வெள்ளி, 10 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-09


'மக்களுக்கு நல்லது பண்ண அப்பா நிச்சயம் வருவார்' என சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவும் சூழலில், நேற்று ரஜினியிடம் அவரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார். ஆனால் அவரது மகள் சௌந்தர்யாவோ, ரஜிநி அரசியலுக்கு வரவேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் விருப்பமும் என்று கூறியுள்ளார்.

குமுதம் பேட்டியில் சௌந்ததர்யாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

வெங்கட் பிரபுவோட இணைஞ்சிருக்கீங்க... எப்படி ஃபீல் பண்றீங்க, கோவா டு தேனி பற்றி?

வெங்கட் வெரி குட் ஃப்ரெண்ட். அவர் டீமோட ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இது பிரபுவோட ஹாட்ரிக் வெற்றிப் படமா இருக்கும். இந்தப் படத்தோட தயாரிப்பாளராக இருப்பதில் ரொம்ப சந்தோஷம்.

நீங்க தயாரிக்கும் ரஜினியோட சுல்தான் அனிமேஷன் படம் எப்ப திரைக்கு வரும்?

நல்லபடியா போயிட்டிருக்கு. அனிமேஷன் படம்னா ரொம்ப லேட் ஆகும். லாவ் ஆக்ஷன் படம்ன்றது ஈஸியா முடிச்சிடலாம். ஆக்டர்ஸ் நடிச்சா கட் சொல்லலாம், ஆக்ஷன் சொல்லலாம், ரீடேக் போகலாம். ஆனா அனிமேஷன்ல ஸ்டார்ட் டு எண்ட் வரைக்கும் டெக்னாலஜி. அப்பாவை வச்சுப் பண்றதால, பக்காவா வரணும்னு எக்ஸ்ட்ரா டயம் எடுத்துப் பண்றோம். கண்டிப்பா இந்த வருஷம் முடியறதுக்குள்ளே வந்திடும்!

கலர்புல் சிட்டியிலிருந்து கரிசல்காட்டுக்கு வந்திருக்கீங்க. எப்படி இருக்கு?

எல்லாமே நம்ம ஊருதானே (பொழச்சிக்கிருவீங்க!). தேனிக்கு இப்பதான் முதல்முறையா வர்றேன். ஆனா சினிமாவில தேனிக்கு நிறைய ஹிஸ்டரி இருக்கு. அப்பா ரொம்பப் படம் இங்கே நடிச்சிருக்கார். வெங்கட்டோட ஃபேமிலிக்கு இந்த ஊருதான். கங்கை அமரன் சார் ரொம்பப் படம் பண்ணியிருக்கார். ரொம்ப இம்பார்ட்டன்ட் சினிமா சிட்டி இது... பட்டி இல்லை!

தமிழகத்தில் சினிமா துறை சார்ந்த குடும்பங்கள் அரசியலுக்கும் வந்தாச்சு. சினிமாவுல முழுமையா வந்துட்ட நீங்க அரசியலுக்கு வர்றது எப்போ?

நான் அரசியல்ல என்ன நடக்குதுன்னு தினமும் ஃபாலோ பண்ணுவேன். எல்லா நியூஸும் தெரியும். அப்பாவோட நிறைய அரசியல் பேசியிருக்கேன். இரண்டு பேருக்கும் அரசியல்ல நிறைய ஐடியாஸ் உண்டு. கிராஃபிக்ஸ்ல இருந்து சினிமா வரைக்கும் வந்தாச்சு, கண்டிப்பா அரசியலுக்கும் வருவோம். 'அப்பா அரசியலுக்கு வரணும்னு' நாங்க சொல்றோம். அப்பா எப்பவுமே 'மக்களுக்கு நல்லது பண்ணனும், மக்கள் விரும்பறதைச் செய்யணும்'னு சொல்வார். சீக்கிரம் கிருஷ்ண பகவான் ஆசியோட நல்லது பண்ண அப்பா வருவார்!

சூப்பர் ஸ்டார் மாதிரி பொண்ணுக்கும் பஞ்ச் டயலாக் இருக்கா?

ரஜினியைப் போலவே முடியை ஸ்டைலாகக் கோதிவிட்டு பளிச்சென்று சிரிக்கிறார். "பஞ்ச் அப்பாதான் சொல்லணும்! அவரு மாதிரி வருமா? நான் வெரி சிம்பிள், இருந்தாலும் சொல்றேன்... 'பெத்தவங்க குழந்தைக்கு என்ன பண்ணனும்னு கேக்கக்கூடாது. குழந்தைங்க பெத்தவங்களுக்கு என்ன பண்றாங்கன்னு கேக்கணும்!' - இது என்னோட, எனக்குப் பிடித்த பஞ்ச் டயலாக்!

சரி... அரசியல்ல உங்களுக்குப் பிடிச்ச தலைவர் யார்?

ஓபாமா...! (ஆத்தீ... ரொம்ப கஷ்டம்பா சாமீ போட்டு வாங்குறது!)
தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சிவதர்சன் சிவகுமாரவேல் (21) , குட்டி மணியம் (28) ஆகிய இரு இளையவர்களே இவ் உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளவர்களாவர்.அவர்கள் உலகுக்குச் வெளியிட்ட அறிக்கை.


பிரித்தானியா ,
08-04-2009 .

எங்கள் அன்பான தமிழீழ மக்களே,
இது தமீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை.

எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள்.
தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை. அனைவரும் எமது நன்பர்களே. எமது எதிரி எதைக்கொண்டு தாக்கினானோ அதைக்கொண்டே திருப்பித்தாக்கி எமது விடுதலை போராட்டத்தை துவக்கிவைத்தார் எமது தலைவர், பாசமிகு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

எமது விடுதலைப்போராட்டத்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நம் கரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எவ்வித பின்வாங்கலும் செய்யப்போவதில்லை. எமக்கு அடுத்த சந்ததிக்கு நாம் எமது அழகான தமிழீழத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டுமே தவிர ஆயுதப்போராட்டத்தையோஅல்லது அறவழிப்போராட்டத்தையோ அல்ல.

தமிழீழத்தை போராடி பெற வேண்டியதே எமது முக்கிய கடமை. எமது இந்த அறவழிப்போராட்டமானது இந்நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவாகவே நாம் நடத்துகிறோம். ஆகவே மக்களே எவ்வித தயக்கமுமின்றி விரைந்து திரண்டு வந்து குரல் கொடுங்கள். இங்கே நாம் விதைக்கும் இந்த விதை அனைத்து நாட்டிலும் ஆழவிருச்சமாக அகண்டு விரிந்து ஆழ வேரூண்ட வேண்டும்.

அந்தந்த நாட்டில் வாழும் தமிழீழ மக்களே! கிளர்ந்தெழுந்துங்கள். இது எமக்கான நேரம், தேசியத்தலைவரே கூறியிருக்கின்றார், மாணவர்களே எமது தூண்கள். தமிழர்களையும் தமிழீழத்தையும் தாங்க அனைத்து நாடுகளிலும் அணி அணியாக திரண்டுவாருங்கள் தூண்களே! இந்த தூண்கள் என்றும் எதற்கும் சாயாத தூண்கள்.

கிபிராலும் அடிக்க முடியாதது, ஆட்லரியாலும் வீழ்த்த முடியாது, மல்ட்டிபரலாலும் மடிக்க முடியாத தூண்களே! திரண்டு கிழந்து எழுந்து வாருங்கள்.

தமிழீழம் பெற விரைந்து வாருங்கள்.

அன்புடன்
பரமேசுவரன்
சிவா


செய்திகள்: பதிவு
பட்டம் விட்டுக்கொண்டிருக்கும் போதே கதிரின் கைகளில் இருந்து வெடுக்கென நூல் விடுபட்டுக் கொண்டு பறக்க ஆரம்பித்தது. கதிரும் பிறரும் அது ஏதோ காற்றால் நிகழ்ந்தது என்று தான் எண்ணினர். ஆனால் உண்மை அதுவல்ல.

பாறையின் மேல் தளத்தில் கதிர் நின்று பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். பாறைக்கு அடியில் ஒரு துர் ஆவி ஒளிந்து கொண்டிருந்தது. கதிர் பட்டம் விட்டுக் கொண்டிருக்கும் போது அது மின்னல் வேகத்தில் வந்து அந்த பட்டத்தில் ஒட்டிக்கொண்டுவிட்டது. அது பட்டத்தில் ஒட்டிக் கொண்ட உடனே அந்தப் பட்டத்தில் அதன் முகம் பொதிந்த ஒரு உருவம் வெளிவர ஆரம்பித்தது. ஆனால் அது யார் கண்களுக்கும் தென்படவில்லை.

கதிரும் அதை கவனிக்கவில்லை. அந்த பட்டத்தினைப் பின்தொடர்ந்து ஓடினான். அது கிழக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது. அது போன திசையிலேயே கதிரும் வேகமாக ஓடினான்.

தாத்தா துரையும் கவனித்துவிட்டார். ஆனால் பேய்முகத்தைக் கவனிக்கவில்லை. எதாவது விபரிதமாகிவிடுமோ என்ற பயம் அவரையும் தொற்றிக் கொண்டுவிட்டது.

"டேய் நில்லுடா, பட்டம் போனாப் போகுது. தாத்தா உனக்கு புதுசா ஒன்னு செஞ்சுத் தாரேன்" என்றபடியே பின்தொடர்ந்து ஓடினார். ஆனாலும் அவனது வேகத்திற்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

கதிர் பேய்வேகத்தில் பட்டத்தைத் துரத்திக் கொண்டு ஓடினான்…

கதிர் வெகுதொலைவு ஓடி வந்துவிட்டான். சில எல்லை வரை சிமெண்டால் ரோடு போட்டிருந்தனர். அதற்கு அப்பால் கரடுமுரடான் கற்கள் தான். கதிருக்கு பயங்கரமாக மூச்சு வாங்கியது. அங்கேயே நின்றுவிட்டான். அந்த பட்டம் இப்பொழுது மிக மெதுவாகப் பறந்தது.

அந்த பட்டத்தில் உள்ள முகத்தின் கண்கள் மிகப் பெரியதாக, அகண்ட கண்களாக இருந்தது. பார்க்கவே பயங்கரமாக இருந்தது. கோரைப் பற்கள் பார்க்க கொடூரமாக இருந்தது. அது தன் காரியத்தில் பாதி வெற்றி அடைந்துவிட்டோம் என்று மெல்லியதாக சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டது.

கதிர் தன் வேகத்தை சற்று குறைத்துக் கொண்டே அந்த பட்டத்தின் பின்னால் ஓடினான்.

கதிர் வானத்தை நோக்கி அண்ணார்ந்து பார்த்தான். அந்த பட்டம் மெதுவாக கைக்கெட்டும் தூராத்தில் மெதுவாகப் பறந்து சென்றது.அதன் முகத்தில் தான் வெற்றிப் பெற்று விட்டோம் என்று ஒரு பேய்ச்சிரிப்பு சிரித்தது.

இந்த எல்லையை தாண்டிச் செல்லவேண்டாம். அபாயமான இடம் என்று சிவப்பு நிறத்தில் பெரிய எழுத்தில் ஒரு போர்டு வைக்கப் பட்டிருந்தது. ஆனால் அதை கதிர் கவனிக்கவில்லை.

அந்த சிமெண்ட் பாதையைக் கடந்து கரடுமுரடான பகுதிக்குள் அவன் கால் எடுத்து வைத்தான். அந்த பட்டம் அதைப் பார்த்து மீண்டும் சிரித்தது.

அப்படியே சிறிதுதூரம் ஓட்டமும் நடையுமாக அவனையும் அறியாமல் அந்த பட்டத்தின் பின்னாலேயே போனான்.

சிறிது தூரம் சென்றிருப்பான். அப்பொழுது தான் அவனுக்கு அவனது கால்கள் "டேய், எனக்கு கொஞ்சம் ரெஸ்ட்டுக் கொடுடா என கெஞ்சுவது புரிந்தது. அவனது உடல் முழுவதும் வியர்த்து வடிந்தது. ஆடைகள் ஈரத்தால் நனைந்திருந்தது. கால்கள் ஓட மறுத்தன.
அங்கேயே நின்று விட்டான்.

தில் தில் திகில்…5

திரும்ப வருவேன் பயமுறுத்த… 5
இப்பெல்லாம் எண்னுடைய நண்பர்கள் பல பேர் பேசாம நானும் அவனை போல லவ் பன்னீர்கலாம் போல என்று ரொம்ப பீல்பண்ணி என்னிடம் சொல்வது உண்டு. இப்போது பெண் கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பு மென்பொருள் வல்லுனர்களை தேடி அலைந்த பெண் வீட்டினர் இப்போது கட்டிட பொரியாளர் மற்றும் மெக்கானிக்கல் பொரியாளர்கள் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எது எப்படியோ அவர் அவருக்கென்று என்ன இருக்கிறதோ அது தான்... சரி விஷயத்துக்கு வருவோம்...


பேசாம நானும் லவ் பன்னீர்க்கலாம் என்று நினைப்பவரா நீங்கள் முதலில் காதல்னா என்ன என்று இங்கே தெரிஞ்சுக்கலாம்

காதல்னா என்னானு தெரியும் எப்படி பெண்களை மடக்குவதுனுதானே கேட்குறீங்க??? அதுக்கு பிகர் கரெக்ட் பண்ண இங்கேயும் பெண்கள் மனசை கவர்வது எப்படினு இங்கேயும் தெரிஞ்சுக்கலாம்

சரி பெண்களின் மனசை கவர்ந்து மடக்கியாச்சுப்பா நாளைக்கு ஐ லவ் யூ சொல்லம்னு இருக்கேன் அப்படினு கேட்கிறீக்களா இதை படிச்சுட்டு போங்க

ஐ லவ் யூ எல்லாம் சொல்லாம நான் லெட்டர் மூலமா சொல்லான்னு இருகேனுங்கிறீங்களா அப்படினா இதை படிங்க

அப்படியே ஒரு காதல் கவிதை இருந்தா நல்ல இருக்குமுன்னு நினக்கிறேங்களா??? அப்படினா இதை எழுதுங்க

இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன் அடுத்த பதிவில் பொண்ணு பார்க்க போவதிலிருந்து மணைவியை கவர்வது பற்றி வரை கல்யாண கலெக்சன்ஸ்ல் பார்ப்போம்...
எத்தனைமுறை விலக்கினாலும்
திரும்பத் திரும்பத் புரண்டு
மேலே கால் தூக்கிப்போடும்
குழந்தையாய் நினைவுகள்

_________________________________


எப்போதாவது
பிடித்திருக்கிறது
உனக்கும் எனக்குமான
உலகத்தில்
மற்றவர்களை

_________________________________


அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும் கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது

_________________________________

படிக்க:

கதையின் முடிவு என்ன? சொல்லுங்கள்!


http://raviaditya.blogspot.com/feeds/posts/default

Rajinikanth speech video in 

Ajith's Asal 

movie launch

ரஜினி விடியோ பேச்சு அசல் அஜீத் பட தொவக்க விழா


கருத்துகள் இல்லை: