வெள்ளி, 10 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-09

சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழர் மீது திணிக்கப்பட்டுள்ள போரை அனைத்துலகம் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து முன்னாள் த.தே.கூட்டமைப்பின் பா.உ. மா.க.ஈழவேந்தன் தென்னாபிரிக்காவின் டேர்பனில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் பின்வரும் ஆறு கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்தி தொடங்கியுள்ளார்.

1.உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியவாறான நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2.அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

3.இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுகக்கு சுதரந்திரமான அனைத்து மனிதாபிமான நிறுவனங்களும் எந்தவித தடைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும்.

4.தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.

5.தென்னாபிரிக்க தமிழ்ச் சமூகத்தினர் இவரின் உண்ணாநிலைப் போராட்ட முயற்சியில் தங்களையும் இணைத்துகொள்வதற்கு முன்வந்துள்ளார்.

6.புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுகம்இ மனித உரிமை ஆர்வலர்களையும் இவ்வாறான நடவடிக்கைகளில் தத்தமது நாடுகளில் ஈடுபடுமாறு உலகத் தமிழ்ச் சொந்தங்களை அவர் கோருகின்றார்.

76 அகவையுடைய முன்னாள் த.தே.கூட்டமைப்பின் பா.உ. மா.க.ஈழவேந்தன் கடந்த அறுபது ஆண்டுகளாக சிறிலங்கா அரசியலில் ஈடுபடு கொண்டவர்.

ஈழத் தமிழர்கள் மீது கொடிய சிங்கள இராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிட்ட இனப் படுகொலையை அனைத்துலக சமூகம் தண்டிக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை. எனத் தெரிவித்து ஈழத்தில் கருவில் வளரும் குழந்தைகளும், தாய்மார்களும் இனவாத இராணுவத்தின் விசமிய ஆயுதங்களால் கொன்றொழிக்கப்படும் வேளையில் அவர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு உண்மையான தென்னாபிரிக்கச் சுதந்திரப் போராட்டம் வென்ற மண்ணில் இருந்து இந்தப் பயணத்தை மேற்கொள்வதன் மூலம் நெல்சன் மண்டேலா மற்றும் கிறிஸ்தவ மதகுருத் தலைவர் டெஸ்மன் டூட்று போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களையும் மற்ற உலகத் தலைவர்களையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு எதிராக நேர்மையான வெளிப்படையான நிலைப்பாட்டை மேற்கொள்ள கோரி வேண்டுகோள் விடுக்கின்றார்.

நியூசிலாந்துவாழ் தமிழ் மக்கள் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம், மற்றும் முற்றுகைப் போராட்டம் என்பவற்றை நடத்தியுள்ளனர்.

வன்னியில் தமிழ் மக்களின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டு, குழந்தைகள், சிறுவர், கண்பிணிப் பெண்கள், தாய்மார், மூதாளர் என அகவை வேறுபாடின்றி சிறீலங்கா அரச பயங்கரவாதத்தினால் பொதுமக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த மக்கள் தொடர்பாக அனைத்துலக சமூகம் கவனம் கொள்ளாது இருப்பதுடன், மேற்குலக ஊடகங்களும் கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டித்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நாளாந்தம் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இன்று நியூசிலாந்துவாழ் மக்கள் ஓக்லண்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாலை 3:00 மணி முதல் 5:30 மணிவரை நடபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, சில கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த TV NZ தொலைக்காட்சி அமைவிடத்திற்குச் சென்ற மக்கள் அங்கு முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி நிருவாகத்தினர் வெளியே வந்து தமிழ் மக்களின் கோரிக்கை பற்றிக் கேட்டறிந்ததுடன், அவர்களிடம் இருந்த காணொளி, மற்றும் சில ஆவணங்களையும் பெற்று, அவற்றை தமது தொலைக்காட்சியில் அவற்றை ஒளிபரப்புவதாக உறுதியளித்துள்ளனர்.

பிரித்தானியா
08-04-2009

எங்கள் அன்பான தமிழீழ மக்களே,

இது தமீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை.

எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள்.

தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை. அனைவரும் எமது நன்பர்களே. எமது எதிரி எதைக்கொண்டு தாக்கினானோ அதைக்கொண்டே திருப்பித்தாக்கி எமது விடுதலை போராட்டத்தை துவக்கிவைத்தார் எமது தலைவர், பாசமிகு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

எமது விடுதலைப்போராட்டத்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நம் கரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எவ்வித பின்வாங்கலும் செய்யப்போவதில்லை. எமக்கு அடுத்த சந்ததிக்கு நாம் எமது அழகான தமிழீழத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டுமே தவிர ஆயுதப்போராட்டத்தையோஅல்லது அறவழிப்போராட்டத்தையோ அல்ல.

தமிழீழத்தை போராடி பெற வேண்டியதே எமது முக்கிய கடமை. எமது இந்த அறவழிப்போராட்டமானது இந்நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவாகவே நாம் நடத்துகிறோம். ஆகவே மக்களே எவ்வித தயக்கமுமின்றி விரைந்து திரண்டு வந்து குரல் கொடுங்கள். இங்கே நாம் விதைக்கும் இந்த விதை அனைத்து நாட்டிலும் ஆழவிருச்சமாக அகண்டு விரிந்து ஆழ வேரூண்ட வேண்டும்.

அந்தந்த நாட்டில் வாழும் தமிழீழ மக்களே! கிளர்ந்தெழுந்துங்கள். இது எமக்கான நேரம், தேசியத்தலைவரே கூறியிருக்கின்றார், மாணவர்களே எமது தூண்கள். தமிழர்களையும் தமிழீழத்தையும் தாங்க அனைத்து நாடுகளிலும் அணி அணியாக திரண்டுவாருங்கள் தூண்களே! இந்த தூண்கள் என்றும் எதற்கும் சாயாத தூண்கள்.

கிபிராலும் அடிக்க முடியாதது, ஆட்லரியாலும் வீழ்த்த முடியாது, மல்ட்டிபரலாலும் மடிக்க முடியாத தூண்களே! திரண்டு கிழந்து எழுந்து வாருங்கள்.

தமிழீழம் பெற விரைந்து வாருங்கள்.

அன்புடன்

பரமேசுவரன்
சிவா
பிரித்தானிய பாராளுமன்றத்தையண்டி போராட்டம் நடாத்தும் தமிழ் இளையோரையும் அவர் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பார்த்தபோது நாம் இனி எவர்க்கும் அடிபணியோம் தமிழீழ விடுதலை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதையும் உணர்ந்தோம்.

இந்த சின்னம் சிறுசுகளும் இளைஞரும் குடும்பங்களும் ஒன்று திரண்டு இளையோரின் தலைமையில் உலகின் ஆன்மாவை தட்டிக்கேட்கும் இப்போராட்டம் எமது விடுதலைப்பயணத்தின் மைற்கல்.

அன்று எப்படி தலைவர் பிரபாகரன் தலைமையில் இளைஞர் படை களப்போரை ஆரம்பித்ததோ அதேபோல இவ் இளையோர்படை .லண்டனில் உலகின் மனட்சாட்சியை தட்டி உலகின் அதிகார மையத்தில் இராசதந்தர சமரை ஆரம்பிததுள்ளது.

இவ்இளையோருக்கு எம்சமூகம் வரலாற்று கடன்பட்டுள்ளது. கலகம் அடக்கும் காவல்துறை தமிழீழ தேசியக்கொடியை பறிக்க 'என்னைக் கொல் ஆனால் என்னிடம் இருந்து தேசியக் கொடியை பறிக்க முடியாது' என்று தேசியத்திமிருடன் நிமிர்ந்து நிற்கும் இவ் இளையோரும் போராளிகளே.

உலகமே எமை எதிர்த்து இனப்படுகொலை யுத்தத்தை செய்கையில் எம்முற்சந்ததி சேர்.பொன் இராமநாதன்கள் போல் அடிபணிந்து சொற்கேட்டு பட்டம் பெறும் சரிதம் அழிந்து விட்டது.

உலகின் மக்களாட்சியின் தொட்டிலில் எழுந்து நீதிகேட்கும் இளையோர் இன்னு
ம் வலிமையாக விட்டுக்கொடுப்பின்றி போராடிக்கொண்டிருக்கையில் புலம்பெயர் தமிழரின் புதிய தலைமைத்துவம் அவர்களின் கைகளில் சென்றடைவது தவிர்க்கமுடியாததும் கூட.

எமது சுதந்திரம் யாரால் சூறையாடப்பட்டதோ எந்த அரசின் கீழ்த்தரமான இராசதந்திர நகர்வுகளால் எமது போராட்டம் பின்னடைவுகளை சந்தித்ததோ அவ் அரசின் இயங்கு புள்ளியில் அந்த நாட்டு பிரசைகளாக நீதி கேட்டு நிற்கும் இவ் இளையோரின் உறுதி கண்டு எமது சமூகம் புல்லரித்துப்போயுள்ளது.

இப்போராட்டம் பிரித்தானியாவின் தமிழர் தொடர்பான இரட்டைவேட அணுகுமுறையை மாற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பிரித்தானியப்பிரதமர் தமிழ்பெரியோரை சந்தித்து 'நான் கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன்' என்ற வாக்குறுதி கொடுப்பதும் அவரின் ஐநா பிரதிநிதிகளும் புலனாய்வு துறையும் எமக்கு கொள்ளிசெருகுவதுமான துன்பியல் இராசதந்திரம் நிறுத்தப்படும் வரை இவ்இளையோரின் இராச தந்திரப்போர் நடக்கவேண்டியது வரலாற்று அவசியம். மற்றைய நாட்டு இளையோரும் இவர்கள் வழிநின்று போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியது இக்கணத்தின் கடைமை.

செ.நதிமகள்

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம் வரும் 12.4.09 ஞாயிற் றுக்கிழமை மாலை 4 மணிக்கு லால்பேட்டை ஜே.எம்.ஏ. திருமண மண்ட பத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷபீகுர்ரஹ்மான் முன்னிலையில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது, இயக்க பணி, மற்றும் தலைவர் அனுமதியுடன் இதர முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி : முதுவை ஹிதாயத்

சிங்கள இனவெறி அரசின் தமிழினப் படுகொலையைக் கெதிராக கொதித்தெழுந்து தொடர் போராட்டம் நடத்திவரும் கனடியத்தமிழர்கள் இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து கொண்டுள்ளனர்.

சிறீலங்கா இனவெறி அரசிற்கு அழுத்தம் கொடுத்து உடனடி யுத்த நிறுத்தத்தினை கனடிய அரசு மேற்கொள்ள வைக்கவேண்டும் என்று கனடியத் தலைநகரின் வீதிகளை இரண்டாவது நாளாகவும் தமிழர்கள் முடக்கி வைத்துத் தமது போராட்டத்தினைத் தொடர்கிறார்கள்.




கனடியத் தமிழர்கள் செறிவாக உள்ள ரொறன்ரோ மாநகரில் இருந்து பல மைல் தொலைவிலுள்ள கனடியத் தலைநகர் நோக்கி கனடியத் தமிழர்கள் அணிதிரண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதேவேளை நேற்றைய தினத்திலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கனடியத் தமிழர்களைக் கலைந்து செல்லுமாறு காவற்றுறையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்து தமது உறவுகளை இனவழிப்பிலிருந்து காப்பாற்ற கனடிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை தமது போராட்டத்தைத் தாங்கள் முன்னெடுப்போம் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

தமிழர் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது தமிழர்களின் பிரதிநிதிகளைக் கனடாவில் தடைசெய்து தமிழர் தரப்பினை பலமிழக்கச் செய்த கனடிய அரசிற்கு இவ் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவேண்டிய தார்மீக பொறுப்பு இருப்பதனை அவர்கள் எடுத்துக் கூறவருகின்றனர்.






கருத்துகள் இல்லை: