வெள்ளி, 10 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-09




1.பாரத் மாதா கீ பாப்பா!


அவன் சட்டைக்குள் சிவப்பாய் மினுக் மினுக் குழந்தை கொல் என சிரித்தது 6 5 4 3 2 1 பாரத் மாதா கீ ஜே பாம் வெடித்தது



2 .இசை?


ஆஆஆஆஆ உச்சஸ்தாயில் பாடகர் சனியனே நிறுத்து உன்னோட பாட்டு கேக்க முடியுதா சொத் சொத் குழந்தை ஆஆஆஆஆஆ



3.நமக்கு நாமே திட்டம்.


கடைசிப் பொத்தானை அழுத்தினான் உலகம் அழிந்தது . வெற்றி வெற்றி வெற்றி அழிந்தனர் அனைவரும் உலகில் இனி நான் மட்டும்தான்.



4.வை...கோ! ராமதாஸ்!


ஈழமா! அது எங்கேயோ துபாய் பக்கம் ஆப்பிரிக்கா பக்கத்திலல இருக்கு!



5.சாப்பாடு தயார்


போன வாரம் வரைக்கும் அஞ்சாப்பு படிச்ச குட்டிப்பையன் ஓட்டல் போர்ட்ல எழுதினான் வயிறு முழுக்க பசியோட!



6.என் மலம்


சே பொண நாத்தம் நாறுது அந்த ஊதுபத்தி பத்தவையுமா! எப்பதான் க்ளீன் பண்ணி முடிப்பானோ



7.இலவசம்


கால் ஆட்டிக்கொண்டே சொன்னாள் காண்டம் வேணுமா எய்ட்ஸ் வேணுமா இரண்டும் ஃப்ரீதான்.



8.மிட்நைட் மசாலா


தனிமையில் உணர்ச்சிப்பெருக்கின் உச்சக்கட்டம் ,ரிமோட்டை வேகமாய் ஆட்டிக்கொண்டு வேறு எதையோ அழுத்திக்கொண்டிருந்தான்.



9.ரிசெசன்


ஏன்ப்பா இந்த பாத்ரூம்ல தண்ணி வரல , நீ வேற அவனவனுக்கு அதுவே வரல.



10.பொழுது போகல!
என்னடா மேல இருக்கறதுலாம். சும்மா டைம்பாஸ் மச்சி






More than a Blog Aggregator

by சூர்யா ௧ண்ணன்

யூத்புல் விகடனில் எனது " ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி" பதிவு சிறந்த பதிவாக தெரிவு செய்யப்பட்டுள்ளது..,


நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக விகடன் வாசகனாக உள்ளேன்.
நவம்பர் - 1988 ஆம் ஆண்டு ஜூனியர் விகடனில் என்னைப்பற்றிய என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு துயர சம்பவம் வெளியாகியிருந்தது.

இன்று விகடன் அளித்த அங்கீகாரம் !. மிக்க மகிழ்ச்சி

விகடனாருக்கு எனது நன்றி!

எனக்கு ஆதரவளித்த சக பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் மற்றும் ' Tamilish, Tamilveli, Newspaanai, ntamil' அனைவருக்கும் எனது நன்றிகள்.

தமிழகச் சட்டமன்ற அரசியல் என்பது சென்னையில் உள்ள கூவம், பக்கிங்ஹம் கால்வாய்களை விடத் துர்நாற்றம் மிக்கது. மனம் வைத்தால் இந்தக் கால்வாய்களைத் தூரெடுத்துத் தூய்மைப்படுத்தலாம். தமிழகச் சட்டமன்றத்திற்கு அப்படி எதையுமே செய்ய இயலாது. என்றாலும் தமிழகத்தின் அரசியற் காய் நகர்த்தல்களைப் பற்றி இலங்கைத் தமிழ் நாளேடுகளிலும் சில சஞ்சிகைகளிலுங் கூடத் தகுதி மீறிய முக்கியத்துவம் காணப்படுகிறது.

திருப்பூர்..... எனக்குச் செவிட்டில் அடித்து தொழில் சொல்லிக் கொடுத்த ஊர். அடி என்றால் சாதாரண அடி இல்லை. இனி இந்த திவ்ய தேசத்தின் பக்கமே வரக்கூடாது என்று மனதில் சொல்லிக்கொண்டு (அழுது கொண்டு) சேலம் நோக்கிப் பெட்டியைக் கட்டினேன்.

அப்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் மெர்ச்சன்டைசராகப் பணியாற்றிவந்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு வேலையில்லாத வேலை. அதாவது நாமாக எந்த வேலையும் செய்யத் தேவையில்லை. ஆனால் எது நடந்தாலும் / நடக்காவிட்டாலும் நாம் தான் பொறுப்பு. துணி வரவில்லையென்றாலும்...துணைபொருட்கள் (அசெசரீஸ்) வரவில்லையென்றாலும்....உற்பத்தி வரவில்லையென்றாலும்....தரம் வரவில்லை என்றாலும்...எது வரவில்லை என்றாலும் நாம் தான் பொறுப்பு.

உடம்பு சரியில்லை என்றாலும் கூட "சரி ஊசி போட்டுட்டு வந்துடுவல்ல" என்று மனசாட்சியே இல்லாமல் கேட்பார்கள்.
ஒரு நாளைக்குக் கட்டாயமாக 13 மணி நேர வேலை. சில நாட்களில் (மாதத்திற்கு 25 நாட்கள் மட்டும் ) 17 மணி நேர வேலை.
ஞாயிறன்றும் விடுமுறை கிடையாது. கேட்டால் ஏம்ப்பா எதாவது விஷேசமா? என்று கேட்பார்கள். மீறிக் கேட்டாலும் "நானெல்லாம் என் கல்யாணத்திற்கே அரை நாள் தான் லீவு போட்டேன்" என்று கதையெல்லாம் வைத்திருப்பார்கள்.

ஒரே ஆறுதல் திரைப்படங்கள் தாம். அப்போது வெறித்தனமாகப் பார்த்த மது / மரணமனிதன் / கஜேந்திரா / ஆதி / மெர்க்குரிப்பூக்கள் போன்ற காவியங்களும் அதற்கு நண்பர்களோடு அடித்த கமெண்ட்டுகளும் மறக்க முடியாதவை.

அதிலும் மெர்க்குரிப்பூக்கள் படத்தை ஜோதி திரையரங்கில் (இது திருப்பூர் ஜோதி ) பார்க்க ஆரம்பித்த 10 வது நிமிடத்தில் என்னோடு வந்த முத்து, "அண்ணே போலாம்னே" என்றான். டேய் இன்னும் என்ன சொல்லவராங்கன்னே தெரியல்ல அதுக்குள்ள போலாங்கிறீயே என்று கேட்டதற்கு, "ஆங் மண்ண சொல்ல வாராங்க...எந்திருய்யான்னா???? இம்முறை அவனிடம் மரியாதை குறைந்திருந்தது. சரி இதுக்கு மேல உட்காந்தா அசிங்க அசிங்கமா திட்டுவான் என்பதால் அவனோடு கிளம்பினேன். தியேட்டரில் எங்களை வெளியே விடவில்லை." இடைவேளை வரை வண்டியை எடுக்கக் கூடாது, உள்ளே போங்கள்" என்று மேலாளர் சொன்னதற்கு , நீங்க மட்டும் ஜாலியா வெளிய இருப்பீங்க...நாங்க மட்டும் கஷ்டப்பட்டு உள்ள இருக்கணுமா...வாங்க எல்லோரும் இங்கனயே உட்காரலாம் என்று எதிர் வாதம் புரிந்தோம்.

திருப்பூரில் அந்த நேரத்தில் நான் சந்தித்த சில மனிதர்களை மறக்கவே முடியாது....

"கையில் தீக்கதிர் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு தன் பணியாளரைத் தே..பையா என்று திட்டிய முதலாளி"

" நானெல்லாம் சாகிறதுக்கு வெட்கப்பட்டுக்கிட்டு வாழ்ந்திகிட்டு இருக்கேங்க..என்று சொன்ன தொழிலில் நஷ்டமடைந்தவர்"

" ஓட்டுப் போட ஆசையாய் சேலத்திற்குக் கிளம்பிய போது நீயெல்லாம் ஓட்டு போட்டு என்னத்த ஆகப்போகுது பேசாம வேலையப் பாரு என்று சொன்ன என் சீனியர்"

ஆனால் அண்ணா பல்கலையில் நான் படித்த தொழில்கல்வியை விட எனக்கு அதிகம் சொல்லிக் கொடுத்தது திருப்பூர் தான் என்பதையும்,அதன் காரணமாகத்தான் நான் இப்போதும் பணியில் உள்ளேன் என்பதையும் மறுக்கவே முடியாது.

கால ராட்டினம் சுழன்று மீண்டும் திருப்பூரில் நான்.

"நள்ளிரவு வரை வேலை...ஞாயிறன்றும் வேலை....குழந்தைத் தொழிலாளர்கள்....மிகக்குறைவான ஊதியம்....ஆண்டை அடிமை மனோபாவம் கம்யூனிசம் திருப்பூரில் என்ன செய்தது இதுவரை என்று என் அறிவுக்கு எட்டிய வரை தெரியவில்லை. தி.மு.க வந்த பின்பு இப்போது தான் நல்ல சாலைகளாவது வந்துள்ளது. இந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் திருப்பூருக்கு நான் / நீ என்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால்......
ஐந்தாண்டு காலமாய், பதிவுலகில் பவனி வரும் அண்ணன் சீமாச்சு அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், அவர் இட்ட இடுகைக்கு எதிர் இடுகையாகவும் இடுவது இது.

கேட்டுத் தெரிஞ்சுகிட்டா தப்பில்லை! இது அண்ணன் அவர்கள் சொன்னது. ஆக, சந்தேகம் வருவது இயல்பு. அவன் ஒரு சந்தேகப் பிராணி என்று எதிர்மறை நோக்கில் இகழக் கேட்டு இருப்பீர்கள். ஆனால், அப்படி இகழத் தேவை இல்லை அன்பர்களே!

அடிக்கடி ஐயமுறுபவன், பின்னாளில் அறிவாளி! படிக்கும் குழந்தைகளாகட்டும், பணியிடத்தில் இருக்கும் பணியாளனாகட்டும் ஐயம் மேலிடுவது இயல்பு. அதே வேளையில், நம்பிக்கை இன்றி ஒருவரைக் கூர்ந்து நோக்குங்கால் அது தவறு, அது வாழ்வில் மகிழ்வைக் கொல்லும்.

ஆங்கிலத்திலே சொல்வோமானால், dobut and suspicious are two different elements. தாய்த் தமிழிலும் அதேதான் நண்பர்காள்! வாழ்வில் ஐயமும், அசுகையும் இரு வேறு அம்சங்கள். சந்தேகப் பிராணியாக இருப்பது நன்று! அசுகைப் பிராணியாய் இருப்பது நன்றன்று!!

சரி, இனி இடுகையின் தலைப்புக்கு வருவோம். அண்ணன், விரைவில் பதிவுலகில் ஐந்தாண்டு காலத்தைக் கடக்கப் போகிறார். வாழ்த்துகள்! ஏன், பதிவுகளின் எண்ணிக்கை வெகு குறைவாய் இருக்கிறது. சுவராசியம் கூட்டுவதில் வல்லவரான தாங்கள், பாராமுகமாய் இருந்து, இடுகைகள் இடாமல் இருப்பதற்குக் கண்டனங்கள்!! இனியாவது, அண்ணன் அவ்வப்போது இடுகைகள் இட்டு, பதிவுலகுக்கு பொலிவூட்டுவார் என நம்புவோமாக!!!


கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை!



More than a Blog Aggregator

by A Blog for Edutainment



LED Hard Drive Clock

கருத்துகள் இல்லை: