திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-03

ஆஸ்திரேலியாவின் பதிவு செய்யப்பட்ட 117 ஆண்டு கால வரலாற்றில் கடந்த 7 ஆண்டுகளாக மர்ரே டார்லிங் நதி படுகையில் தொடரும் வறட்சி அந்த பகுதியின் விவசாயத்தை பெருமளவில் பாதித்துள்ளது. சில இடங்களில் சராசரி மழைபொழிவு 1991 ஆண்டிற்கு பிறகு இல்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

பரப்பளவு : சுமார் 1059,000 ச.கீ.மீ
ஆஸ்திரேலியாவின் பரப்பளவில் : 14%
மர்ரே நதியின் நீளம் : 2530 கீ.மீ
டார்லிங் நதியின் நீளம்: 2740 கீ.மீ

ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பியர்கள் மர்ரே டார்லிங் நதி படுகையில் தங்கள் நாட்டு முறைபடி விவசாயம் செய்ய அந்த பகுதியிலுள்ள சுமார் 15 பில்லியன் மரங்களை அழித்து சிறிய, பெரிய அணைகளை கட்டி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.
மரங்களற்ற நிலங்கள்
வருடங்கள் செல்ல செல்ல இயற்கை தனது தீர்ப்பை (மரங்கள் இல்லையேல் மழை இல்லை, மழை இல்லையேல் மனிதன் இல்லை) எழுத ஆரம்பித்துள்ளது. வறட்சியின் காரணமாக நிலமும் உவர்நிலமாக மாற ஆரம்பித்துள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் தங்களின் வாழ்நாள் உழைப்பான கால்நடைகளையும், பண்ணைகளையும் விற்க வேண்டிய நிலைமையில் உள்ளனர். சிலர் தங்களது அரிய பழமரங்களை அழித்து அவசியமானதை மட்டும் வைத்துள்ளனர்.

தமிழ் நாட்டின் பரப்பளவு: 130,058 ச.கீ.மீ
காவேரி நதியின் நீளம் : 765 கீ.மீ

இரு பருவ மழை. சமயத்தில் கோடைமழை. ஆனாலும் காவிரி டெல்டா பகுதி நீர் பற்றாக்குறையில் தான் இருக்கிறது. இருப்பினும் நீர் அதிகம் தேவைப்படும் நெல்லை மட்டுமே பயிரிடுகிறார்கள். (மர்ரே டார்லிங் நதி படுகையில் நெல் விவசாயம் 98% குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.) பண்ணைகுட்டைகள் அமைத்து நீர் சிக்கனத்தையும், குறைந்த அளவிலாவது மரங்களை வளர்த்து மழையையும் பெற மக்கள் முயற்சித்தால் நிலைமை மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இல்லையேல் இயற்கை தீர்ப்பு எழுத ஆரம்பிக்கும் போது "பணத்திற்கும் பொருட்களுக்கும் இயற்கையிடம் மதிப்பு இல்லை" என்பதே காலதேவன் சொன்ன உண்மை.

உலக அளவில் சிந்திப்போம். உள்ளூர் அளவில் செயல்படுவோம்.
Source: National Geographic April 2009
வெய்யிலில் பறவைகள் படும்பாடு!

நமக்கு வெய்யில் பழகிவிட்டது. அதற்குத் தகுந்தாற்போல நடந்துகொள்வோம்.

பறவைகள் என்ன செய்யும்?

இங்கே படத்தில் ஒரு பறவை தண்ணீரை எப்படிக் குடிக்கிறது பாருங்கள்.

வீட்டு மொட்டை மாடியில் வாய் அகன்ற பானையில் தண்ணீர் வைத்தால் என்ன?

போகின்ற வழிக்கு அல்லது இருக்கும் வழிக்கு அது புண்ணியம் ஆகாதா?

=================================================

வாழ்க வளமுடன்!
இன்னும் சிறப்பாக எழுத ஊக்க மருந்து தேவை! ஊக்க மருந்து (Tonic) உங்களுடைய பின்னூட்டம்தான்! காசா? பணமா? ஒரு வரி எழுதிவிட்டுப் போங்கள் இலவசம்தானே மனிதனின் முதல் ஊக்க மருந்து:-)))
Photobucket

நகர் படங்கள் என்றால் அசையக் கூடிய விதத்தில் அமைந்துள்ள அனிமேட்டட் .gif கோப்புகளைக் குறிக்கிறது.

அசையாத நிழற்படங்களை .jpg, .png என்ற வடிவங்களில் சேமித்திருப்போம்.

ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான .jpg படங்களை அடுத்தடுத்து இணைத்து உருவாக்கப்பட்டதே .gif எனப்படும் புதிய நுட்பம் ஆகும்.

இந்த .gif கோப்புகளை உருவாக்க

http://www.benetonfilms.com/bmg.zip

http://www.whitsoftdev.com/files/unfreez.zip

போன்ற இலவச மென்பொருட்களைத் துணைக்கு அழைக்கலாம்.

சரி விசயத்திற்கு வருகிறேன்.

எப்படியோ நான் ஒரு அசையும் / நகர்படத்தை உருவாக்கிவிட்டேன். அல்லது இணையத்தில் இருந்து இறக்கிவிட்டேன்.

அதை வலைப்பூவில் பொதிய வலைப்பூவின் எடிட்டரில் Add Image என்னும் பட்டனைக் க்ளிக் செய்து எனது .gif கோப்பை picasa வில் ஏற்றினேன்.

அது தந்த Coding எனப்படும் சிறிய html நிரலானது வலைப்பூவின் எடிட்டரில் தானக அமர்ந்தது. இது வரை சரிதான். ஆனால் எனது கணினியில் நான் ஓட்டிப் பார்த்து மகிழ்ந்த .gif ன் அனிமேசன் வலைப்பக்கத்தில் வரவில்லை. அது அசையாத ஸ்டாட்டிக் படமாகக் காட்சியளித்தது.

இதற்கு என்ன தீர்வு. அசை படத்தை அப்படியே வலைப்பக்கத்தில் காட்டுவதற்கு என்ன வழி?

தீர்வு :

.gif எனப்படும் அசைபடங்களை Picasaவில் வேண்டாம். அதற்கு மாற்றாக
Photobucket என்னும் சிறப்புத் தளத்தில் ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து அங்கே ஏற்றுங்கள். அங்கே ஒரு சிறிய html நிரலினைக் கொடுப்பார்கள். அதைக் காப்பி செய்து bloggerன் Edit html என்கிற பகுதியில் paste செய்துவிடுங்கள்.

செயல்முறை விளக்கம் - படங்களுடன் :

1: Photobucket தளத்தில் உள் நுழையவும்
2. உங்கள் கணினியில் இருக்கும் .gif கோப்பினை ஏற்றவும்.
3. ஏற்றப்பட்ட படத்தின் மேலேயுள்ள share சுட்டியை அழுத்தவும்

4. அந்தத் தளத்தில் கிடைக்கும் html நிரலைக் காப்பி செய்யவும்.
5. உங்கள் வலைப்பூவின் எடிட்டரில் Edit Html ஐ அழுத்தி அங்கே Paste செய்யவும்.
இப்படிச் செய்ததால் கிடைத்த fire heart என்னும் அசைபடத்தையே இந்தப் பதிவின் ஆரம்ப வரிகளுக்கு மேல் காண்கிறீர்கள்.

சென்னை: தமிழக அரசு அனுப்பி வைத்த உணவுப் பொருட்கள் வன்னிப் பகுதிக்கு இதுவரை போகவே இல்லையாம். இலங்கை அரசு இந்த உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை அனுப்பவே இல்லை என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த உணவுப் பொருட்கள் என்ன ஆயின, எங்கே போயின என்று யாரிடமும் பதில் இல்லை.

இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் வி.சுரேஷ் கூறுகையில், இப்போது கூட இலங்கையில் தமிழர்கள் பட்டினிச் சாவை சந்தித்து வருகின்றனர்.

இடம் பெயர்ந்து அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் 1.9 லட்சம் தமிழர்களுக்காக தமிழகத்திலிருந்து உணவு உள்ளிட்டவை அனுப்பப்பட்டன. ஆனால் இவை இதுவரை அங்கு போய்ச் சேரவில்லை. அவை என்ன ஆயின, எங்கு போயின என்று கூட யாருக்கும் தெரியவில்லை.

இதை நாங்கள் சொல்லவில்லை, சமீபத்தில் உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்ததா என்பது குறித்து கணக்கெடுத்த இலங்கைக்கான ஐ.நா. மனிதாபிமான நடவடிகைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையே இதைக் கூறுகிறது.

தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில் இதுவரை 394 டன் உணவு மட்டுமே போய்ச் சேர்ந்துள்ளது. மற்றவை என்ன ஆயின என்று தெரியவில்லை. அங்கு மாதத்திற்கு 3000 டன் உணவுப் பொருள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களை வன்னிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டது இலங்கை அரசு. சமையல் எண்ணை உள்ளிட்ட எந்த அத்தியாவசியப் பொருட்களையும் அது அனுப்பக் கூடாது என தடை விதித்துள்ளது.

இதனால் அங்கு பட்டினிச் சாவுக்கு ஏராளமான பேர் பலியாகி வருகின்றனர். அவர்களின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கக் கூட யாரும் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இலங்கைக்கு மேலும் உணவு அனுப்பும் ஐ.நா:

இந் நிலையில் இலங்கையில் இடம் பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக மேலும் 1000 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஐ.நா. உணவுத் திட்ட ஏஜென்சி கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை அரசு ஏற்பாடு செய்து கொடுத்த கப்பலில் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த உணவுப் பொருட்களை கொண்டு வருகிறது.

ஒரு லட்சம் பேருக்கு 20 நாட்களுக்கு இந்த உணவுப் பொருள் பயன்படும்.

பாதுகாப்பு வளையப் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாக ஐ.நா. உணவுத் திட்ட ஏஜென்சி கணக்கிட்டுள்ளது.

வன்னிப் பகுதிக்கு சாலை மார்க்கமாக செல்ல இலங்கை அரசு தடை விதித்திருப்பதாலும், அந்த வழியாக போக சாத்தியம் இல்லாததாலும், கடல் மார்க்கமாக இதுவரை 2220 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஐ.நா. உணவுத் திட்ட ஏஜென்சி அனுப்பி வைத்துள்ளது.

தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் இன்னும் வன்னிக்குப் போய்ச் சேராத நிலையில் தற்போது ஐ.நா மேலும் ஆயிரம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை அனுப்பவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்

ம்.. எத்தனை நாள் ஆச்சு இப்படி புது மாதிரியான கதை தளத்தில் சினிமா பார்த்து...

ப்ளைட் சீசன் டிக்கேட் எடுத்து பறந்து பறந்து கடத்தல் குருவிகள் தான் கதை களம்.. அப்புறம் அடிச்சு தூள் கிளப்பலாம் தானே..

குருவியாக சூர்யா அவரின் பாஸாக பிரபு..அப்புறம் போட்டி தலைவராக ஒரு சேட்..வியாபார சண்டை .. அருமையான 4 பாடல்களுக்கு அழகான தமன்னா..ஆப்பிரிககா சேஸிங்...கடத்தல் கஸ்ட்ம்ஸ்...

சூர்யா படம் முழுக்க சுறுசுறுப்பாக வருகிறார்..சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம்.. காங்கோ நாட்டு சண்டை காட்சி அபாரம்...

படத்தின் இன்னோரு ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ் ..அருமையான பாடல்கள் சிறப்பான பிண்ணணி இசை...

படத்தின் முதல் பாதி படு வேகம்..... ம் எல்லா புது ஐடியாவையும் போட்டு சூப்பரா எடுத்து இருக்காங்க.. கடத்தல் குருவிகள் உலகம் பேசும் படங்கள் குறைவு என்பதால் ப்ரேஷ்ஷான காட்சிகள்..

அதுவும் கடத்தல்கள் ஒவ்வோன்றும் சாதாரண அப்பாவியான நமக்கு ஜிலீர் ஜிலீர்ங்குது..

கூடவே லைட் காமேடி ..சரி டா நல்ல படம் தான்னு நினைச்சா..
இரண்டாம் பாதி தான்..

செண்டிமெண்ட்..க்ரைம்..எங்க போறதுன்னு தெரியாம சரி இரண்டு பக்கமும் வண்டியோட்ட சூப்பரா கொட்டாவி வருது...
எல்லா ஐடியாவையும் முதல் பாதியிலே மிச்சம் வைக்காம் எடுத்தாசே..

அப்புறம் க்ளைமேக்ஸ் வரும் போது திரும்ப பரபரப்பு..என்ன பண்றது அதுக்கள்ள படம் முடிஞ்சு போச்சே..

சூர்யா விஜய் ஒரு புதிய கீதைன்னு ஒரு டப்பா படத்துல சூப்பர் டூப்பர் உட்லாலங்கடி கேரக்டர் செய்து இருப்பார்.. சம்ம காமடியா இருக்கும்..

கொஞ்சம் அசந்தால் அதே கேரக்டராக தெரிந்து இருக்கும்....நல்ல வேளை நீங்க கொஞ்சம் variety செய்து தப்பீட்டீங்க..

படத்தின் வில்லன் சம்ம வெயிட்தான்..
ஆனா வெயிட்டான கதாப்பாத்திரம் இல்லையே....

சன் டிவி காரங்களுக்கு கொண்டாட்டம்.. ட்ப்பா பாடல்களை வைச்சே ஒப்பேத்தி வந்தவங்களுக்கு சும்மா திருப்பதி லட்டு போல சூப்பர் பாடல்கள்...

படதொகுப்பு..கேமரா எல்லாம் அருமை..அருமையோ அருமை..

இயக்குநர் கேவி ஆனந்த் திறமை பல இடங்களில் நன்றாக தெரிகிறது..

இரண்டாம் பாதியை கொஞ்சம் தட்டி சரி செய்து இருந்தால் படம் வெகு அருமையாக வந்து இருக்கும்.

படத்தின் முதல் பாதி..சூர்யா..இசை ..பாடல்கள்..கதை தளம்ன்னு நல்ல விழ்யங்களும் இருக்கு..

ஒரு முறை பார்க்கலாம்....ரசிக்கலாம்...

கருத்துகள் இல்லை: