத் தெரிகிறதா?
000
சென்ற வாரம் மதுரைக்குப் போயிருந்தேன். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் அனைத்துப் படங்களின் டி.வி.டிக்களும் கிடைக்கும். ஒரு கடையில் போய் வாரணம் ஆயிரம் கேட்டேன். மேலும் கீழுமாய்ப் பார்த்து "சார் போங்க சார்" என்றார் கடைக்காரர். கொஞ்சம் தள்ளி இன்னொரு கடையில் போய் கேட்டேன். "வேறு எந்தப் படம் என்றாலும் கேளுங்கள்... அந்தப் படம் கிடைக்காது" என்றார்கள். இன்னொருவர் "எங்கு வந்து எதைக் கேட்கிறீர்கள்" என்று அதிர்ச்சியோடு பார்த்தார். "சார்... இங்க நிக்காதிங்க.. போயிருங்க... ஒங்களுக்கும் நல்லதில்ல... எனக்கும் நல்லதில்ல... தொடர்ந்து கடை நடத்தணும்" என்றார். அப்புறம்தான் எனக்குப் புரிந்தது. உங்களுக்குப் புரிந்ததா? ஏன் இந்தக் கொலைவெறி?
000
இப்போது இரண்டு வாரங்களாய் பார்க்கிறேன். நான் எந்தப் பதிவு செய்தாலும் தாறுமாறாய் தமிழ்மணத்தில் எதிர் ஓட்டுக்கள் விழுகின்றன. நமது பார்வைகள், கருத்துக்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என புரிந்து கொண்டேன். அது அவர்களின் உரிமை என்பதும் சரிதான். ஆனால் குழந்தைகள், நாட்டுப்புறக் கதைகள் என எதைப் பற்றி எழுதினாலும் அந்த திருவிளையாடல்கள் தொடர்கின்றன. நேற்று எழுதிய ஜப்பானியப் பழங்கதை பதிவிட்டு ஒரு மணிநேரம் கழித்துப் பார்த்தால் 0/5 என்று ஓட்டுக்கள் விழுந்திருந்தன. அந்தக் கதையில் என்ன பிடிக்காமல் இருக்கிறது எனத் தெரியவில்லை. தமிழ்மண நட்சத்திரம் ஆகியதிலிருந்துதான் இப்படியான ஆதரவுக்கரங்கள் நீட்டப்படுகின்றன. ஏன் இந்தக் கொலை வெறி?
000
நேற்று இரவு இணையத்தில்தான் இந்தக் குட்டிக் கதையைப் படித்தேன். ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருடைய ஒரு கண் நன்றாக இருக்கிறது. இன்னொரு கண் அரைகுறையாய் மூடி பூ விழுந்து போய் இருக்கிறது. தன்னை உள்ளது உள்ளபடியே, தனக்கு திருப்தி அளிக்குமாறு ஓவியம் வரைய வேண்டும் என்று அரசன் ஓவியர்களுக்கு அழைப்பு விடுக்கிறான். மூன்று ஒவியர்கள் முன்வருகிறார்கள். ஒருவன் உள்ளபடியே வரைந்து கொடுக்க, அரசன் தன்னை இப்படி அசிங்கமாக வரைந்து விட்டானே என்று அவனுக்கு மரணதண்டனை கொடுக்கிறான். இன்னொருவன் இரண்டு கணகளையும் முழுமையானதாய், அழகானதாய் வரைந்து கொடுக்கிறான். தன்னை பரிகாசம் செய்துவிட்டதாக அவனுக்கும் மரணதண்டனை அளிக்கிறான் அரசன். ஏன் இந்தக் கொலை வெறி? இந்த நிலையிலும் மூன்றாம் ஓவியன் அரசனைப் படம் வரைந்து கொடுத்து பாராட்டுப் பெற்று விடுகிறான். எப்படி எனத் தெரிகிறதா?
*


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக