பின்னிரவில் பெய்யும் மழை
நினைவு பொட்டலங்களை கரைத்தபடி
தெருக்கோடியில் மறைகிறது
உருகும் இரும்பு பாளங்களாய்
இறுக்கம் தளர்ந்த மனசு
உனக்கும் எனக்குமான
முரன் வெடிப்புகளில்
துளிர்த்தவேரின் ஆதிதேடுகிறது
சுயம்கள் தொலத்த ஒரு நாளில்
சில புன்னகைகளை உதடுகளில் ஒட்டிவந்தாய்
வார்த்தைகளின் வசீகரங்கள் தொலைந்து
மௌனங்கள் இடம்பெயர்ந்தது
உனக்கும் எனக்குமான
சாதரன சந்திப்பை
சரித்திரமாக்கியது பிரிவு
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகொப் கௌன்பேக்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. தலைவருடன் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான பிரதம அதிகாரி ஜக்குவாஸ் டி மையோவும் இலங்கை வந்துள்ளார்.
பிரித்தானியாவில் ஆரம்பமான தாயக உறவுகளின் உயிர்காப்பதற்கான போராட்டம் ஓய்வு ஒளிச்சலின்றி தொடர்ந்தும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் பிரித்தானியத் தமிழ் மாணவர்கள் இன்று பிரித்தனியப் பிரதமரால் சமாதானத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள டெஸ் பிறவுண் அவர்களோடு பேச்சு நடாத்தினார்கள். கடும் குளிர் மழை என்று பாராமல் இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்ந்து பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக உள்ள திடலை நிரப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக பிரித்தானிய அரசு இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
பிரித்தானியா 08-04-2009 எங்கள் அன்பான தமிழீழ மக்களே, இது தமீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை. எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள். தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக