05.04.2009. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை இராணுவத்தினர் முழுமையாக மீட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்பு ஊடகநிலையம் அறிவித்துள்ளது. இராணுவத்தின் 53வது மற்றும் 58வது படைப்பிரிவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக ஊடகநிலையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் சென்றிருப்பதாகவும், பாதுகாப்பு வலயப் பகுதியே இன்னமும் மீட்கப்படவேண்டியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான தீபன், துர்க்கா, விதுஷா, நாகேஷ் மற்றும் கடாஃபி ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாகக் களநிலைத் தளபதிகள் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் தேசிய [...]

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - முஸ்லிம் லீக், வேலூர் மக்களவைத் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதை நாம் வரவேற்க வேண்டும். முஸ்லிம் லீக்கில் அடித்தட்டு முஸ்லிம்களின் பங்கேற்பு குறைவு என்பதும், அக்கட்சியின் முக்கிய முடிவுகளை தென் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்களே எடுக்கிறார்கள் என்பதும் அக்கட்சி திருத்திக் கொள்ள வேண்டிய பண்புகள். மனித நேய மக்கள் கட்சியும், இந்திய தேசிய மக்கள்

பெரியார் திடலில் நடந்தது என்ன?
இருவருக்கு 15 நாள் சிறை
நாடாளுமன்றத் தேர்தலும் ஈழப் பிரச்சினையும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (4.4.2009) மாலை 7.30 மணிக்கு உரையாற்றினார். ஏராளமானவர்கள் உரை கேட்கத் திரண்டு இருந்தனர்.
இரவு 8 மணி அளவில் வீரமணி ஒழிக! உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்! என்று கத்திக் கொண்டு ஒருவர் மேடையை நோக்கி ஓடி வந்தார். அவர் பின்னால் இன்னொரு வரும் ஓடி வந்தார். அந்த இருவரையும் கூட்டத்தில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர். அவரைத் தொந்திரவு செய்யாதீர்கள், முறைப்படி காவல்துறையிடம் ஒப்படையுங்கள் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர். அதன்படி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டு, காவல்துறையினர் வந்தபின் இருவரும் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டனர்.
முறைப்படி புகாரினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கொடுத்தார்.
உண்மை இவ்வாறு இருக்க இரு பார்ப்பன ஏடுகள் வீரமணியிடம் கேள்வி கேட்டதாகவும், அவர் பேச்சை விமர்சித்ததாகவும் அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தொண்டர்கள் அவர்களைத் தாக்கியதாகவும் செய்திகளை வெளி யிட்டுள்ளன. அவர்கள் சொல்லுகிற படியே பார்த்தாலும், சங்கராச்சாரியார் பிரசங்கம் செய்யும் கூட்டங்களில், அவாள் ஏடுகளில் நாள்தோறும் வெளிவரும் (இன்றைய நிகழ்ச்சிகள் - engagements) பகுதிகளில் ஆன்மிகப் பிரச்சாரக் கூட்டங்களிலும் கேள்விகளை மற்றவர்கள் கேட்கலாமா? அதனை வரவேற்பார்களா? என்று தெரிந்து கொள்ள தமிழர்கள் விரும்புகின்றனர்.
கடைசிச் செய்தி
குற்றவாளிகள் இருவரும் மாஜிஸ்டிரேட் உத்தரவுப்படி புழல் சிறையில் 15 நாள்கள் அடைக்கப்பட்டனர்.
------------------"விடுதலை" 5-4-2009

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக