வெள்ளி, 10 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-09

கமலின் புதிய படமான் "தலைவன் இருக்கின்றான்", இந்தியில் வெளியான  "A wednesday" படத்தின் ரீமேக்  என்பது அனைவரும் அறிந்த விசயமாகும். மும்பை குண்டு வெடிப்பில் வெறுப்படைந்த ஒரு இந்திய குடிமகனின் உணர்வை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனை தமிழ், மலையாளம் இரு மொழிகளில் எடுக்கிறார்கள். கமல், மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
கமலின் புதிய படமான் "தலைவன் இருக்கின்றான்", இந்தியில் வெளியான  "A wednesday" படத்தின் ரீமேக்  என்பது அனைவரும் அறிந்த விசயமாகும். மும்பை குண்டு வெடிப்பில் வெறுப்படைந்த ஒரு இந்திய குடிமகனின் உணர்வை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனை தமிழ், மலையாளம் இரு மொழிகளில் எடுக்கிறார்கள். கமல், மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.


More than a Blog Aggregator

by கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI

துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான "ETA STAR PROPERTY DEVELOPER" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான "EMAAR" நிறுவனமே இந்த விருதை"TAMEER" மற்றும் "UNION PROPERTY" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.

துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,
இந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் "வியாபார விஞ்ஞானி" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் "ETA ASCON" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...

கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.

நன்றிப்பா...சாருகாசி
மனிதனாக மனிதன் வாழ்ந்தால் மண்ணில் மனிதன் இறப்பதில்லை...

ஸ்கூல் மற்றும் காலேஜ் சேருவதற்கு அப்ப்ளிகேசன் வாங்கத்தான் நாமெல்லாம் அலைந்திருப்போம். இப்ப நானோ கார் வாங்குறதுக்கும் அப்ப்ளிகேசன் வாங்க வேண்டி இருக்கிறது.
அதற்கான நேரம் இல்லாதவர்கள் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணி ஆன்லைன் -னிலே உங்களுக்கான காரினை பதிவு செய்து கொள்ளுங்கள்.




http://tatanano.inservices.tatamotors.com/tatamotors/


வரும் இருப்பதைந்தாம் தேதி வரை நீங்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.
அளவுக்கதிகமானோர் பதிவு செய்திருந்தால் அதுக்கப்புறம் குலுக்கல் முறையில் அதிர்ஷ்ட சாலிகள் தேர்ந்தெடுக்கபடுவர்.
கார் ஓட்ட தெரிந்தவர்கள் குறிப்பாக டாட்டா நானோ மேல் ஆசை வைத்திருப்பவர்கள் கால விரயம் தவிர்த்து இணையம் மூலம் நீங்களும் பதிவர் ஆகலாம்.
அப்புறம் குலுக்கலில் ( அந்த குலுக்கல் இல்லை பாஸ்!) வெற்றி பெற வாழ்த்துக்கள்
தமிழ்நாடு அதிர்கிறது!

ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை ஓர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது.

இதனைக் கண்டித்து தமிழகமே கிளர்ந்துள்ளது. பல்வேறு கட்சிகளும் தத்தம் உசிதப்படி போராட்ட வடிவங்களை அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.

இன்று மாலை தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையில் சென்னையில் மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது.

இங்கிலாந்தில் மூன்று நாள்களாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாது இங்கிலாந்து வாழ் தமிழர்களால் முதன் முறையாக நாடாளுமன்றமுன் முற்றுகையிடப்பட்டுள்ளது.

பிரான்சு, சுவீடன், கனடா, நெதர்லாந்து நாடுகளில் தமிழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழர் நிலைமை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் - நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன்ஸ் கார்ஸ்டோருடன் உரையாடியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

அய்.நா. மன்றம் தொடர்ந்து சிங்கள அரசுக்கு வேண்டுகோளை விடுவித்து வருகிறது.

இலங்கையில் போரை நிறுத்துமாறு - இந்தியப் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், அய்க்கியக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோருக்கு முதலமைச்சர் என்ற முறையில் தந்திகளைக் கொடுத்துள்ளார் கலைஞர் அவர்கள்.

இந்த நிலையில், இலங்கைப் பிரதமர் விக்கிரம நாயகா கூறுகிறார்:

தோல்வி அடையும் விடுதலைப்புலிகளைக் காப்பாற்ற அனைத்துலக ராஜதந்திரிகள் முயற்சித்தனர். அவர்களின் நடவடிக்கைக்கு அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என்று திமிரோடு கூறியுள்ளார்.

இதற்கிடையே விடுதலைப்புலிகளுடன் நடத்தும் போரில் இந்திய வீரர்களும் இருக்கின்றனர் என்ற ஒரு கருத்தும் வந்துள்ளது. அதுமாதிரி எதுவும் கிடையாது என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி குறிப்பிட்டதுண்டு.

உலகின் பல்வேறு நாடுகளும் இந்தப் பிரச்சினையில் போர் நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்தாலும் பக்கத்து நாடான இந்தியாவின் குரலில்தான் ஆளுமையும் அழுத்தமும் அதிகமாக இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் நடந்துவரும் போராட்டங்கள், பேரணிகள் எதை உணர்த்துகின்றன? இதனை இந்தியா வெளிப்படையாக இலங்கை அரசுக்கு இதுவரை தெரிவித்த தொனியை மாற்றி - இலங்கை அரசுக்குப் புரியும் மொழியில் வலிமையோடு கூறினால்தான் சரிப்பட்டு வரும்.

இந்திய அரசேகூட, இந்தப் பிரச்சினையை அய்.நா.வுக்குக் கொண்டு போகலாம்.

ஒரு இனமே மழலைகள் முதல் முதியோர்வரை பேரினவாத அரசு ஒன்றால் இராணுவப் படைகள்மூலம் அழிக்கப்படுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இந்தியா தயாராக வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றியாகிவிட்டன. மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தை நடத்திக் காட்டியாயிற்று.

இப்பொழுது பந்து மத்திய அரசின் கையில் இருக்கிறது. அதனைச் சரியாகப் புரிந்துகொண்டு மத்திய அரசும், ஆளும் கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியும் சரியான முடிவெடுத்து வெளிப்படையாக எச்சரிக்கையுடன் கலந்து வேண்டுகோளை அழுத்தமாக வைத்தே தீர வேண்டும். இந்த எதிர்பார்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர் களிடத்தில் மட்டுமல்ல - மனிதநேய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மத்தியிலும் உள்ளது.

இதில் அரசியலைப் போட்டுக் குழப்பவேண்டாம். ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட இந்தியாவுக்கே அதிகப் பாத்தியதை உண்டு.

ஏற்கெனவே இந்தியப் பிரதமர் கூறி வந்த வார்த்தைகளை இலங்கை அரசு எந்த அளவுக்குப் புரிந்துகொண்டது என்றே தெரியவில்லை.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான எழுச்சிக் குரலை இலங்கை அரசிடம் இந்தியப் பிரதமர் சிந்தாமல் சிதறாமல் எதிரொலித்தாலே போதும் - நெருக்கடிக்குத் தீர்வு கிடைத்துவிடும்.


------------------நன்றி:- "விடுதலை"தலையங்கம் 9-4-2009


More than a Blog Aggregator

by கனகலிங்கம் கோபிகிருஷ்ணா.
மெளனத்தைப் பற்றி ஆயிரம் ஆயிரம் கவிதை சொல்கிறார்கள்...
ஆனால் உன் மெளனத்தை என்னால் இரசிக்க முடியவில்லை...
என் மரணத்தின் வாசலின் திறப்பு தான் உன் மெளனம்...

கருத்துகள் இல்லை: